Monday 16 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை பட்டதாரி உள்பட 8 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


ஆலங்குளம், டிசம்பர், 16-12-2013,
ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
3 பேர் கொலை
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் உள்பட 4 பேரை ஒரு கும்பல் நேற்று முன்தினம் அதிகாலையில் அரிவாளால் வெட்டியது. அதன் தொடர்ச்சியாக ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் காசியாபுரத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம், பூராஜா ஆகியோர் ஓரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மேலும் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் என்பவரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதனால் ஆலங்குளம் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் நேரில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
                                                                          மேலும், . . . . .. . .

இந்தியப்பெண் தூதர் கைது விவகாரம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கிறோம் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் பேட்டி

பரூக்காபாத், டிசம்பர், 16-12-2013,
இந்தியப் பெண் தூதர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அமெரிக்காவின் பதிலுக்காக இந்தியா காத்திருப்பதாக மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறினார்.
பெண் தூதர் கைது
வேலைக்காரப் பெண்ணுக்காக விசா மோசடி, தவறான தகவல்கள் அளித்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராகப் பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே (வயது 39) கடந்த 12–ந்தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், பள்ளிக்கூடத்தில் குழந்தைகளை விடச்சென்றபோது, பொது இடத்தில் அவர் கைது செய்யப்பட்டு, கை விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட விதம் இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுதலையாகிவிட்டபோதிலும்கூட, இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலை, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
                                                                                                         மேலும், . . . . . . . 

சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
சென்னை, டிசம்பர், 16-12-2013,
பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
தி.மு.க. பொதுக்குழு
இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கருத்து கேட்பு
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
                                                                                    மேலும், . . . . . . 

No comments:

Post a Comment