Tuesday 31 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

வலிமை, வளமிக்க தமிழகத்தை படைக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து


சென்னை, ஜனவரி, 01-01-2014,
வலிமை புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
                                                                                                  மேலும், . . . 

ஆங்கில புத்தாண்டு பிறப்பு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஜனவரி, 01-01-2014,
ஆங்கில புத்தாண்டு இன்று (புதன்கிழமை) பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

                                                                                      மேலும், . . . .


பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் தர்ணா போராட்டம் தலையாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்


நெல்லை, ஜனவரி, 01-01-2014,
வருவாய்த்துறையில் பணியாற்றும் தலையாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு கிராமநிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம ஊழியர் சங்கம் ஆகியவற்றை சங்கங்களை சேர்ந்த கிராமட நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                                                                                                            மேலும், . . . . 

Monday 30 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2013) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை


சென்னை, டிசம்பர், 31-12-2013,
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2013–ம் ஆண்டு இன்றோடு (செவ்வாய்க்கிழமை) விடைபெறுகிறது. 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது சென்னை நகர வீதிகளில் இளைஞர்களின் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லைமீறி போகாமல் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது தொடர்பாக போலீசார் விதிமுறைகளை வகுத்துகொடுத்துள்ளனர். ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளனர்.
18 ஆயிரம் போலீசார் குவிப்பு
இன்று நள்ளிரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். 5 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள் மற்றும் 21 துணை கமிஷனர்கள் தலைமையில் சென்னை நகர் வீதிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும். வாகன சோதனைகளும் தீவிரமாக நடத்தப்படும்.
பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

                                                                                                                 மேலும், . . . 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மெரினா–எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, டிசம்பர், 31-12-2013,
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மெரினா–எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புத்தாண்டு கொண்டாட்டம்
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு, தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்டவாறு விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

                                                                                                                             மேலும், . . . 

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 106 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடன் உதவி ஜெயலலிதா வழங்கினார்

சென்னை, டிசம்பர், 31-12-2013,
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் தாட்கோ திட்டங்கள் மூலம் 106 பயனாளிகளுக்கு 6 கோடி ரூபாய்க்கான கடன் உதவி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்கள்.
கடந்த ஆண்டு தொடக்கம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு துவக்கியது. இந்த திட்டம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை இலக்காகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு பெருந்தொழில் வர்த்தகர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி பெறவும், வணிகத் திட்டங்களை வகுக்கவும், நிதி நிறுவனங்களோடு புதிய தொழில் தொடங்க ஆயத்தம் செய்யவும் உதவுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியமும், மூன்று சதவீத வட்டிக்குறைப்புடன் கூடிய கடனும் வழங்கப்படுகிறது. பயனாளிகளில் 50 சதவீதம் பெண்களாக இருப்பார்கள்.

                                                                                                                மேலும், . . . 

Sunday 29 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2013) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

‘விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ நரேந்திர மோடி குற்றச்சாட்டு
ராஞ்சி, டிசம்பர், 30-12-2013,
விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ராகுல் மீது தாக்கு
4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்–மந்திரிகளின் கூட்டத்தை சமீபத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் முதல்–மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்க உத்தரவிட்டார். ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததை குறைகூறினார்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியின் குரல் அசரீரியாக வந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கினார்.
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:–                       மேலும், . . . .

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரம் விசாரணை அறிக்கை மறு பரிசீலனையால் உள்துறை மந்திரி ஷிண்டேவுக்கு நெருக்கடி
புதுடெல்லி, டிசம்பர், 30-12-2013,
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விசாரணை அறிக்கையை மராட்டிய அரசு மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில், மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
நிராகரிப்பு
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் பற்றிய விசாரணை அறிக்கையில் முன்னாள் முதல்–மந்திரிகள் அசோக் சவான், மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், தற்போது மத்திய உள்துறை மந்திரியாக இருக்கும் சுசில்குமார் ஷிண்டே, சிவாஜிராவ் நிலங்கேகர் பட்டேல் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த அறிக்கையை மராட்டிய மாநில காங்கிரஸ்–தேசியவாத கூட்டணி அரசு நிராகரித்தது.                                         மேலும், . . . .

