Tuesday 2 June 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-06-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-06-2015) மாலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு



நகரி, மே 27–
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
                                                                                                   மேலும், . . . . . 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி



பாரதீய ஜனதா கட்சியின் இந்துதுவ கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்க்காக ஐஐடி மாணவர் வாசகர் வட்டத்திற்க்கு தடை விதித்துள்ளது கண்டனத்திற்க்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி.
                                                                                                           மேலும், . . . . 

கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை







கரூரில் அதிரவைக்கும் மணல் கொள்ளை – யாரும் குரல் கொடுக்க முன்வருவதில்லை
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி மணல் தான் தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடைபெறும் கட்டிட வேலைக்கு தேவைப்படுகிறது என்பதால் தற்போது தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டதில் தறி கட்டி மணல் கொள்ளை நடைபெறுகிறது.
                                                                                                                மேலும், . . .  .

பொன்முடி மனு மீதான தீர்ப்பு: ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு



சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு மீதான தீர்ப்பை, வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
                                                                                                            மேலும், . . . 

Monday 11 May 2015

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

எனது 58 ஆண்டுகால வக்கீல் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை’ அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பேட்டி

பெங்களூரு, செவ்வாய், மே 12, 2015,
“எனது 58 ஆண்டுகால வக்கீல் தொழிலில் இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை என்று, அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.
ஆச்சார்யா கருத்து
ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக இருந்து பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்த ஆச்சார்யா, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, மீண்டும் அரசு சிறப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு நாள் அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி ஆச்சார்யா, 18 பக்கங்கள் கொண்ட எழுத்துபூர்வ வாதத்தை கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி நேற்று வழங்கிய தீர்ப்பு குறித்து ஆச்சார்யா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை.
                                                                                                       மேலும்....

ஜெயலலிதா விடுதலை தேர்தலில் நிற்க தடை நீங்கியது மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்


 

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.
ஜெயலலிதா விடுதலை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி சரியாக காலை 11 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்க தொடங்கினார்.
அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்
அத்துடன் இந்த வழக்கில், நிறுவனங்களின் மேல்முறையீட்டில் ஒரு பகுதியை கோர்ட்டு அனுமதிப்பதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி கீழ்க்கோர்ட்டு (தனிக்கோர்ட்டு) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-
                                                                                                                   மேலும்....

நீதிபதி தீர்ப்பு முழு விவரம் ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன?


 

பெங்களூரு, செவ்வாய், மே 12, 2015,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
919 பக்க தீர்ப்பு
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.
விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
                                                                                                    மேலும்....

நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி தான் ஜெயலலிதா விடுதலை பற்றி கருணாநிதி கருத்து



சென்னை, செவ்வாய், மே 12, 2015,
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல என்றும், நீதிமன்றங்களுக்கு எல்லாம் உயர்ந்த நீதிமன்றம் மனசாட்சி தான் என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
150 முடிச்சுகள்
கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது.
கடந்த ஜனவரி 29–ந்தேதி விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார்.
                                                                                            மேலும்....

Thursday 7 May 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-05-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-05-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

பிளஸ்-2 தேர்வில் திருப்பூரை சேர்ந்த பவித்ரா, கோவையை சேர்ந்த நிவேதா 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்




சென்னை, மே, 07–05-2015,
தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 10 மணிக்கு வெளியிடப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் தேர்வுத்துறை இயக்கக தலைவர் தேவராஜன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதில் திருப்பூர், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மற்றும் கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதா ஆகிய இருவரும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அதே போல் 1190 மதிப்பெண் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யவர்ஷிணி ஆகிய 4 மாணவர்கள் மாநில அளவில் 2 -ம் இடம் பிடித்தனர்.
நாமக்கல், கிரினிட்டி அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாரதி 1189 மதிப்பெண் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார்.
                                                                                                       மேலும்....

கள்ளக்காதலால் கணவர் அபகரிப்பு தற்கொலைக்கு முயன்ற வி.ஏ.ஓ. மீது பேராசிரியை புகார்



பழனி, மே, 07–05-2015,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா தேவத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வி. மேல் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மீது பழனி ஆண்டவர் மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் ஜெ.தமிழ்ச்செல்வி என்பவர் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:–
நான் பழனி ஆண்டவர் கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது எனக்கு அளித்த பெரும்பாலான நகை மற்றும் பணத்தை எனது கணவர் அபகரித்துக்கொண்டார்.
                                                                                                      மேலும்....

