Monday 23 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம், தீரன் சின்னமலைக்கு நினைவு சின்னம் ஜெயலலிதா திறந்து வைத்தார்


சென்னை, டிசம்பர், 24-12-2013,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாவீரர் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போர் செய்த பெருமைக்குரியவர். சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்த ஒரு சின்னமலை என்று புகழப்பட்டவர். தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் 1995ஆம் ஆண்டு தீரன் சின்னமலை அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில், ஈரோடு மாவட்டம், காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவ்விழாவில் அவரது வாரிசுகள் கெளரவிக்கப்பட்டனர்.


ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான, ஆடி மாதம் 18ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்கள். மேலும், தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 30 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தை 2006ஆம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்கள்.
சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச்சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலை வளாகம் மற்றும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை ஆகியவற்றை 17.4.2013 அன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
                                                                                            மேலும், . . . . . .



நெல்லை, டிசம்பர், 24-12-2013,
பிளஸ்–1 மாணவியை கர்ப்பமாக்கிய கிறிஸ்தவ பாதிரியாரை இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து, பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் உத்தரவிட்டார்.
பிளஸ்–1 மாணவி கர்ப்பம்
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர், ஞானப்பிரகாசம் அந்தோணி செல்வன் (வயது 34). நெல்லை பேட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பங்களாவில் தங்கி இருந்தார்.
ஆலயத்துக்கு வந்த ஒரு பிளஸ்–1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, பாதிரியார் செல்வன் கற்பழித்ததாகவும், பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
5 மாத கர்ப்பிணியாக அந்த மாணவி இருந்த போது, பெண் டாக்டர் ஒருவர் மூலம் ஆபரேஷன் செய்து சிசுவை அகற்றி, பேட்டை அருகே உள்ள ஒரு குளத்தில் புதைத்துவிட்டனர். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், போலீசாரால் தேடப்பட்ட பாதிரியார் செல்வன் கோர்ட்டில் சரண் அடைந்தார். மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். புதைக்கப்பட்ட சிசு தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
                                                                                              மேலும், . . . . . . 

தென்காசியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தீர்மானம்


தென்காசி, டிசம்பர், 24-12-2013,
“தென்காசியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்“ என்று தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில கூட்டம்
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், குற்றாலம் கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலளர் ராஜ தேவேந்திரர் தலைமை தாங்கினார்.

மாநில அமைப்பு செயலாளர் தேவேந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், சட்டக்குழு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சாமி வரவேற்றுப் பேசினார். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் சகோதரி பார்வதி சண்முகசாமி, நிர்வாகிகள் சந்திரன், சிவசுப்பிரமணியம், சங்கரகுமார், பத்மநாபன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

                                                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment