Saturday 14 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,
மும்பையில் இரவு நேரத்தில் 26 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து; 7 பேர் பலி
மும்பை, டிசம்பர், 14-12-2013
மும்பையில் நேற்று இரவு 26 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
தீ விபத்து
மும்பை மலபார்ஹில் அருகில் கேம்ஸ் கார்னர் பகுதியில் மவுண்ட் பிளாண்ட் என்ற 26 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் 12-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மெல்ல பரவிய தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. மேலும் 13-வது மாடிக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதனால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் அலறி அடித்தவாறு கீழே இறங்கி ஓடிவந்தனர். ஏராளமானோர் புகை மூட்டத்தால் வெளியே வரமுடியாமல் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து அபயகுரல் எழுப்பினர்.
                                                                                         மேலும், . . . . . . 

அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் நஜீவ் ஜங்கை சந்திக்கிறார் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவை எதிர்பார்க்காது என தகவல்

புதுடெல்லி, டிசம்பர், 14-12-2013
டெல்லியில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் நஜீவ் ஜங்கை சந்தித்து பேசுகிறார்.
மெஜாரிட்டி இல்லை
டெல்லி சட்டசபை தேர்தலில எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில், பா.ஜனதா கூட்டணி 32 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ‘ஆம் ஆத்மி’ கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பா.ஜனதாவுடன் கவர்னர் நஜீவ் ஜங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போதிய மெஜாரிட்டி பலம் இல்லாததால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து, ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

                                                                                               மேலும், . . . . . . 


தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள், போலீசாருக்கு சலுகைகள் உள்பட 312 முக்கிய அறிவிப்புகள் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வெளியிட்டார்





சென்னை, டிசம்பர், 14-12-2013
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் 11-ந் தேதி தொடங்கியது.
புதிய அறிவிப்புகள்
இந்த 3 நாட்கள் மாநாட்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக கலந்து கொண்டு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாநாட்டின் நிறைவையொட்டி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக 312 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
                                                                         மேலும், . . . . . . 

No comments:

Post a Comment