கோவையில் கைதான மாவோயிஸ்டு தீவிரவாதிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை






கோவை, மே, 07–05-2015,
கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கார்த்தி என்ற கண்ணன், ஈஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் ரூபேஷ் தென்மாநில இயக்க மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.
அவர் மீது கேரளாவில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கைதான 5 பேரும் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
எனவே அவர்களை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
                                                                                                 மேலும்....

சல்மான்கான் இடைக்கால ஜாமீனை ரத்துசெய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி, மே, 07–05-2015,
இந்தி நடிகர் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டு உள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
குடிபோதையிலும், உரிமம் இல்லாமலும் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்தி ஒருவரை கொன்ற வழக்கில், இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விசாரணை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனால் அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவரது சார்பில் மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி அபய் திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சல்மான்கான் சார்பில் மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே ஆஜர் ஆனார். அவர், ‘‘தீர்ப்பின் நகல் சல்மான்கானுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதுவரையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்’’ என வாதிட்டார். ஆனால், அதை அரசு வக்கீல் சந்தீப் ஷிண்டே எதிர்த்தார். ‘‘தீர்ப்பு நகல் இன்றி, சல்மான்கான் மனுவை விசாரிக்கவே கூடாது’’ என கூறினார். இருப்பினும் நீதிபதி அபய் திப்சே, ‘‘வழக்கு விசாரணை முழுமையும் அவர் ஜாமீனில்தான் இருந்திருக்கிறார். அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவருக்கு தண்டனை தீர்ப்பின் நகல் இன்னும் வழங்கப்படவில்லை. நீதியின் நலனைக் கருத்தில் கொண்டு, உத்தரவு நகல் கிடைக்கிறவரை அவரை காக்க வேண்டியதுதான் சரியானது’’ என கூறி, 8–ந் தேதி வரை 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சல்மான் கானுக்கு வழங்கப்பட்டு உள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
                                                                                                                 மேலும்....


Sunday 26 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நேபாள நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

காட்மண்டு/புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
அழகான நேபாளம் நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்திஉள்ளது. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது.
இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 1500 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகின.
                                                                                                       மேலும்....

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமரிடம் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.
பிரதமருடன் சந்திப்பு
‘நிதி ஆயோக்’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்திருந்த தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதம் ஒன்றை பிரதமரிடம் அவர் அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
                                                                                                            மேலும்....

ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, ஏப்ரல் 26,2015,
பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பிரகாஷ் 13 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி அவரை விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
ஆபாச படம்
பிரபல மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால், ‘செக்ஸ் டாக்டர் பிரகாஷ்’ என்றால், தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த அளவுக்கு டாக்டர் பிரகாஷ் பிரபலமானவர்.
இவர், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார் என்று 2001-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரியை சேர்ந்த கணேசன் என்பவர் வடபழனியில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்து, டாக்டர் பிரகாஷ் நடத்திய ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர், வடபழனி போலீசில், தன்னை பல பெண்களுடன் கட்டாயப்படுத்தி உறவுக் கொள்ளச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக டாக்டர் பிரகாசுக்கு எதிராக புகார் செய்தார். இதுகுறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து, 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டாக்டர் பிரகாஷை கைது செய்தார்.
தம்பி மீது வழக்கு
இதையடுத்து டாக்டர் பிரகாசின் கூட்டாளிகளான சரவணன், விஜயன், நிக்சன், ஆசீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                        மேலும்....

‘2 ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்’ கருணாநிதி தாக்கு

சென்னை, ஏப்ரல் 26,2015,
2ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோனோ ரெயில்
2011-ம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த கவர்னர் உரையில் “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட “மோனோ” ரெயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தது.
அதற்கு பிறகு ஜெயலலிதா வழிகாட்டுதல் படி; 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல்-அமைச்சர், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். கண்டறிந்தார்களா? என்ன ஆயிற்று அந்தத்திட்டம்?
                                                                                                         மேலும்....

