Tuesday 17 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

இந்தியப்பெண் தூதரை கைது செய்த சம்பவம் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி, டிசம்பர், 18-12-2013,
இந்தியப் பெண்தூதரை கைது செய்த சம்பவத்தில், அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் பறிக்கப்படுகின்றன.
இந்தியப்பெண் தூதர் கைது
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதரகத்தில், துணைத்தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே (வயது 39), தனது வேலைக்காரப் பெண்ணுக்கு விசா பெற்றதில் மோசடி செய்ததாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவர் கடந்த 12–ந்தேதி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வரச்சென்றபோது, நடுரோட்டில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்மீதான புகாரை மறுத்தார். தொடர்ந்து அவர் 2½ லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.1 கோடியே 55 லட்சம்) பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்து ஜாமீன் பெற்றார்.
                                                                                        மேலும், . . . . . 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு நாளை கூடுகிறது ஜெயலலிதா முன்னிலையில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
சென்னை, டிசம்பர், 18-12-2013,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
செயற்குழு–பொதுக்குழு
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிகளும் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது வழக்கம்.அந்த வகையில், விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி வருகின்றன.
தி.மு.க. முடிவு
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 15–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
                                                                                மேலும், . . . . . . .

டெல்லி மேல்சபையில், 5 மணி நேர விவாதத்துக்கு பிறகு லோக்பால் மசோதா நிறைவேறியது பா.ஜனதா, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவு
புதுடெல்லி, டிசம்பர், 18-12-2013,
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
மேல்சபையில் விவாதம்
அப்போது டெல்லி மேல்சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட மந்திரி கபில் சிபல், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இது என்று குறிப்பிட்டார்.
                                                                                                    மேலும், . . . . . 

No comments:

Post a Comment