Friday 20 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

 இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாதம் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுப்பு வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்ட அறிவிப்பு
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.
வாஷிங்டன், டிசம்பர், 21-12-2013,
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவயானிக்கு அவமரியாதை
வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் போலீசார் அவமரியாதை செய்தனர்.
                                                                                        மேலும், . . . . . . 

வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியா பற்றிய கனவை நனவாக்கும் தொழில்நுட்பங்கள் தேவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு

சென்னை, டிசம்பர், 21-12-2013,
வளர்ச்சியடைந்த நாடு என்ற இந்தியா பற்றிய கனவை நனவாக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள்தான் தற்போதைய தேவையாக உள்ளன என்று பொறியாளர் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

இந்திய பொறியாளர் நிறுவனம்
சென்னையில் 28–வது இந்திய பொறியியல் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குத்துவிளக்கு ஏற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
                                                                                                                 மேலும், . . . . 

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் அயுக்தா அதிரடி சோதனை வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்துகள் சேர்த்தது கண்டுபிடிப்பு
பெங்களூர், டிசம்பர், 21-12-2013,
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோக் அயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதிரடி சோதனை
கர்நாடகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் பணியை லோக் அயுக்தா மேற்கொண்டு வருகிறது. லோக் அயுக்தா போலீசார் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளில் 10 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூர், பெல்லாரி, சித்ரதுர்கா, தார்வார், கார்வார், கொப்பல், மண்டியா, தும்கூர், உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலும் 32 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.15½ கோடி சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

                                                                                                               மேலும், . . . . . . 

No comments:

Post a Comment