Tuesday 14 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பெயர் பட்டியலை 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு கட்டளையிட்டு இருக்கிறது

புதுடெல்லி, ஏப்ரல், 14,2015,
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 7-ந் தேதி செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை அந்த மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.
முக்கிய சாட்சிகள்
இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேரில் பார்த்த சாட்சியாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கருதப்படுகிறார்.
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு தான் பஸ்சில் சென்றபோது, ஆந்திர போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தி 7 பேரை பிடித்துச் சென்றதாகவும், பெண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் தான் தப்பியதாகவும் அவர் கூறினார். இதேபோல் பாலசந்திரன் என்பவரும் இந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியாக விளங்குகிறார். இதனால் முக்கிய சாட்சிகளான இவர்கள் இருவரையும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்து உள்ளனர்.
சாட்சியம் அளித்தனர்
இந்த நிலையில் சேகரும், உயிர் தப்பிய மற்றொரு தொழிலாளியான பாலசந்திரனும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று காலை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரும், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விவரங்களை சாட்சியமாக அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
                                                                                            மேலும்....

ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து ‘தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சி, குறையாத மகிழ்ச்சி வழங்கும் ஆண்டாக விளங்கட்டும்’


சென்னை, ஏப்ரல், 14,2015,
‘தமிழக மக்களுக்கு ஏற்ற மிகு வளர்ச்சியையும், குறையாத மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு விளங் கட்டும்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்த்து
தமிழ் புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ‘தமிழ் புத்தாண்டு’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                                               மேலும்....

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த திராவிடர் கழகத்துக்கு அனுமதி

சென்னை, ஏப்ரல், 14,2015,
தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திராவிடர் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தடையை நீக்க வேண்டும்
டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.
                                                                                                   மேலும்....

சென்னையில் பயங்கரம் பள்ளிக்கூட சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி

சென்னை, ஏப்ரல், 14,2015,
சென்னையில் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள். இன்னொரு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
250 ஆண்டு பழமையான பள்ளி
சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ள அவ்வை இல்ல தொண்டு நிறுவன பள்ளியில்தான் இந்த நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் நடந்தது. 250 ஆண்டுகள் பழமையான இந்த தொண்டு நிறுவனம் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. இங்கு செயல்படும் ராமமூர்த்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 822 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் 165 பேர் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார்கள்.
நேற்று பகல் 12.30 மணி அளவில் வழக்கம்போல பள்ளி மதிய உணவுக்கு மணி அடிக்கப்பட்டது. மாணவிகள் சிட்டாய் பறந்து பள்ளி அறையை விட்டு வெளியில் வந்தார்கள். குறிப்பாக 8-வது படிக்கும் மாணவிகள் மோனிஷா, நந்தினி, சந்தியா ஆகிய 3 பேரும் ஒன்றாய் வந்தனர். பள்ளி காம்பவுண்டு சுவரையொட்டி உள்ள கழிவறைக்கு சென்றனர்.
சுவர் இடிந்து விழுந்தது
அப்போது பள்ளியின் 8 அடி பழமையான காம்பவுண்டு சுவர் இடிந்து திடீரென்று விழுந்தது.
                                                                                        மேலும்....

Tuesday 7 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-04-2015) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்க வருகிற 15-ந்தேதி வரை சுப்ரீம் கோர்ட் தடை

புதுடெல்லி, ஏப்ரல். 07-04-2015,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது, அரசு தரப்பு வக்கீலாக ஆஜரானவர் பவானிசிங். அந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளிக்க தடையில்லை இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும், பவானிசிங்கே அரசு வக்கீலாக ஆஜரானார்.
                                                                                                    மேலும்....

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் வேளாண் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய மேலும் 8 பேர் கைதாகிறார்கள்


வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கில் மேலும் 8 பேர் கைதாவார்கள் என்று தெரிகிறது.
சென்னை, ஏப்ரல். 07-04-2015,
நெல்லை வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்த முத்துக்குமாரசாமி, ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வழக்கை சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது
அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே கேட்
                                                                                                   மேலும்.... 

தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு திருச்சி அரசு மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி அரசியல்வாதிகள் தொல்லை காரணமா?

திருச்சி, ஏப்ரல். 07-04-2015,
திருச்சி அரசு மருத்துவ அதிகாரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவ அதிகாரி
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அதிகாரியாக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் டாக்டர் நேரு. இவரது வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவந்த அவர் 2 மாதங்களுக்கு முன்பு தான் அங்கு இருந்து பணிமாறுதலில் திருச்சி வந்தார்.
                                                                                                       மேலும்....

திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்திய 20 தமிழர்கள் சுட்டுக்கொலை

திருமலை, ஏப்ரல். 07-04-2015,
தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பெரும்பாலும் செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
குறிப்பாக சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி–திருமலை வனப்பகுதியில் செம்மரங்களை ஆந்திர மாநில வனத்துறை பாதுகாத்து வருகிறது.
ஆந்திர செம்மரக்கட்டைகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளது. சீன நாட்டை சேர்ந்தவர்கள் இந்த செம்மரக்கட்டைகளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர்.
இதனால் ஆந்திர செம்மரக்கட்டைகள் ஒரு டன் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. கொஞ்சம் செம்மரக்கட்டை கடத்தி விற்றாலும் லட்சாதிபதி ஆகி விடலாம் என்பதால் திருப்பதி வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை கடத்தல்காரர்கள் போட்டி போட்டு வெட்டி கடத்துகிறார்கள்.
சமீபகாலமாக செம்மரங்களை கடத்தி வெட்டும் நடவடிக்கைகளில் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏழை தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
நிறைய பணம் கிடைப்பதால் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த
                                                                                                 மேலும்....

Thursday 2 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்பு விமானப்படை விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானப்படை விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி, ஏப்ரல், 02-04-2015,
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.
கிளர்ச்சியாளர்கள்
அவர்கள், ஏமன் நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட பெரும் பகுதியை கைப்பற்றி விட்டனர். அதனால், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டார். முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து உள்ளன.
இந்தநிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டு, அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை கொண்டு வருவதற்காக, சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதலைத் தொடங்கின.
                                                                                                       மேலும்....

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றிய பேச்சால் அவையில் அமளி தி.மு.க. வெளிநடப்பு

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
செலவு கணக்கீடு
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்களுக்கு, பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உறுப்பினர் துரைமுருகன் (தி.மு.க.), தலைமை நிதி கணக்காயரின் அறிக்கையை வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தில் சில கருத்துக்களை கூறினார். எந்த ஒரு அரசும் துல்லியமாக செலவுகளைக் கணக்கிட்டு ஒதுக்கீடு செய்து, சேமிப்பே ஏற்படாமல் முழுமையாக செலவு செய்துவிட முடியாது. எல்லா அரசு நிதி நிர்வாகத்திலும் இவ்வாறு சில இனங்களில் நிதி திரும்ப ஒப்புவிப்பு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று.
இதில் நிதி ஒதுக்கம் திரும்பப்பெறுவதால் நிர்வாகமே சீர்குலைந்து விட்டது என்று
                                                                                                             மேலும்....

புதுவையில் புதிதாக கட்டப்படும் 5 மாடி கட்டிடம் சாய்ந்தது 50 குடும்பங்கள் வெளியேற்றம்

புதுச்சேரி, ஏப்ரல், 02-04-2015,
புதுவை பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பழனிராஜா உடையார் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
தன்ராஜ் உடையார் வீதியில் 3850 சதுர அடியில் 5 மாடிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பின் தரை தளத்தில் வாகனங்களை நிறுத்த பார்கிங் வசதி அமைந்துள்ளது.
கட்டிடத்தில் பெரும் பகுதி பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் பார்கிங் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தூண்களில் ஒன்று சேத மடைந்தது. தூணை சுற்றி உள்ள சிமெண்டு பூச்சு பெருத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது.
இதனால்
                                                                                                 மேலும்....

ரசாயன மையை தடவினால் கருப்பு தாள் பணமாக மாறிவிடும் என்று கதை சென்னையில் போலியாக வெளிநாட்டு பணம் தயாரித்த கும்பல் கைது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
சென்னையில் போலி வெளிநாட்டு பணம் தயாரிப்பில் ஈடுபட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பணம் தருவதாக ஆசைகாட்டி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்தேகத்தின் பேரில் விசாரணை
சென்னை ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன் நேற்று முன்தினம் இரவு ஆவடி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள குறுகலான தெரு ஒன்றில் 4 பேர் நின்று சத்தம் போட்டு பேசி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராகவன் போலீஸ் படையுடன் சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை போட்டனர்.
                                                                                                         மேலும்....
 

