Friday 6 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (07-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (07-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாளையங்கோட்டையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, டிசம்பர், 07-12-2013,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
                                                                                                    மேலும்....


இந்து முன்னணி மறியல்: 84 பேர் கைது


திருநெல்வேலி, டிசம்பர், 07-12-2013,
திருநெல்வேலி நகரம் சந்திபிள்ளையார் கோயில் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 84 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.
மறியலுக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெட்டும்பெருமாள், மாவட்டச் செயலர்கள் வேல்ஆறுமுகம்,

                                                                                                                   மேலும் ......

No comments:

Post a Comment