Sunday 22 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-12-2013) காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கெஜ்ரிவால் முதல்–மந்திரி ஆகிறார் இன்று கவர்னரை சந்திக்க முடிவு
டெல்லியில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார்.
புதுடெல்லி, டிசம்பர், 23-12-2013
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போரில் முன்னணி பங்கு வகித்தார்.
பெரும்பான்மை இல்லை
அவருடைய தலைமையில் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. முதல் தேர்தலிலேயே, அந்த கட்சி பெற்ற அதிரடி வெற்றி, நாட்டு மக்களை திரும்பிப்பார்க்க வைத்தது. என்றாலும், மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 31 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜனதா கட்சி முதல் இடத்தைப் பிடித்தது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 2–வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி, 8 இடங்களுடன் 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெரும்பான்மை பலம் இல்லாததால் பா.ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.
                                                                          மேலும், . . . . . . 

மும்பையில் பா.ஜனதா பிரமாண்ட பொதுக்கூட்டம் ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் ராகுல்காந்தி மீது நரேந்திரமோடி தாக்கு
மும்பை, டிசம்பர், 23-12-2013,
ஊழலில் மூழ்கியவர்கள் உபதேசம் செய்கிறார்கள் என்று ராகுல்காந்தி மீது மும்பையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கி பேசினார்.
பொதுக்கூட்டம்
மும்பையில் நேற்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக இதில் கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்களுக்காக 35 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதேபோல டீ விற்பனையாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர்களுக்கும் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

                                                                               மேலும், . . . . . . 

இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் நம்பிக்கை
புதுடெல்லி, டிசம்பர், 23-12-2013,
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி சல்மான்குர்ஷித் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா மறுப்பு
அமெரிக்காவில் இந்திய துணைத்தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா மோசடி வழக்கில் கடந்த வாரம் நியூயார்க் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டு திரும்பும்போது வழிமறித்த போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் தேவயானி ரூ.1 1/2 கோடி ஜாமீன் தொகையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் அமெரிக்காவை கடுமையாக சாடின. இந்த விஷயத்தில், மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீது போடப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் ஆகிய இந்தியாவின் கோரிக்கைகளை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

                                                                                       மேலும், . . . . .




No comments:

Post a Comment