Tuesday 14 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பெயர் பட்டியலை 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு கட்டளையிட்டு இருக்கிறது

புதுடெல்லி, ஏப்ரல், 14,2015,
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 7-ந் தேதி செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை அந்த மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.
முக்கிய சாட்சிகள்
இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேரில் பார்த்த சாட்சியாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கருதப்படுகிறார்.
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு தான் பஸ்சில் சென்றபோது, ஆந்திர போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தி 7 பேரை பிடித்துச் சென்றதாகவும், பெண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் தான் தப்பியதாகவும் அவர் கூறினார். இதேபோல் பாலசந்திரன் என்பவரும் இந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியாக விளங்குகிறார். இதனால் முக்கிய சாட்சிகளான இவர்கள் இருவரையும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்து உள்ளனர்.
சாட்சியம் அளித்தனர்
இந்த நிலையில் சேகரும், உயிர் தப்பிய மற்றொரு தொழிலாளியான பாலசந்திரனும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேற்று காலை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரும், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விவரங்களை சாட்சியமாக அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
                                                                                            மேலும்....

ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து ‘தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சி, குறையாத மகிழ்ச்சி வழங்கும் ஆண்டாக விளங்கட்டும்’


சென்னை, ஏப்ரல், 14,2015,
‘தமிழக மக்களுக்கு ஏற்ற மிகு வளர்ச்சியையும், குறையாத மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு விளங் கட்டும்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார்.
ஜெயலலிதா வாழ்த்து
தமிழ் புத்தாண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ‘தமிழ் புத்தாண்டு’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                                               மேலும்....

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த திராவிடர் கழகத்துக்கு அனுமதி

சென்னை, ஏப்ரல், 14,2015,
தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திராவிடர் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தடையை நீக்க வேண்டும்
டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.
                                                                                                   மேலும்....

சென்னையில் பயங்கரம் பள்ளிக்கூட சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி

சென்னை, ஏப்ரல், 14,2015,
சென்னையில் பள்ளிக்கூட காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள். இன்னொரு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
250 ஆண்டு பழமையான பள்ளி
சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ள அவ்வை இல்ல தொண்டு நிறுவன பள்ளியில்தான் இந்த நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் நடந்தது. 250 ஆண்டுகள் பழமையான இந்த தொண்டு நிறுவனம் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. இங்கு செயல்படும் ராமமூர்த்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 822 மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் 165 பேர் பள்ளி விடுதியில் தங்கி படிக்கிறார்கள்.
நேற்று பகல் 12.30 மணி அளவில் வழக்கம்போல பள்ளி மதிய உணவுக்கு மணி அடிக்கப்பட்டது. மாணவிகள் சிட்டாய் பறந்து பள்ளி அறையை விட்டு வெளியில் வந்தார்கள். குறிப்பாக 8-வது படிக்கும் மாணவிகள் மோனிஷா, நந்தினி, சந்தியா ஆகிய 3 பேரும் ஒன்றாய் வந்தனர். பள்ளி காம்பவுண்டு சுவரையொட்டி உள்ள கழிவறைக்கு சென்றனர்.
சுவர் இடிந்து விழுந்தது
அப்போது பள்ளியின் 8 அடி பழமையான காம்பவுண்டு சுவர் இடிந்து திடீரென்று விழுந்தது.
                                                                                        மேலும்....

No comments:

Post a Comment