Wednesday 1 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளை இடிக்க உத்தரவு 9-ந்தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறி

புதுடெல்லி, ஏப்ரல், 01-04-2015,
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக கட்டப்பட்ட 3 பார்வையாளர்கள் கேலரிகளை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 புதிய கேலரிகள்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என்ற 3 பார்வையாளர்கள் கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த 3 கேலரிகளிலும் மொத்தம் 12 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம்.
இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
                                                                                                  மேலும்....

உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு காரணம் என்ன? சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உடன்குடி அனல் மின் திட்டத்தை ரத்து செய்ததற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை
உடன்குடி அனல் மின்நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை விளக்கம் கேட்டன. விசாரணைக் கமிஷன் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அரசால் வெள்ளை அறிக்கை வைக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் கோரின.
தி.மு.க. செயல்படுத்தவில்லை
இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்து பேசியதாவது:-
                                                                                                   மேலும்....

தே.மு.தி.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் தண்டனை நீட்டிப்பு அடுத்த கூட்டத்தொடரில் 10 நாட்கள் வரை பங்கேற்க முடியாது

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி, 10 நாட்களுக்கு சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
உரிமைமீறல் பிரச்சினை
சட்டசபையில் கடந்த மாதம் நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தே.மு.தி.க. சட்டமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ் தெரிவித்த சில கருத்துக்களால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது அவைக்காவலர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை நடைபெற்று வரும் கூட்டத்தொடர் முடிய இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி இந்த கூட்டத்தொடர் முடிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் சட்டசபை உரிமைக்குழு ஆய்வுக்கு விடப்பட்டது.
                                                                                          மேலும்....

அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் - கருணாநிதி அறிக்கை

சென்னை, ஏப்ரல், 01-04-2015,
அண்ணா நூலகத்திற்கே இந்த கதியா? மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் ஜெயலலிதாவுக்கு வரும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்காலச் சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவு பூர்வமாகச் செழுமைப்படுத்திக்கொள்ள; நீண்ட காலத்திற்கு பயன்படுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் நான் நிர்மாணித்தேன்.
நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றப்போகிறேன் என்று அறிவித்தார். தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு நீதி மன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமலாகாமல் உள்ளது.
குழந்தைகள் மருத்துவமனை
அ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய உடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில்
                                                                                           மேலும்....

Friday 27 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015) காலை, IST- 08.30 மணி, நிலவரப்படி,

எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில்கள் ஓடும் என்று அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பஸ்-ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                         மேலும்....

முதுபெரும் பா.ஜனதா தலைவருக்கு மத்திய அரசு கவுரவம் 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.
புதுடெல்லி, மார்ச்.28-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.
91 வயது தலைவர்
அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.
91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்;
                                                                                                                மேலும்....
தமிழக சட்டசபை இன்று நடைபெறாது கூட்டத்தை ஒத்திவைத்து அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
இன்று நடக்க இருந்த தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலகம் வெளியிட்டது.
இன்று முழு அடைப்பு
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக்கக் கோரி தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
                                                                                          மேலும்....

தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரியின் குடும்பத்தினர் நெல்லையில் வீட்டை காலி செய்தனர் அரசியல்வாதிகள் மிரட்டலால் சென்னையில் குடியேற முடிவு

நெல்லை, மார்ச்.28-
தற்கொலை செய்துகொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் நெல்லையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். அரசியல்வாதிகள் மிரட்டி வருவதால் சென்னையில் குடியேற இருப்பதாக கூறினார்கள்.
அதிகாரி தற்கொலை
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த மாதம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
                                                                                                       மேலும்....

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (27-03-2015) காலை, IST- 10.30 மணி, நிலவரப்படி,

உன்னத மன்னருக்கு ஒர் பாரத ரத்னா வாஜ்பாய்க்கு குவியும் வாழ்த்துக்கள்

புதுடில்லி, மார்ச், 27,2015
முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இன்று பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதற்கென ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கு சென்று வழங்குகிறார். அவருடன் பிரதமர் மோடியும் செல்கிறார்.
இன்று வழங்கப்படும் பாரத ரத்னா இவரது சேவை மனப்பாண்மைக்கு கிடைத்த பரிசு என்று, இவருக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
                                                                                                     மேலும்....

கர்நாடக அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்: தமிழகத்தில் நாளை ரெயில்-சாலை மறியல் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு

சென்னை, மார்ச்.27-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து, தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) ரெயில்-சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஆதரவு?
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் விவசாயிகள், அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு, வணிகர்கள், பஸ், லாரி உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள், சேவை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று(நேற்று) சந்தித்து வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
                                                                                        மேலும்....

