Monday 30 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

85 அடி ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டிருந்தால் கட்டடம் விழுந்திருக்காது
சென்னை, 30-06-2014,
சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்துக்கு, குறைந்த ஆழத்துக்கு அஸ்திவாரம் போட்டதே முக்கிய காரணம். இப்பகுதியில், 25 மீட்டர் ஆழம் வரை களிமண் இருப்பதால், 26 மீட்டர் ஆழத்துக்கு, 'பைல் பவுண்டேஷன்' (ஆழ்துளை அஸ்திவாரம் முறை) முறையில் அஸ்திவாரம் போட்டிருக்க வேண்டும் என, மண் பரிசோதனை வல்லுனர்கள் கூறினர்.
சென்னை, போரூர் அருகே, 11 மாடி கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. 'பலத்த மழையின் போது, இடி விழுந்ததே விபத்துக்கு காரணம்' என, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் கூறி வருகிறது.ஆனால், 'இடி விழுந்தால் கட்டடத்தின் மேல் பகுதி மட்டுமே சேதமடையும். கட்டடத்தின் அஸ்திவார நிலையில் ஏற்பட்ட குறைபாடே, ஒட்டுமொத்த கட்டடமும் இடிந்து விழ முக்கிய காரணம்' என, பல்வேறு கட்டுமான வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அஸ்திவாரம்
அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, அஸ்திவாரமே அடிப்படையானது.
                                                                                                    மேலும், . . . 

மே.வங்க கவர்னர் நாராயணன் ராஜினாமா அடுத்து கோவா கவர்னர் வெளியேறுகிறார்
கோல்கட்டா, 30-06-2014,
மேற்குவங்க கவர்னர் நாராயணன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் முறைகேடு தொடர்பாக இவரிடம் , சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தேசிய தேசிய பாதுகாப்பு துறை செயலராக இருந்தவர் எம்.கே., நாராயணன். இவர் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்.
                                                                                    மேலும், . . . .

அதிக தளங்கள் கொண்ட 52 அடுக்குமாடி கட்டடங்களின் நிலை என்ன? உறுதித்தன்மையை பரிசோதிக்க வலியுறுத்தல்
சென்னை, 30-06-2014,
'சென்னை, மவுலிவாக்கம், 11 மாடி கட்டட விபத்தை அடுத்து, சென்னை புறநகரில், 20 முதல் 45 தளங்கள் வரை உள்ள, 52 அடுக்குமாடி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து பரிசோதிக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பல்வேறு கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, சென்னை புறநகர் பகுதிகளில், 30 தளங்கள் கொண்ட, 6 அடுக்குமாடி கட்டடங்கள்; 28 தளங்கள் கொண்ட, 6 அடுக்குமாடி கட்டடங்கள்; 20 தளங்கள் கொண்ட, 8 அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளன.இது தவிர, 20 முதல் 45 தளங்கள் கொண்ட, 32 கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 20 முதல் 50 தளங்கள் கொண்ட, 59 கட்டடங்கள், திட்ட அனுமதி நிலையில் உள்ளன.இதில், கட்டி முடிக்கப்பட்ட, 20 கட்டடங்கள், கட்டப்பட்டு வரும், 32 கட்டடங்கள் என மொத்தம், 52 கட்டடங்களின் உறுதித்தன்மைக்கு யார் உத்தரவாதம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலை, போரூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் சாலை, ஜி.எஸ்.டி., சாலை ஆகிய இடங்களில், இக்கட்டடங்கள்
                                                                                                         மேலும், . . . 

பிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லடச ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிய வாலிபர்
பீஜிங், 30-06-2014,
காதல்...
இந்த 3 எழுத்து தான் வாலிபர்களை வசப்படுத்தும் இளம் வஞ்சியரின் மந்திரக்கோல்
காதலில் ஊடலும் ஒரு இன்பமே அந்த ஊடல் மட்டும் நீண்டு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்
சில காதலர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபித்துக்கொண்டு பிரிந்து விடுவர். அவ்வாறு ஒரு சின்ன விஷயத்துக்காக பிரிந்து சென்ற தனது காதலிக்கு, சீன வாலிபர் ஒருவர் பாடம் புகட்டியிருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த ஹூஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007-ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
                                                                                                       மேலும், . . . .