சென்னை மியூசியத்தில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால தங்க நாணயங்கள், சிலைகள் தப்பின
சென்னை, டிசம்பர், 30-12-2013,
சென்னை எழும்பூர் மியூசியத்தில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களும், அபூர்வ சிலைகளும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி உள்ளது.
துணிகர கொள்ளை
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள மியூசியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 2–வது முறையாக கொள்ளையர்கள் புகுந்து விட்டனர். ஏற்கனவே மியூசியத்தில் புகுந்து வானத்தில் இருந்து விழுந்த அரியவகை எரிகற்களை திருடி விட்டனர். பலத்த பாதுகாப்பு வளையத்தில் உள்ள மியூசியத்தில் இருக்கும், படிமகலை கூடத்தில் 2–வது முறையாக கொள்ளையர்கள் புகுந்திருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.                                                                 மேலும், . . . .

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-12-2013) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பிரதமரிடம் சொல்லியும் பயனில்லை 22 மீனவர்கள் இலங்கை சிறை பிடித்தது
புதுக்கோட்டை, டிசம்பர், 29-12-2013,
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதாகவும், இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாகவும் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அடுத்த மறுநாளே 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் கோட்டைப்பட்டனத்தை சேர்ந்தவர்கள் 19 பேர் 5 விசைப்படகுகள், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்3 பேர், ஒரு விசைப்படகு. மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பி கொண்டிருந்தனர்.
                                                                                           மேலும், . . . . . 

35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7.16 கோடி மதிப்பில் ஆய்வகங்கள் அமைக்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை, டிசம்பர், 29-12-2013,
இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஊக்குவிப்பதற்காக 7 கோடியே 16 லட்சத்து மதிப்பில், 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்கள் அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
                                                                                             மேலும், . . . .

சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வரர்
வாஷிங்டன், டிசம்பர், 29-12-2013,
பங்குத்தொழிலில் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துகளையும் தர்மம் செய்துவிட்டு தனது 87-வது வயதில் ஒரு அமெரிக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன் தன்னிடம் மிச்சமிருந்த 100 மில்லியன் டாலர் சொத்துகளையும் லாப நோக்கில்லாமல் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் குறித்து ஆலோசனைகள் அளித்துவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்திற்கு அளிப்பதாக எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் 16-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
                                                                                                                                            மேலும் , . . 

Saturday 28 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (28-12-2013) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார் டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு
புதுடில்லி, டிசம்பர், 28-12-2013,
டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது.
தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
                                                                                                                        மேலும், . . . . . 

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தீ குழந்தைகள் உள்பட 23 பேர் பலி
ஐதராபாத், டிசம்பர், 28-12-2013,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மராட்டிய மாநிலம் நந்தெத் நகருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
இன்று அதிகாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தர்மா வரம் பென்னுகொண்டா இடையே கொத்தசேரவு ரெயில் நிலையம் வரும் போது திடீரென ஏ.சி. பெட்டியில் தீ பிடித்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பிடித்தது யாருக்கும் தெரியவில்லை.
ஏசி. பெட்டிக்குள் புகை பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகே பயணிகளுக்கு ரெயிலில் தீ பிடித்து இருப்பது தெரிய வந்தது. ஏ.சி. பெட்டியில் இருந்த பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள்.உடனடியாக ரெயில்நிறுத்த்பட்டது பயணிகள் அனைவரும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

                                                                                                                        மேலும், . . . .  

கூடங்குளம் பகுதியில் ரூ.68.10 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம்-ஜெயலலிதா உத்தரவு

சென்னை, டிசம்பர், 28-12-2013,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடி யிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கூடங்குளம் அணுமின்
                                                                                       மேலும், . . . . 



Friday 27 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2013) மாலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

புத்தாண்டு விழாவில் மதுவிருந்து, நடனத்துக்கு கட்டுப்பாடு குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை
சென்னை, டிசம்பர், 27–12-2013,
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்ட தொடங்கி உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அதேபோல் புத்தாண்டு தினத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி செல்வதால் விபத்துக்களும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இதனை கட்டுப்படுத்துவதற்கும், நட்சத்திர ஓட்டல்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.              
                                                                                                         மேலும், . . . .
வெளிநாட்டில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.19 கோடி வந்தது எப்படி?: மத்திய உள்துறை விசாரணை
புதுடெல்லி, டிசம்பர், 27–12-2013,
பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரேயுடன் 2011 முதல் இணைந்து ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத் தியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அன்னா ஹசாரேயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா’’ அமைப்பில் இருந்து விலகினார். பிறகு அவர் கடந்த ஆண்டு (2012) நவம்பர் மாதம் 26–ந்தேதி ஆம்ஆத்மி கட்சி (சாதாரண மனிதர்களின் கட்சி)யைத் தொடங்கினார்.
ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. என்றாலும் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர கவனம் செலுத்தினார். அவரது கட்சிக்கு தேர்தலில் 70 இடங்களில் 28 இடங்களே கிடைத்தன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சியை அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
                                                                                                                                      மேலும், . . . 

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் ரஞ்சிதாவுக்கு இன்று தீட்சை வழங்கல்
பெங்களூரூ, டிசம்பர், 27–12-2013,
பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.
                                                                               மேலும், . . . .

Wednesday 25 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் நெஞ்சை அதிரவைக்கும் தகவல்
ஜகர்த்தா, டிசம்பர், 26–
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.
அந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணாம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
                                                                                                                                        மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதியில் அறிவிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 26–
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2014) மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
5 அல்லது 6 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தல் நடவடிக்கைக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் (2 மாதம்) தேவைப்படும்.
அதன்படி பார்த்தால் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும். எனவே பிப்ரவரி மாதம் 27 அல்லது 28–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                                              மேலும், . . . .

பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ம.க. கடும் எதிர்ப்பு
சென்னை, டிசம்பர், 26–
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க. இடம் பெறுவது தொடர்பான பூர்வாங்க பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. இரு கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த அணியில் தே.மு.தி.க வையும் சேர்த்தால் கூட்டணி வலுவாக இருக்கும் என்ற பா.ஜனதா நினைக்கிறது.
இந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இது தொடர்பாக தே.மு.தி.க தலைமையுடனும் பேசி வருகிறார்.                                     மேலும், . . . . . .

Tuesday 24 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்


கிறிஸ்துமஸ் பெயர் சூட்டியது யார்?
ஆசியாவிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலில் ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்னும் இடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்த டிசம்பர் 25ம் நாள் பற்றிய விபரம், கி.பி.154ல், திருத்தந்தை ஜுலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமசை பிரெஞ்சு மொழியில், "நோயல்' ஜெர்மனியில், "வெய்நேக்ஷன்' ஸ்பெயினில் "நேவிடட்' , ஸ்காட்லாந்தில்," யூல்' , இத்தாலியில், "நாடோல்லே' என்று அழைப்பர். அமெரிக்காவைச் சேர்ந்த "டே' என்ற பெண்மணி தான், இயேசு பிறந்தநாளுக்கு "கிறிஸ்துமஸ்' என்று பெயர் சூட்டினார்.
1700 மொழிகளில் பைபிள்
பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே "பைபிள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் "வேதாகமம்' என்பர். "பிப்லியா' என்றால் "புத்தகம்' அல்லது "பத்திரம்' என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை.

                                                                                                           மேலும், . . . . .
இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு எல்லை கட்டுப்பாடுக்கோட்டை மீறுவது இல்லை என்று உறுதி
வாகா, டிசம்பர், 25-12-2013,
இந்தியா–பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 14 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ‘எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டை மீறுவதில்லை’ என்று உறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தான் வாலாட்டம்
இந்திய எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவது, அந்த நாட்டு படையினர் நமது ராணுவ முகாம் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வந்தது.                                                                       மேலும், . . . .

அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களை கொண்டது கருணாநிதி அறிக்கை

சென்னை, டிசம்பர், 25-12-2013,
அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களை கொண்டது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
                                                                                                                                  மேலும், . . . .

Monday 23 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம், தீரன் சின்னமலைக்கு நினைவு சின்னம் ஜெயலலிதா திறந்து வைத்தார்


சென்னை, டிசம்பர், 24-12-2013,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாவீரர் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போர் செய்த பெருமைக்குரியவர். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்த ஒரு சின்னமலை என்று புகழப்பட்டவர். தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் 1995ஆம் ஆண்டு தீரன் சின்னமலை அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவ்விழாவில் அவரது வாரிசுகள் கெளரவிக்கப்பட்டனர்.


ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான, ஆடி மாதம் 18ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்கள். மேலும், தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 30 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தை 2006ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள்.
சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலை வளாகம் மற்றும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை ஆகியவற்றை 17.4.2013 அன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
                                                                                            மேலும், . . . . . .



