Wednesday 25 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம் நெஞ்சை அதிரவைக்கும் தகவல்
ஜகர்த்தா, டிசம்பர், 26–
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.
அந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணாம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
                                                                                                                                        மேலும், . . . 

பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதியில் அறிவிப்பு
புதுடெல்லி, டிசம்பர், 26–
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2014) மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
5 அல்லது 6 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தல் நடவடிக்கைக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் (2 மாதம்) தேவைப்படும்.
அதன்படி பார்த்தால் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும். எனவே பிப்ரவரி மாதம் 27 அல்லது 28–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.                                              மேலும், . . . .

பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ம.க. கடும் எதிர்ப்பு
சென்னை, டிசம்பர், 26–
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க. இடம் பெறுவது தொடர்பான பூர்வாங்க பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. இரு கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த அணியில் தே.மு.தி.க வையும் சேர்த்தால் கூட்டணி வலுவாக இருக்கும் என்ற பா.ஜனதா நினைக்கிறது.
இந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இது தொடர்பாக தே.மு.தி.க தலைமையுடனும் பேசி வருகிறார்.                                     மேலும், . . . . . .

No comments:

Post a Comment