Sunday 29 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி; முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார்

சென்னை, 29-06-2014,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-23 ராக்கெட் மூலம் நாளை (திங்கட்கிழமை) வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கைகோள்கள் அனுப்பப்படுகிறது.
                                                                                                              மேலும், . . .

அதிரும் அடுக்குமாடி வாசிகள் சரியான கலவை-கம்பிகள் பயன்படுத்த வேண்டும்

சென்னை, 29-06-2014,
சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த 11 மாடிகள்... சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் உயிர்கள்... எத்தனை பேர் உயிருடன் மீட்கப்படுவார்கள்? எத்தனை பேர் மாண்டார்களோ...? மீட்பு பணியில் போராடி கொண்டிருக்கிறார்கள் மீட்பு குழுவினர்!
திடீரென்று பேய் மழையில் கொட்டி தீர்த்த மழை தண்ணீரோடு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் கண்ணீரும், செந்நீரும் கலந்தன.
குலுங்கி சரிந்த கட்டிடம் ஒட்டு மொத்த மக்களையும் உலுக்கி விட்டது!
சிங்கார சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வானளாவ உயர்ந்து நிற்கும் பல மாடி குடியிருப்புகள். கண்ணை பறிக்கும் உள் அலங்ககார வேலைப்பாடுகள்...
எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும். இதுவே பலரது லட்சியக் கனவாக இருக்கிறது.
                                                                                                   மேலும், . . .

தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் புதைக்க அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

விழுப்புரம், ஜூன்.29-06-2014,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2012–13–ல் குறுவை சாகுபடியில்லை. இந்த ஆண்டும் அதற்கான வாய்ப்பில்லை. மேட்டூர் அணையில் 44.26 அடி தண்ணீர்மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் போதிய அளவில் மழைபெய்து அணைகள் நிரம்பியபோதும் காவிரி நீர்திறக்கவில்லை. 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வறட்சியால் தற்போது 50 ஆயிரம் ஏக்கருக்கும் குறைவாக சாகுபடி இருக்கிறது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.6 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய தொழிலாளர்களுக்கு ரூ-.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                      மேலும், . . . 

பாகிஸ்தான் மக்களுக்கான விசாவை ரத்து செய்தது இலங்கை


இஸ்லாமாபாத், 29-06-2014,
பாகிஸ்தானியர்களுக்கான உடனடி விசா நடைமுறையை இலைங்கை ரத்து செய்துள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தஞ்சம் கேட்டு வரும் பாகிஸ்தனியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக உயர் அதிகாரி பாகிஸ்தான் வெளியுறவுத் துறையிடம் விளக்கியதாக அந்நாட்டு
                                                                                                              மேலும், . . .

Saturday 28 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

போரூர் அருகே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 40 பேர் சிக்கித் தவிப்பு




சென்னை, 28-06-2014,
சென்னை போரூர் அருகே இன்று 13 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முகலிவாக்கம் பாய்கடை அரசுப்பள்ளியின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த 13 மாடி கட்டிடம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.
                                                                                                                                      மேலும், . . 

ஆட்சியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்துங்கள் எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
சுராஜ்கண்ட், 28-06-2014,
மக்களிடத்தில் சிறந்த முறையில் ஆட்சியை நடத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி புதிய எம்.பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 150 எம்.பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில்,
                                                                                                           மேலும், . . .

தேனி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் குத்திக் கொலை


தேனி, 28-06-2014,
தேனி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நடத்தையில் சந்தேகம்
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி தந்தை பெரியார் 2-வது தெருவை சேர்ந்த மாரியப்பராவ் என்பவருடைய மகன் கொடியரசு (வயது 32). ஜோதிடர். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா (10), முத்தரசி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு அருகில் சின்னப்பொண்ணுவின் தந்தை ராஜாராம்ராவ் (56) வசித்து வருகிறார்.
                                                                                                            மேலும், . . . 

ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 2 போர்க் கப்பல்கள் விரைந்தன
புதுடெல்லி, 28-06-2014,
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே பாதிப்பு இல்லை என்றாலும் சண்டை நடக்கும் பகுதிகளில் சில நூறு இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இதுவரை நாடு திரும்ப விரும்பிய 36 இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஈராக்கை விட்டு வெளியேற விரும்பும் மற்ற இந்தியர்களை மீட்பது தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் அமைச்சரக செயலாளர்
                                                                                                                   மேலும், . . . 

Friday 27 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-06-2014) மாலை, IST- 08.00 மணி, நிலவரப்படி,

ஆந்திராவில் பயங்கர விபத்து டீக்கடையில் காலை அடுப்பு பற்ற வைத்தபோது ஊரில் தீ பற்றியது




கோதாவரி, 27-06-2014

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு வயல்கள் உள்ளன. இங்கிருந்து எடுக்கப்படும் எரிவாயு, பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள 18 அங்குல சுற்றளவு கொண்ட குழாய்கள் மூலம் அமலாபுரம் மண்டலம், நகரம் என்னும் கிராமத்தின் வழியாக பொன்னமாதா என்ற இடத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிறிய எரியவாயு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை 5.30 மணி அளவில் நகரம் அருகே பதிக்கப்பட்டு இருந்த எரிவாயு குழாய்கள் திடீரென வெடித்துச் சிதறின.
                                                                                                                     மேலும், . . .  

பாளையங்கோட்டையில் சிறைத் தோட்டத்தில் கைதிகள் சாகுபடி

பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைத் தோட்டத்தில் கைதிகள் விளைவித்த புதிய ரக (பஎ37அ) நிலக்கடலை அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பங்கேற்று கைதிகளை உற்சாகப்படுத்தினார்.
சிறைகளில் விவசாய தொழில்நுட்பத்தை சிறைவாசிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி சிறைத் திட்டத்தின் தொடர்ச்சியாக, விவசாயப் பின்னணி கொண்ட சிறைவாசிகளை சிறைகளில் உள்ள தோட்டங்களில் பணியில் ஈடுபடுத்திடவும், தண்டனைக் குறைப்பு மற்றும் வருமானம் ஈட்டும் வகையாகவும் சிறைத் துறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் திரிபாதி, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சேகர் பசு ஆகியோர் ஆலோசனையின்பேரில் பஎ37அ என்னும் வீரியரக நிலக்கடலை விதை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வழங்கப்பட்டு, மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைத் தோட்டத்தில், 5 ஏக்கரில் பயிரிடப்பட்டது. அதன் அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் பணியைப் பார்வையிட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:
                                                                                                                      மேலும், . . .  

அம்மா உணவகங்களுக்கு தனி நிதி: எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை



தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
                                                              மேலும், . . .  

நெல்லை மாநகராட்சி ஆணையர் அறையில் தீ

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக தப்பின.
திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் தரைத் தளத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர், செயற்பொறியாளர்,
                                                                                            மேலும், . . . 

Thursday 26 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இன்றைய முக்கிய செய்திகள் (26-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

குழந்தைகள் காப்பகம்-மகளிர் விடுதிகளுக்கு 37 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை, ஜூன் 26-06-2014,

தமிழகத்தில் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் விடுதிகள் மறறும் காப்பகங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன்.
எனது தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும்; சிகிச்சைக்குப் பின் அவர்களை அரசு இல்லத்தில் சேர்க்குமாறும்; பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டேன்.
இதனைத் தொடர்ந்து, எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இது குறித்து இன்று (26.6.2014) மீண்டும் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
                                                                                                              மேலும், . . .  