நெல்லை, டிசம்பர், 24-12-2013,
பிளஸ்–1 மாணவியை கர்ப்பமாக்கிய கிறிஸ்தவ பாதிரியாரை இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து, பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் உத்தரவிட்டார்.
பிளஸ்–1 மாணவி கர்ப்பம்
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர், ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் (வயது 34). நெல்லை பேட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்தார்.
ஆலயத்துக்கு வந்த ஒரு பிளஸ்–1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, பாதிரியார் செல்வன் கற்பழித்ததாகவும், பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
5 மாத கர்ப்பிணியாக அந்த மாணவி இருந்த போது, பெண் டாக்டர் ஒருவர் மூலம் ஆபரேஷன் செய்து சிசுவை அகற்றி, பேட்டை அருகே உள்ள ஒரு குளத்தில் புதைத்துவிட்டனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், போலீசாரால் தேடப்பட்ட பாதிரியார் செல்வன் கோர்ட்டில் சரண் அடைந்தார். மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். புதைக்கப்பட்ட சிசு தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
                                                                                              மேலும், . . . . . . 

தென்காசியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தீர்மானம்


தென்காசி, டிசம்பர், 24-12-2013,
“தென்காசியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்“ என்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில கூட்டம்
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், குற்றாலம் கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலளர் ராஜ தேவேந்திரர் தலைமை தாங்கினார்.

மாநில அமைப்பு செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், சட்டக்குழு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சாமி வரவேற்றுப் பேசினார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் சகோதரி பார்வதி சண்முகசாமி, நிர்வாகிகள் சந்திரன், சிவசுப்பிரமணியம், சங்கரகுமார், பத்மநாபன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

                                                                                                                           மேலும், . . . . 

Sunday 22 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கெஜ்ரிவால் முதல்–மந்திரி ஆகிறார் இன்று கவர்னரை சந்திக்க முடிவு
டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.
புதுடெல்லி, டிசம்பர், 23-12-2013
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரில் முன்னணி பங்கு வகித்தார்.
பெரும்பான்மை இல்லை
அவருடைய தலைமையில் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. முதல் தேர்தலிலேயே, அந்த கட்சி பெற்ற அதிரடி வெற்றி, நாட்டு மக்களை திரும்பிப்பார்க்க வைத்தது. என்றாலும், மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 31 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜனதா கட்சி முதல் இடத்தைப் பிடித்தது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 2–வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி, 8 இடங்களுடன் 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெரும்பான்மை பலம் இல்லாததால் பா.ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.
                                                                          மேலும், . . . . . . 

மும்பையில் பா.ஜனதா பிரமாண்ட பொதுக்கூட்டம் ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் ராகுல்காந்தி மீது நரேந்திரமோடி தாக்கு
மும்பை, டிசம்பர், 23-12-2013,
ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் என்று ராகுல்காந்தி மீது மும்பையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கி பேசினார்.
பொதுக்கூட்டம்
மும்பையில் நேற்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக இதில் கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்களுக்காக 35 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதேபோல டீ விற்பனையாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களுக்கும் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

                                                                               மேலும், . . . . . . 

இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் நம்பிக்கை
புதுடெல்லி, டிசம்பர், 23-12-2013,
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி சல்மான்குர்ஷித் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவில் இந்திய துணைத்தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா மோசடி வழக்கில் கடந்த வாரம் நியூயார்க் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டு திரும்பும்போது வழிமறித்த போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் தேவயானி ரூ.1 1/2 கோடி ஜாமீன் தொகையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவை கடுமையாக சாடின. இந்த விஷயத்தில், மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீது போடப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் ஆகிய இந்தியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

                                                                                       மேலும், . . . . .




Saturday 21 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் ராஜினாமா கட்சிப்பணிக்காக, மேலும் சில மந்திரிகளும் விலகுகிறார்கள்
புதுடெல்லி, டிசம்பர், 22-12-2013,
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
அடுத்த ஆண்டு (2014) தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டது.
ஜெயந்தி நடராஜன்
இதனால், பொது தேர்தலை சந்திப்பதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரிகள் சிலரின் திறமையை கட்சி வளர்ச்சிக்கு அதிக அளவில் பயன்படுத்த அவர் முடிவு செய்தார்.
                                                                மேலும், . . . . . . . . 