காவிரியில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி, மார்ச்.27-
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத் தின் சில மாவட்டங் களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
                                                                                                       மேலும்....

ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பலி துணை விமானி, சதி செய்து விமானத்தை மலை மீது மோதவைத்தார் கருப்பு பெட்டி மூலம் வெளியான பரபரப்பு தகவல்


பாரீஸ், மார்ச்.27-
ஆல்ப்ஸ் மலையில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில், துணை விமானி சதி செய்து விபத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.
விமான விபத்து
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு கடந்த 24-ந் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51
                                                                                            மேலும்....

Thursday 26 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த சம்மனை ரத்து செய்யக்கோரி மன்மோகன்சிங் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி, மார்ச்.26-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் தனிக்கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சம்மன்
கடந்த 2005-ம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலக்கரித் துறையின் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கத்தில் இருந்து ண்டால்கோ என்னும் நிறுவனத்துக்கு நிலக்கரியை எடுக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவராக, ஏப்ரல் 8-ந் தேதியன்று நேரடியாக ஆஜராகுமாறு கடந்த 11-ந் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
                                                                                                               மேலும்....

தமிழக பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ரூ.650 கோடிக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, மார்ச்.26-
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பட்ஜெட் தாக்கல்
சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 9.56 மணிக்கு வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், ‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’’ என்ற திருக்குறளை வாசித்து காலை 10 மணிக்கு சட்டசபை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், 2015-2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு அறிக்கை) நிதி இலாகா
                                                                                                                 மேலும்....

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் பலி


விழுப்புரம், மார்ச்.26-
நடுரோட்டில் கார் கவிழ்ந்து, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் பலியானார். திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு தோழிகளுடன் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பெண் டாக்டர்
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மகள் பிரணவப்பிரியா (வயது 27). இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகள் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் பிரீத்தி (23), நீலாங்கரையை சேர்ந்த டாக்டர் திருமேனி (24) ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை திருமண விழா முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார்.
கார் கவிழ்ந்து பலி
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பிரணவப்பிரியாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டபடி சாலையின் மறுபக்கத்திற்கு சென்று கவிழ்ந்தது.
இதில் டாக்டர் பிரணவப்பிரியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
                                                                                                          மேலும்....

கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை வைத்திருக்கிறேன் தாம்பரத்தை தாண்டினால் ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை குஷ்பு பேட்டி

சென்னை, மார்ச்.26-
தாம்பரத்தை தாண்டினால், ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் தமிழக பா.ஜ.க.வின் எழுச்சி என்றும், கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை இன்னமும் வைத்திருக்கிறேன் என்றும் நடிகை குஷ்பு கூறினார்.
இளங்கோவன் ஒத்துழைப்பு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின், தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்ததில் இருந்து, எனக்கு தேசிய அளவில் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகம் ஆசைப்பட்டார். தற்போது பதவி கிடைத்துவிட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒத்துழைப்பு இல்லாமல் எனக்கு பதவி கிடைத்திருக்காது. அவருடைய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது’ என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                மேலும்....

Wednesday 25 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஆட்சேப கரமான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, மார்ச்.25-
கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                    மேலும்....

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வரிச்சலுகைகள் இருக்க வாய்ப்பு

சென்னை, மார்ச்.25-
2015-16-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்
ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 பட்ஜெட்டுகளையும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இன்று பட்ஜெட்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
                                                                                                                               மேலும்....

கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் பதவி: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் சோனியா காந்தி அறிவிப்பு

சென்னை, மார்ச்.25-
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
தி.மு.க.வில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விலகிய நடிகை குஷ்பு, டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார்.
                                                                                                         மேலும்....

எம்.பி.பி.எஸ். என்பதற்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை கைதான போலி டாக்டர் தம்பதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, மார்ச்.25-
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
                                                                                            மேலும்....
 

