Thursday 5 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (06-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (06-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

நெல்லை மாவட்டம் உவரி கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த கடல் அரிப்பு பிரசித்தி பெற்ற கப்பல் மாதா கோவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் மீனவர்களுக்கு கடலுக்குள்ளும் கரையிலும் போராடும் வாழ்க்கை தூண்டில் வளைவு உடனடியாக அமைக்க கோரிக்கை


திருநெல்வெலி, டிசம்பர், 06-12-2013,

நெல்லை மாவட்டம், கடற்கரை கிராமமான உவரி கடற்கரை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கடல் அரிப்பு இருந்து வருகிறது. ஆனாலும் கடந்த சில மாதங்களாக இந்த கடல் அரிப்பு மிகவும் அதிகளவில் இருந்து வருகிறது. உவரி அந்தோணியார் கோயில் முதல் கிழக்கே கப்பல் மாதா கோயில் பகுதி வரை இந்த கடல் அரிப்பு இருக்கிறது. இதில் அந்தோணியார் கோயில் முன் கடல் அரிப்பின் பாதிப்பு மிக அதிகளவில் காணப்படுகிறது.
கோவில் அருகே கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைத்து அலையின் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.கடந்த பல மாதங்களாகவே கடல் சிறிது சிறிதாக நிலப்பகுதியை ஆக்ரமிக்க துவங்கியுள்ளது. கடல் அரிப்பு காரணமாக கடற்கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. நீளமுள்ள கடற்கரை தார்சாலை கடல் அரிப்பினால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9 தெருவிளக்கு மின்கம்பங்கள், முன்னாள் அமைச்சர் ராதிகாசெல்வி நிதியில் கட்டப்பட்ட மீனவர் வலைபின்னும் கூடம், பல்வேறு குடிசைகள் கடல் அரிப்பினால் அடித்து செல்லப்பட்டுவிட்டன. மேலும் கடல் அரிப்பு தீவிரமானால் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் சுனாமி வீடுகளும், வீடுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டு கீழே விழும் நிலை ஏற்படும்.
இதனால் மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருப்பதாக மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடி படகுகளை கரையில் நிறுத்துவதற்கும், மீன்பிடி வலைகளை காய வைப்பதற்கும், அதன் சாதனங்களை வைப்பதற்கும் கடற்கரையில் இடமில்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.

                                                                                                                        மேலும்..........

No comments:

Post a Comment