ரத்தக்கண்ணீர் சிந்தவைக்கும் ஊழல் ‘எல்லா மட்டத்திலும் தன்னிச்சையான அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்’ ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
புதுடெல்லி, டிசம்பர், 22-12-2013,
எல்லா மட்டத்திலும் தன்னிச்சையான அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
ஊழல், மிகப்பெரிய பிரச்சினை
டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில், வர்த்தக சபையின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் தொழில் அதிபர்கள் மத்தியில் பேசியதாவது:–
ஊழல் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஏற்கனவே பிரச்சினைகளால் அல்லலுறுகிற மக்களை மேலும் ரத்தக்கண்ணீர் சிந்த வைக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலை ஒடுக்குவதற்கும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் உறுதி பூண்டுள்ளது.
                                                                                      மேலும், . . . . . 

மங்களூரில் மருத்துவ கல்லூரி மாணவன்–மாணவியை நிர்வாண படம் எடுத்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் 8 பேர் கைது
மங்களூர், டிசம்பர், 22-12-2013,
மருத்துவ கல்லூரி மாணவன்–மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ படம் எடுத்த கும்பல், படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியது. இதுதொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலைபோலீசார் ‘பொறி’ வைத்து பிடித்தனர்.
மங்களூரில் இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறி உள்ளது.
மருத்துவ கல்லூரி
கேரளாவை சேர்ந்தவர் முகமது(வயது 21. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மங்களூர் அருகே தேரளகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் முகமதுவுடன் ஒரே வகுப்பில் படிப்பவர் அப்சரா(21 வயது. பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோணஜே போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

                                                                                         மேலும், . . . . . . .


Friday 20 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

 இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதம் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுப்பு வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்ட அறிவிப்பு
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
வாஷிங்டன், டிசம்பர், 21-12-2013,
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவயானிக்கு அவமரியாதை
வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் போலீசார் அவமரியாதை செய்தனர்.
                                                                                        மேலும், . . . . . . 

வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியா பற்றிய கனவை நனவாக்கும் தொழில்நுட்பங்கள் தேவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

சென்னை, டிசம்பர், 21-12-2013,
வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியா பற்றிய கனவை நனவாக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள்தான் தற்போதைய தேவையாக உள்ளன என்று பொறியாளர் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

இந்திய பொறியாளர் நிறுவனம்
சென்னையில் 28–வது இந்திய பொறியியல் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குத்துவிளக்கு ஏற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
                                                                                                                 மேலும், . . . . 

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா அதிரடி சோதனை வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்துகள் சேர்த்தது கண்டுபிடிப்பு
பெங்களூர், டிசம்பர், 21-12-2013,
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதிரடி சோதனை
கர்நாடகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் பணியை லோக் அயுக்தா மேற்கொண்டு வருகிறது. லோக் அயுக்தா போலீசார் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூர், பெல்லாரி, சித்ரதுர்கா, தார்வார், கார்வார், கொப்பல், மண்டியா, தும்கூர், உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலும் 32 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

                                                                                                               மேலும், . . . . . . 

Thursday 19 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,


40 தொகுதியிலும் வெற்றி பெற இலக்கு கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு அதிகாரம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை, டிசம்பர், 20-12-2013,
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றன.
அ.தி.மு.க. செயற்குழு
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நேற்று மாலை 3 மணிக்கு நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா மாலை 3.05 மணிக்கு வந்தார். அவரை, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் பழனிப்பன் உள்பட மாநில நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
                                                                                      மேலும், . . . . . . 

‘தேவயானி மீதான வழக்கை வாபஸ்பெற வேண்டும்’ அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 20-12-2013,
தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்புடன் கூறி உள்ளது.
தேவயானி கைது விவகாரம்
விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில், நியூயார்க் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்டு, ஆடை அவிழ்த்து சோதனை நடத்தி, அவமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தப் பிரச்சினையில் கடுமையான நிலையையும் எடுத்துள்ளது.
ஜான் கெர்ரி வருத்தம்
இதுகுறித்து அறிந்ததும், ஆசிய பசிபிக் நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு விமானத்தில் நாடு திரும்பும் வழியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
                                                                                மேலும், . . . . . . . 

அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? ஜெயலலிதா பேட்டி

சென்னை, டிசம்பர், 20-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:–
                                                                                                  மேலும், . . . . . . . 

