Sunday 29 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (30-12-2013) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

‘விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ நரேந்திர மோடி குற்றச்சாட்டு
ராஞ்சி, டிசம்பர், 30-12-2013,
விலைவாசியை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ராகுல் மீது தாக்கு
4 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்–மந்திரிகளின் கூட்டத்தை சமீபத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட்டினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் முதல்–மந்திரிகள் தங்கள் மாநிலங்களில் ஊழலை தடுக்கும் வகையில் லோக் அயுக்தாக்களை அமைக்க உத்தரவிட்டார். ஆதர்ஷ் ஊழல் தொடர்பான நீதி விசாரணை அறிக்கையை மராட்டிய மாநில அரசு நிராகரித்ததை குறைகூறினார்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று கலந்துகொண்டு பேசினார். ராகுல் காந்தியின் குரல் அசரீரியாக வந்து கொண்டிருப்பதாக அவர் சாடினார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கினார்.
அப்போது நரேந்திர மோடி கூறியதாவது:–                       மேலும், . . . .

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விவகாரம் விசாரணை அறிக்கை மறு பரிசீலனையால் உள்துறை மந்திரி ஷிண்டேவுக்கு நெருக்கடி
புதுடெல்லி, டிசம்பர், 30-12-2013,
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விசாரணை அறிக்கையை மராட்டிய அரசு மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில், மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
நிராகரிப்பு
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் பற்றிய விசாரணை அறிக்கையில் முன்னாள் முதல்–மந்திரிகள் அசோக் சவான், மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், தற்போது மத்திய உள்துறை மந்திரியாக இருக்கும் சுசில்குமார் ஷிண்டே, சிவாஜிராவ் நிலங்கேகர் பட்டேல் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த அறிக்கையை மராட்டிய மாநில காங்கிரஸ்–தேசியவாத கூட்டணி அரசு நிராகரித்தது.                                         மேலும், . . . .

சென்னை மியூசியத்தில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால தங்க நாணயங்கள், சிலைகள் தப்பின
சென்னை, டிசம்பர், 30-12-2013,
சென்னை எழும்பூர் மியூசியத்தில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயங்களும், அபூர்வ சிலைகளும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பி உள்ளது.
துணிகர கொள்ளை
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள மியூசியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 2–வது முறையாக கொள்ளையர்கள் புகுந்து விட்டனர். ஏற்கனவே மியூசியத்தில் புகுந்து வானத்தில் இருந்து விழுந்த அரியவகை எரிகற்களை திருடி விட்டனர். பலத்த பாதுகாப்பு வளையத்தில் உள்ள மியூசியத்தில் இருக்கும், படிமகலை கூடத்தில் 2–வது முறையாக கொள்ளையர்கள் புகுந்திருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment