Monday 9 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (10-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (10-12-2013) காலை,IST- 071.30 மணி,நிலவரப்படி,

அரசியலில் இப்படியும் ஒரு திருப்பம் டெல்லியில் மறு தேர்தல் வருமா? எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை


புதுடெல்லி, டிசம்பர், 10-12-2013,
பெரும்பான்மை பலம் கிடைக்காததால், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. இதனால் அங்கு மறு தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
பெரும்பான்மை இல்லை
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங் கட்சியாக உள்ளது.
2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், 3–வது இடத்திற்குத் தள்ளப்பட்ட காங்கிரசுக்கு 8 இடங்களும் உள்ளன.
பா.ஜனதா கூட்டணி கட்சியான அகாலிதளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.
தொங்கு சட்டசபை
ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்ச தேவையான 36 எம்.எல்.ஏ.க்கள் பலம் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் டெல்லியில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலைகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி, மற்ற கட்சியினரை இழுப்பதற்காக குதிரை பேரம் நடத்துவது வழக்கம். அதற்கு மாறாக, பா.ஜனதாவோ அல்லது ஆம் ஆத்மி கட்சியோ அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
சுயேச்சையின் விபரீத ஆசை
அத்துடன் அந்த இரு கட்சிகளும் ஆட்சி அமைக்கவும் மறுத்து வருகின்றன. ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்கவும் இரு கட்சிகளும் விரும்பவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை உறுப்பினர் பா.ஜனதாவுக்கு ஆதரவு தர முன்வந்து இருக்கிறார். ஆனால், அதற்கு விலையாக துணை முதல்–மந்திரி பதவி கேட்டு தனது விபரீத ஆசையை வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பது வழக்கமாகும். ஆனால், பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி மற்றும் டெல்லி பா.ஜனதா முதல்–மந்திரி வேட்பாளரான ஹர்சவர்தன் ஆகிய இருவருமே தங்கள் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
கூட்டணி கோரிக்கை நிராகரிப்பு
அதேபோல் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றும், மக்கள் அளித்துள்ள தீர்ப்பின்படி எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் அறிவித்து இருக்கிறார். பா.ஜனதா அல்லது காங்கிரசுடன் கைகோர்க்க மாட்டோம் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் உறுதி அளித்து இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.
அதே நேரத்தில் சமூக ஆர்வலரும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பெடி, குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால், அந்த கோரிக்கையை ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

                                                                                                                   மேலும்.....

No comments:

Post a Comment