Monday 30 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2013) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,

சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை


சென்னை, டிசம்பர், 31-12-2013,
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்
2013–ம் ஆண்டு இன்றோடு (செவ்வாய்க்கிழமை) விடைபெறுகிறது. 2014 புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்போது சென்னை நகர வீதிகளில் இளைஞர்களின் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லைமீறி போகாமல் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டங்களை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது தொடர்பாக போலீசார் விதிமுறைகளை வகுத்துகொடுத்துள்ளனர். ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளனர்.
18 ஆயிரம் போலீசார் குவிப்பு
இன்று நள்ளிரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். 5 கூடுதல் கமிஷனர்கள், 7 இணை கமிஷனர்கள் மற்றும் 21 துணை கமிஷனர்கள் தலைமையில் சென்னை நகர் வீதிகள் முழுவதும் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும். வாகன சோதனைகளும் தீவிரமாக நடத்தப்படும்.
பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

                                                                                                                 மேலும், . . . 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மெரினா–எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, டிசம்பர், 31-12-2013,
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மெரினா–எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புத்தாண்டு கொண்டாட்டம்
மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு, தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்டவாறு விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

                                                                                                                             மேலும், . . . 

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 106 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி கடன் உதவி ஜெயலலிதா வழங்கினார்

சென்னை, டிசம்பர், 31-12-2013,
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் தாட்கோ திட்டங்கள் மூலம் 106 பயனாளிகளுக்கு 6 கோடி ரூபாய்க்கான கடன் உதவி ஒப்பளிப்பு ஆணைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்கள்.
கடந்த ஆண்டு தொடக்கம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த ஆண்டு துவக்கியது. இந்த திட்டம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை இலக்காகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு பெருந்தொழில் வர்த்தகர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்தவும், தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி பெறவும், வணிகத் திட்டங்களை வகுக்கவும், நிதி நிறுவனங்களோடு புதிய தொழில் தொடங்க ஆயத்தம் செய்யவும் உதவுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத 25 சதவீத முதலீட்டு மானியமும், மூன்று சதவீத வட்டிக்குறைப்புடன் கூடிய கடனும் வழங்கப்படுகிறது. பயனாளிகளில் 50 சதவீதம் பெண்களாக இருப்பார்கள்.

                                                                                                                மேலும், . . . 

No comments:

Post a Comment