Wednesday 18 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

விசா மோசடியில் சிக்கவைத்த சதி அம்பலம் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மன்மோகன்சிங் கண்டனம் துணை தூதர் தேவயானிக்கு கூடுதல் அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவு


புதுடெல்லி, டிசம்பர், 19-12-2013,
அமெரிக்காவில், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வருபவர், தேவயானி கோப்ரகடே (வயது 39).
பெண் தூதருக்கு கைவிலங்கு
அவருடைய வேலைக்காரப் பெண் சங்கீதா என்பவருக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, அமெரிக்க போலீசார் பெண் தூதர் தேவயானியை கைது செய்தனர். தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு திரும்பும்போது வீதியில் அவரை கைது செய்த போலீசார், தேவயானிக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
அத்துடன் அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதுடன், போதை வழக்கில் கைதான கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்து அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு பதிலடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
                                                                                           மேலும், . . . . . . 

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பணிந்தது பெண் தூதர் கைது விவகாரத்தில் மறு ஆய்வு செய்ய அமெரிக்கா முடிவு
வாஷிங்டன், டிசம்பர், 19-12-2013,
இந்தியப்பெண் துணை தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து, கைது நடவடிக்கை குறித்து மறு ஆய்வு செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
துணைத் தூதர்
அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றி வரும் தேவயானி கோப்ரகடே (வயது 39), விசா மோசடி செய்ததாக கடந்த 12–ந் தேதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரது ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட அமெரிக்க அதிகாரிகள், அவரை போதை அடிமைகளுடன் அடைத்து வைத்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தேவயானி கோப்ரகடே, 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்து ஜாமீன் பெற்றார்.
                                                             மேலும் , .  . .  . . . . .

வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம்
புதுடெல்லி, டிசம்பர், 19-12-2013,
வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
லோக்பால் அமைப்பு
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவின் சிறப்பம்சங்கள் வருமாறு:–
லோக்பால் சட்டத்தின்கீழ் மத்தியில் லோக்பால் அமைக்கப்படும். மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்கப்படும்.
                                                                                   மேலும், . . . . . . .

Tuesday 17 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

இந்தியப்பெண் தூதரை கைது செய்த சம்பவம் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி, டிசம்பர், 18-12-2013,
இந்தியப் பெண்தூதரை கைது செய்த சம்பவத்தில், அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் பறிக்கப்படுகின்றன.
இந்தியப்பெண் தூதர் கைது
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதரகத்தில், துணைத்தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே (வயது 39), தனது வேலைக்காரப் பெண்ணுக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவர் கடந்த 12–ந்தேதி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வரச்சென்றபோது, நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்மீதான புகாரை மறுத்தார். தொடர்ந்து அவர் 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஜாமீன் பெற்றார்.
                                                                                        மேலும், . . . . . 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு நாளை கூடுகிறது ஜெயலலிதா முன்னிலையில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னை, டிசம்பர், 18-12-2013,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
செயற்குழு–பொதுக்குழு
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.அந்த வகையில், விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன.
தி.மு.க. முடிவு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
                                                                                மேலும், . . . . . . .

டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு
புதுடெல்லி, டிசம்பர், 18-12-2013,
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
மேல்சபையில் விவாதம்
அப்போது டெல்லி மேல்சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இது என்று குறிப்பிட்டார்.
                                                                                                    மேலும், . . . . . 

Monday 16 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

ஆம் ஆத்மி இன்று அவசர ஆலோசனைகூட்டம் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்குமா?
புதுடெல்லி, டிசம்பர், 17-12-2013,
டில்லியில் ஆட்சி அமைக்கலாமா? வேண்டாமா? என ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார கமிட்டி இன்று (செவ்வாய்) அவசர ஆலோசனை நடத்துகிறது.
இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் சிசோடியா பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறுகையில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கிடைத்த பதில் குறித்து. விவாதிக்க இன்று கட்சியின் அரசியல் விவகார கமிட்டி கூட உள்ளது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தார்.
கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் கூறும்போது, "காங்கிரஸ் கட்சி அளித்துள்ள பதில்கள் குறித்து 270 மாநகராட்சி வார்டுகளிலும் மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்த உள்ளோம். மக்கள் முன் காங்கிரஸ் அளித்த பதில்கள் தெரிவிக்கப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கலாமா வேண்டாமா என்பது குறித்த மக்கள் கருத்தைக் கேட்போம்' என தெரிவித்தார்.
                                                                          மேலும், . . . .

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடுகிறது பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கப்படுகிறார்
புதுடெல்லி, டிசம்பர், 17-12-2013,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது.பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தவும், ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு பதவி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்து இருக்கிறார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து மோடியும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை இன்னும் அறிவிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு இல்லாத மிசோராம் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்தது.
                                                                                  மேலும், . . .

பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும்? தமிழருவி மணியன் பேட்டி
சென்னை, டிசம்பர், 17-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று தமிழருவி மணியன் கூறினார்.
மாற்று அணி
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகவும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் மாற்று அணி அமைய வேண்டும். நரேந்திர மோடி அலையால் தமிழகத்தில் வெறும் 3 சதவீதமாக இருந்த பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கை தற்போது 10 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
                                                                                                                    மேலும், . . . .

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை பட்டதாரி உள்பட 8 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


ஆலங்குளம், டிசம்பர், 16-12-2013,
ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
3 பேர் கொலை
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் உள்பட 4 பேரை ஒரு கும்பல் நேற்று முன்தினம் அதிகாலையில் அரிவாளால் வெட்டியது. அதன் தொடர்ச்சியாக ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம், பூராஜா ஆகியோர் ஓரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மேலும் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் என்பவரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதனால் ஆலங்குளம் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் நேரில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
                                                                          மேலும், . . . . .. . .

இந்தியப்பெண் தூதர் கைது விவகாரம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேட்டி

பரூக்காபாத், டிசம்பர், 16-12-2013,
இந்தியப் பெண் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவின் பதிலுக்காக இந்தியா காத்திருப்பதாக மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறினார்.
பெண் தூதர் கைது
வேலைக்காரப் பெண்ணுக்காக விசா மோசடி, தவறான தகவல்கள் அளித்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே (வயது 39) கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை விடச்சென்றபோது, பொது இடத்தில் அவர் கைது செய்யப்பட்டு, கை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட விதம் இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுதலையாகிவிட்டபோதிலும்கூட, இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
                                                                                                         மேலும், . . . . . . . 

சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
சென்னை, டிசம்பர், 16-12-2013,
பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தி.மு.க. பொதுக்குழு
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கருத்து கேட்பு
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
                                                                                    மேலும், . . . . . . 

Saturday 14 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரி அதிபர் உள்பட 3 பேர் படுகொலை 20 பேர் கும்பல் வெட்டிச் சாய்த்த கொடூரம்


நெல்லை, டிசம்பர், 15-12-2013,
ஆலங்குளம் அருகே கல்குவாரி அதிபர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வெட்டிச் சாய்த்தது.
நெல்லை மாவட்டத்தில்
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 47). விவசாயியான அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் காலில் அடிபட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். அவருடைய உறவினர் பூராஜா (65) வைத்தியலிங்கம் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அதேபோல் நேற்று மதியம் வைத்தியலிங்கம் வீட்டுக்கு வந்த பூராஜாவும், வைத்தியலிங்கமும் வீட்டின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். வைத்தியலிங்கத்தின் மனைவி ரெஜினா வீட்டுக்கு முன்னால் நின்று தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார்.
3 பேர் படுகொலை
அப்போது திடீரென்று வீட்டின் பின்புறத்தில் சத்தம் கேட்டு ரெஜினா ஓடிவந்தார். அங்கு அவரது கணவரும், பூராஜாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது, ஒரு கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதிக்கு தப்பி ஓடியது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, இலந்தைகுளம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். கல்குவாரியில் பிணமாக கிடந்தவர் நல்லூர் காசியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (53) என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–
                                                                                          மேலும், . . . . . .  

“கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்” தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.நேரில் விசாரணை

நெல்லை, டிசம்பர், 15-12-2013,
கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் நேரில் விசாரணை நடத்தினார்.
3 பேர் கொலை
ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. 2 கார்கள் உடைக்கப்பட்டன. ஒரு கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பக்கத்து ஊரான நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம், பூராஜா, கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் ஆகிய 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுமித் சரண் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
                                                                                                 மேலும், . . . . . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிப்பு 7 கட்டமாக ஓட்டுப்பதிவு தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

வாஷிங்டன், டிசம்பர், 15-12-2013,
தற்போதைய 15–வது பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். எனவே பாராளுமன்ற தேர்தல் தேதியை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நாட்டு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.
                                                                                          மேலும், . . . . . .

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,
மும்பையில் இரவு நேரத்தில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 7 பேர் பலி
மும்பை, டிசம்பர், 14-12-2013
மும்பையில் நேற்று இரவு 26 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தீ விபத்து
மும்பை மலபார்ஹில் அருகில் கேம்ஸ் கார்னர் பகுதியில் மவுண்ட் பிளாண்ட் என்ற 26 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் 12-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மெல்ல பரவிய தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. மேலும் 13-வது மாடிக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் அலறி அடித்தவாறு கீழே இறங்கி ஓடிவந்தனர். ஏராளமானோர் புகை மூட்டத்தால் வெளியே வரமுடியாமல் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து அபயகுரல் எழுப்பினர்.
                                                                                         மேலும், . . . . . . 

அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் நஜீவ் ஜங்கை சந்திக்கிறார் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவை எதிர்பார்க்காது என தகவல்

புதுடெல்லி, டிசம்பர், 14-12-2013
டெல்லியில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் நஜீவ் ஜங்கை சந்தித்து பேசுகிறார்.
மெஜாரிட்டி இல்லை
டெல்லி சட்டசபை தேர்தலில எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில், பா.ஜனதா கூட்டணி 32 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பா.ஜனதாவுடன் கவர்னர் நஜீவ் ஜங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போதிய மெஜாரிட்டி பலம் இல்லாததால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து, ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

                                                                                               மேலும், . . . . . . 


தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள், போலீசாருக்கு சலுகைகள் உள்பட 312 முக்கிய அறிவிப்புகள் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வெளியிட்டார்





சென்னை, டிசம்பர், 14-12-2013
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் 11-ந் தேதி தொடங்கியது.
புதிய அறிவிப்புகள்
இந்த 3 நாட்கள் மாநாட்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக கலந்து கொண்டு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாநாட்டின் நிறைவையொட்டி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக 312 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                         மேலும், . . . . . . 

Friday 13 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.க. மறுப்பு கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று நேற்று ஆளுனரை சந்தித்த பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ்வர்தன், தங்களுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என கூறினார்.

                                                              மேலும்.......

டெல்லியில் ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு பா.ஜனதா - ம.தி.மு.க. கூட்டணி உறுதியானது
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார்.

                                                                                 மேலும்.....

டெல்லியில் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு பரிசீலனை செய்வதாக ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2013,
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜனதா கூட்டணிக்கு 32 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்தன.
பா.ஜனதாவோ, ஆம் ஆத்மியோ ஆட்சி அமைக்க முன்வரவில்லை. ஆம் ஆத்மி கட்சி, ‘யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம், யாரிடமும் ஆதரவு கேட்கவும் மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’ என்று கூறியுள்ளது.

                                                                                 மேலும்,......

Wednesday 11 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,


19–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது 40 பாராளுமன்ற தொகுதிக்கும் அ.தி.மு.க. விருப்ப மனு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, டிசம்பர், 12-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் 19–ந் தேதி முதல் விருப்பமனுக்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு தயார்
‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்ற வாசகத்திற்கேற்ப 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பாராளுமன்ற தேர்தல் காய்ச்சல் இப்போதே அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டு உள்ளது. தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சியின் அபார வளர்ச்சியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பின்னடைவும் அரசியல் பார்வையாளர்களையும், அரசியல் கட்சியினரையும் சற்றே யோசிக்கவே வைத்திருக்கிறது. மாநில கட்சிகளை பொறுத்தவரையில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளை பிரதானப்படுத்தியே பிரசாரத்தை முன் எடுத்துச்செல்லும். ஏனென்றால் நடப்பது பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்.
40 தொகுதிகளிலும் வெற்றி இலக்கு
தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் வெற்றி பெற்று தேசிய அரசியலில் செல்வாக்கை செலுத்த விரும்புகிறது. அதற்கேற்றாற்போல் அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா தொண்டர்களை சந்திக்கும் போது எல்லாம் இதையே வலியுறுத்தி வருகிறார்.
ஏற்காடு தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி கொண்டாட்டத்தின் போது தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு பேசிய முதல்–அமைச்சர், ஏற்காடு தேர்தலை போலவே தொண்டர்கள் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற உழைக்க உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
மற்ற கட்சிகள்
தி.மு.க.வை பொறுத்தவரையில் தேர்தல் பற்றி முடிவு செய்ய 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறது.
பா.ம.க. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டாலும், பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ம.தி.மு.க.வும் இதே மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பாரதீய ஜனதாவை பொறுத்தவரையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று ஏற்கனவே அறிவித்து விட்டது.
ஜெயலலிதா அறிவிப்பு
இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயார் என்று அ.தி.மு.க. அறிவித்து, களத்தில் இறங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனுக்களை 19–ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் வருகிற 19–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டண தொகையை செலுத்தி அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

                                                                                             மேலும், ....