Sunday 30 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல்துறை சிறந்து விளங்கவேண்டும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

கவுகாத்தி, டிசம்பர், 01-12-2014,
புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல் துறை மிகவும் வலிமையாக செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அசாமின் கவுகாத்தி நகரில் 49-வது போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தகவல்களை திரட்டவேண்டும்
நாட்டின் பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. நம்மிடம் எவ்வளவு ஆயுதங்கள் இருக்கிறது, அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் சார்ந்ததாக இருக்கக் கூடாது. புலனாய்வு தகவல்களை திரட்டித் தருவதில்தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது.
ஆயுதங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோர், அதன் பயன்பாடு போன்றவற்றை விட புலனாய்வு தகவல்களை சேகரிப்பதுதான் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும்.
                                                                                                மேலும், . . .  . .

பா.ஜனதா தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றோரின் கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம் கூட மோடியிடம் இல்லை வைகோ பரபரப்பு பேட்டி

நாகர்கோவில், டிசம்பர், 01-12-2014,
பா.ஜனதா தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றவர்களின் கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம் கூட மோடியிடம் இல்லை என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று குமரி மாவட்டம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நியாயப்படுத்துகிறாரா?
கடந்த 27-ந் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான விமர்சனம். அந்த விமர்சனத்தை நான் தொடர்ந்து செய்வேன். காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னொரு நாட்டில் நடைபெறும் தேர்தலில் இன்னார் வெற்றி பெற வேண்டும் என்று நமது நாட்டின் எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இப்படி வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி அவர். சுப்பிரமணியசுவாமி,
                                                                                                              மேலும், . . . .  . 

முதலாளித்துவம் பற்றி ஸ்டாலின் பேசலாமா? குடும்பத்தினர் தொழில்களை பட்டியலிட்டு சாமி பதிலடி

புதுடில்லி, டிசம்பர், 01-12-2014,
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி எல்லாம் பேச, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் கிடையாது; காரணம், அவருக்கு, பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது, என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:
                                                                                                    மேலும், . .  . . 

புதுக்கோட்டை அருகே தனியார் வங்கி லாக்கரை உடைத்து 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை போலீசாரை கண்டதும் நகை மூட்டையை போட்டு விட்டு கொள்ளையன் ஓட்டம்


புதுக்கோட்டை, டிசம்பர், 01-12-2014,
தனியார் வங்கி லாக்கரை உடைத்து 35 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து மூட்டையில் அள்ளிச் சென்ற கொள்ளையன் போலீசாரை பார்த்ததும் நகை மூட்டையை போட்டு விட்டு தப்பியோடினான்.
சாக்கு மூட்டை
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கீரனூரை அடுத்துள்ள குளத்தூரில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் வங்கியை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். தினமும் இரவு நேரத்தில் இந்த வங்கியை போலீசார் கண்காணிப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் போலீசார் வங்கி பகுதியில் ரோந்து சென்றனர்.
                                                                                                மேலும், . .  . . 

No comments:

Post a Comment