Wednesday 5 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவோம் பாகிஸ்தானை சேர்ந்த தலீபான் தீவிரவாதிகள் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்


பாகிஸ்தானை சேர்ந்த தலீபான் தீவிரவாதிகள் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி, நவம்பர், 06-11-2014,
இந்தியா-பாகிஸ்தான் இடையில் உள்ள வாகா எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 61 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் ஜமாத் அரார் என்ற இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
மோடிக்கு மிரட்டல்
இவர்களுக்கு அல்- கொய்தா இயக்கத்துடனும் தொடர்பு உள்ளது. தலீபான்களைப் போல இல்லாமல், பாகிஸ்தானை தாண்டி, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் குறிவைத்து அந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாகா எல்லை தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் ஜமாத் அரார் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்தித்தொடர்பாளர் எசானுல்லா எசான், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது:
                                                                                                       மேலும், . . . . 

மத்திய மந்திரி சபை அடுத்த வாரம் விரிவாக்கம் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரி ஆகிறார்

புதுடெல்லி, நவம்பர், 06-11-2014,
அடுத்த வாரம் மத்திய மந்திரி சபையை விரிவு படுத்த பிரதமர் மோடி முடிவு செய்து உள்ளார். கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவு செய்ய முடிவு
தற்போதுள்ள மத்திய மந்திரிகளில் அருண்ஜெட்லி உள்ளிட்ட ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாகளின் பொறுப்புகளை கவனித்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளது. இதேபோல் கட்சியின் முக்கியத் தலைவர்களில் சிலர் எந்த பதவியும் இன்றி உள்ளனர்.
இதையடுத்து மத்திய மந்திரி சபையை விரிவுபடுத்துவது என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து இருப்பதாக டெல்லியில் உயர் மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
                                                                                                               மேலும், . . . . 

ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை தமிழ்மாநில காங்கிரஸ் பெயர் வைப்பதில் சிக்கல் தீர்ந்தது

சென்னை, நவம்பர், 06-11-2014,
புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ஜி.கே.வாசன் நிர்வாகிகள், தொண்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்மாநில காங்கிரஸ் பெயரை பயன்படுத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், முறைப்படி வருகிற 24-ந் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தெரிவிப்போம் என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
புதிய கட்சி
காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் புதிய கட்சி ஒன்றை தொடங்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனி கட்சி தொடங்க இருப்பதையொட்டி அவருக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
                                                                                                              மேலும், . . . . . 

சென்னை அண்ணா நகரில் டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளையில் துப்பு துலங்கியது வேலைக்கார பெண் சிக்கினார்

சென்னை, நவம்பர், 06-11-2014,
சென்னை அண்ணாநகரில், டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பற்றிய அடையாளம் தெரிந்தது. வேலைக்கார பெண் மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.
அண்ணாநகரில், துணிகர கொள்ளை
சென்னை அண்ணாநகர் 15-வது தெருவில் வசித்து வரும் டாக்டர் ஆனந்தன் (வயது 61), அவருடைய மனைவி சாந்தி (53), மாமியார் ஆண்டம்மாள் (81) ஆகியோரை துப்பாக்கிமுனையில் கட்டிப்போடு நேற்று முன்தினம் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதில் ரூ.3 லட்சம் பணமும், 75 பவுன் நகைகளும் கொள்ளை போனதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. ஆனால் ஆனந்தன் வீட்டில் இருந்து ரூ.4 லட்சம் பணமும், 119 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருப்பது போலீசார் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சந்தேகத்தின் பேரில் கொல்கத்தாவை சேர்ந்த வீட்டு வேலைக்கார பெண் மீனாவை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக மீனா செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் அவருடைய கணவர் இம்ரான், கூட்டாளிகள் சபீர் உள்பட 3 பேர் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
வேலைக்கார பெண் சிக்கினார்
இதுதொடர்பாக பரப்பான தகவல் வருமாறு:-
                                                                                                           மேலும், . . . . . 

No comments:

Post a Comment