Tuesday 24 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

மாநகராட்சி கமிஷனரின் நண்பர்கள் என்று ஏமாற்றி மோசடி சென்னையில் போலி டாக்டர் தம்பதி கைது வேலைவாங்கி தருவதாக கோடி, கோடியாக சுருட்டியதாக பரபரப்பு தகவல்கள்

சென்னை, மார்ச்.24-
மாநகராட்சி கமிஷனர் தங்கள் நண்பர் என்று ஏமாற்றி, சென்னையில் கோடி, கோடியாக வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் காமராஜ் புகார்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தார். பிளஸ்-2 வகுப்புக்கு பாடம் நடத்தினார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன்.
                                                                                                               மேலும்....

சென்னையில் நடைபெறுகிறது தமிழ்நாடு, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பேச்சுவார்த்தை நல்லெண்ண நடவடிக்கையாக 54 மீனவர்களை இலங்கை விடுவித்தது

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழக-இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக, சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுவித்தது.
சென்னை, மார்ச்.24-
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
நீடிக்கும் பிரச்சினை
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
                                                                                                                       மேலும்....

2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ ரூ.4,632 கோடிக்கு தாக்கல் சாலை பணிகளுக்கு ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மார்ச்.24-
2015-16-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் ரூ.4,632 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. சாலை பணிகளுக்கு மட்டும் ரூ.1,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘பட்ஜெட்’ கூட்டம்
சென்னை மாநகராட்சியின் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.
                                                                                                                          மேலும்....

ஜெயிலுக்கு சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல்: போலீஸ்காரர் கடத்திக் கொலை சென்னை கோர்ட்டில் 7 பேர் சரண்

புதுச்சேரி, மார்ச்.24-
ஜெயிலுக்கு கணவனை பார்க்கச் சென்ற ரவுடியின் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்ட புதுச்சேரி போலீஸ்காரர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். ரவுடி உள்பட 7 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
போலீஸ்காரர் மாயம்
புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்திராஜா நகரை சேர்ந்தவர் ரகு என்ற ரகுபதி (வயது 31). போலீஸ்காரரான இவரது மனைவி தாமரைச்செல்விக்கு (28) சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் வாணரப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 19-ந்தேதி ரகுபதி வாணரப்பேட்டைக்கு சென்று மனைவி குழந்தையை பார்த்துச் சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை.
இது குறித்து தாமரைச்செல்வி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். ரகுபதியின் புகைப்படம் விழுப்புரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே சாலையோரம், ரவியின் பிணம் ரத்தவெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் அவரது மோட்டார்சைக்கிளும் கிடந்தது. விபத்து என்று கருதிய திருநாவலூர் போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இந்த தகவல் முதலியார்பேட்டை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
ரகுபதியின் பெற்றோர் சென்று உடலை அடையாளம் காட்டினர்.
                                                                                                                         மேலும்....

Monday 23 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

'வாட்டர் மேன் ஆப் இந்தியா' ராஜேந்திர சிங்கிற்கு உலகின் சிறப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது

மார்ச் 23,2015, 11:07 AM IST
1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்து 'வாட்டர் மேன் ஆப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்கிற்கு, இத்துறையில் சிறப்பான செயல்பாட்டிற்காக உலகின் உயர்ந்த பரிசான 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' பரிசு வழங்கப்பட்டது
தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடனை சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
                                                                                                 மேலும்....

ஆப்கானில் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி - விசாரணை அதிகாரி

மார்ச் 23,2015, 10:15 AM IST
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் அப்பாவி என்று விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள மசூதியின் அருகே, 27 வயது இளம்பெண் பார்குந்தாவை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் அடித்து கொலை செய்தனர்.
                                                                                          மேலும்....


சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்

சிங்கப்பூர், மார்ச் 23, 2015, 8:55 AM IST
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம் அடைந்தார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
                                                                                                             மேலும்....

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது பிரதமர் மோடி உறுதி

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக கூறிய பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என்று உறுதி அளித்தார்.
புதுடெல்லி, மார்ச்.23, 2015, 6:30 AM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி விஜயதசமி நாளில் இருந்து நாட்டு மக்களுடன் மாதம் ஒரு முறை ‘மன் கி பாத்’ (‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’) என்ற தலைப்பில், வானொலியில் பேசி வருகிறார்.
வானொலியில் பேச்சு
இது நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றடைவதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் நேற்றும் அவர் வானொலி மூலம் நாட்டு மக்களுடன் 30 நிமிடங்கள் பேசினார். இந்த உரையை அவர், நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிற நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா பற்றி விளக்குவதற்காக பயன்படுத்திக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                            மேலும்....