Monday 16 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (17-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

ஆம் ஆத்மி இன்று அவசர ஆலோசனைகூட்டம் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்குமா?
புதுடெல்லி, டிசம்பர், 17-12-2013,
டில்லியில் ஆட்சி அமைக்கலாமா? வேண்டாமா? என ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார கமிட்டி இன்று (செவ்வாய்) அவசர ஆலோசனை நடத்துகிறது.
இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் சிசோடியா பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறுகையில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கிடைத்த பதில் குறித்து. விவாதிக்க இன்று கட்சியின் அரசியல் விவகார கமிட்டி கூட உள்ளது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தார்.
கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் கூறும்போது, "காங்கிரஸ் கட்சி அளித்துள்ள பதில்கள் குறித்து 270 மாநகராட்சி வார்டுகளிலும் மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்த உள்ளோம். மக்கள் முன் காங்கிரஸ் அளித்த பதில்கள் தெரிவிக்கப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கலாமா வேண்டாமா என்பது குறித்த மக்கள் கருத்தைக் கேட்போம்' என தெரிவித்தார்.
                                                                          மேலும், . . . .

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடுகிறது பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கப்படுகிறார்
புதுடெல்லி, டிசம்பர், 17-12-2013,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது.பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தவும், ஜூன் 1–ந் தேதிக்குள் புதிய அரசு பதவி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்து இருக்கிறார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா கட்சி தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து மோடியும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை இன்னும் அறிவிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு இல்லாத மிசோராம் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்தது.
                                                                                  மேலும், . . .

பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும்? தமிழருவி மணியன் பேட்டி
சென்னை, டிசம்பர், 17-12-2013,
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்று தமிழருவி மணியன் கூறினார்.
மாற்று அணி
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகவும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் மாற்று அணி அமைய வேண்டும். நரேந்திர மோடி அலையால் தமிழகத்தில் வெறும் 3 சதவீதமாக இருந்த பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கை தற்போது 10 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
                                                                                                                    மேலும், . . . .

No comments:

Post a Comment