Thursday 2 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-04-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்பு விமானப்படை விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்

உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் சிக்கித்தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானப்படை விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி, ஏப்ரல், 02-04-2015,
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.
கிளர்ச்சியாளர்கள்
அவர்கள், ஏமன் நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட பெரும் பகுதியை கைப்பற்றி விட்டனர். அதனால், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டார். முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து உள்ளன.
இந்தநிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டு, அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை கொண்டு வருவதற்காக, சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதலைத் தொடங்கின.
                                                                                                       மேலும்....

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றிய பேச்சால் அவையில் அமளி தி.மு.க. வெளிநடப்பு

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
செலவு கணக்கீடு
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்களுக்கு, பதில் அளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உறுப்பினர் துரைமுருகன் (தி.மு.க.), தலைமை நிதி கணக்காயரின் அறிக்கையை வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தில் சில கருத்துக்களை கூறினார். எந்த ஒரு அரசும் துல்லியமாக செலவுகளைக் கணக்கிட்டு ஒதுக்கீடு செய்து, சேமிப்பே ஏற்படாமல் முழுமையாக செலவு செய்துவிட முடியாது. எல்லா அரசு நிதி நிர்வாகத்திலும் இவ்வாறு சில இனங்களில் நிதி திரும்ப ஒப்புவிப்பு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று.
இதில் நிதி ஒதுக்கம் திரும்பப்பெறுவதால் நிர்வாகமே சீர்குலைந்து விட்டது என்று
                                                                                                             மேலும்....

புதுவையில் புதிதாக கட்டப்படும் 5 மாடி கட்டிடம் சாய்ந்தது 50 குடும்பங்கள் வெளியேற்றம்

புதுச்சேரி, ஏப்ரல், 02-04-2015,
புதுவை பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் பழனிராஜா உடையார் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
தன்ராஜ் உடையார் வீதியில் 3850 சதுர அடியில் 5 மாடிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பின் தரை தளத்தில் வாகனங்களை நிறுத்த பார்கிங் வசதி அமைந்துள்ளது.
கட்டிடத்தில் பெரும் பகுதி பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் பார்கிங் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தூண்களில் ஒன்று சேத மடைந்தது. தூணை சுற்றி உள்ள சிமெண்டு பூச்சு பெருத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது.
இதனால்
                                                                                                 மேலும்....

ரசாயன மையை தடவினால் கருப்பு தாள் பணமாக மாறிவிடும் என்று கதை சென்னையில் போலியாக வெளிநாட்டு பணம் தயாரித்த கும்பல் கைது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, ஏப்ரல், 02-04-2015,
சென்னையில் போலி வெளிநாட்டு பணம் தயாரிப்பில் ஈடுபட்ட மோசடி கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பணம் தருவதாக ஆசைகாட்டி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்தேகத்தின் பேரில் விசாரணை
சென்னை ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயராகவன் நேற்று முன்தினம் இரவு ஆவடி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள குறுகலான தெரு ஒன்றில் 4 பேர் நின்று சத்தம் போட்டு பேசி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராகவன் போலீஸ் படையுடன் சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை போட்டனர்.
                                                                                                         மேலும்....
 

No comments:

Post a Comment