தேசிய நலன் கருதியே முடிவுகளை எடுக்கிறோம்: மோடி


புதுடெல்லி, ஜூன் 26-06-2014,
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பதவியேற்று 100 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகவும், தேசத்துக்காக உழைப்பதால் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
                                                                                                              மேலும், . . .

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்: ஆதாரம் கிடைக்காமல் போலீஸ் திணறல்

மும்பை, ஜூன் 26-06-2014,

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30–ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
                                                                                                                                   மேலும், . . . 

10 இடங்களில் அம்மா மருந்தகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 26-06-2014,
கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (26.6.2014) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்;
                                                                                                     மேலும், . . .

Tuesday 24 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

வரும் 26ம் தேதி அமாவாசை: அ.தி.மு.க.,வில் கலக்கம்

சென்னை, 24-06-2014,

அமைச்சரவையிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், 26ம் தேதி அமாவாசை வருவதால், பதவியில் இருப்போர் கலக்கத்திலும், பதவியை எதிர்பார்ப்போர் கனவிலும் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றியை பெற்றாலும், தேர்தலில் முறையாக பணி செய்யாதவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சரவையில் செல்வாக்குடன் இருந்த,
                                                                                            மேலும்,  . . . . . 

சென்னையில் போலி பாஸ்போர்ட்- விசா தயாரிப்பு 6 பேர் கும்பல் கைது: பரபரப்பு தகவல்கள்

சென்னை, 24-06-2014,

சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அணி

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் கடந்த 82-ம் ஆண்டு, இலங்கையில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். அந்த தொழிலில் இவர் மன்னர். கடந்த 2003, மற்றும் 2005-ம் ஆண்டுகளில் போலி பாஸ்போர்ட் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதுள்ள வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகிவிட்டார்.
                                                                                                     மேலும், . . . .  

ஆபாச வீடியோவை காட்டி, டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டலா? நடிகை நயனா பேட்டி

பெங்களூர், 24-06-2014,

ஆபாச வீடியோவை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்று நடிகை நயனா தெரிவித்து உள்ளார்.

பெங்களூர் கன்னிகாம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர், பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சியை வெளியிடுவதாக கூறி அவரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கே.ஜி.நகர் போலீஸ் ஏட்டு மல்லேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                              மேலும், . . . . 

கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

கரூர், 23-06-2014,

கரூர் அருகே வேலைக்கு சென்ற 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் வினிதா (வயது 17). இவர் பிளஸ்–2 முடித்து விட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார். விடுமுறை நாட்களில் வினிதா கரூரில் உள்ள கொசு வலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து கிருஷ்ணராயபுரத்துக்கு சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் கரூருக்கு வினிதா வேலைக்கு சென்று வந்தார்.
                                                                                                                                           மேலும், . . . 

Monday 23 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியர்கள் பத்திரம்; பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற முயற்சி - மத்திய அரசு
புதுடெல்லி, 23-06-2014,
ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர் என்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
                                                                                                                         மேலும், . . . 

கொலையுண்ட சுரேஷ்குமாரின் பேச்சுக்களை சிடியாக வெளியிட்ட கும்பல்

சென்னை, ஜூன். 23–06-2014,
இந்து முன்னணி அமைப்பின், திருவள்ளுர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், அம்பத்தூரில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 6 நாட்கள் ஆகிறது.
இக்கொலை சம்பவம் குறித்து, துப்பு துலக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட சுரேஷ்குமார் இந்துத்துவா கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததால்
                                                                                                      மேலும், . . .  

கூடலூரில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: கைதான வாலிபர் வாக்குமூலம்


கூடலூர், ஜூன். 23–06-2014,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பாரதிநகரைச் சேர்ந்தவர் ஜோயி (வயது 50). தேயிலை விவசாயி. இவரது மனைவி கிரிஜா. இவர்களது மகள் ரெசினா என்ற ஜோஸ்ல்னா (22). ஜோயியின் தாயார் அம்னி.
ரெசினா கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கேட்டரிங் படித்தார். அப்போது அவருடன் படித்த லெனின் என்ற வாலிபருக்கும் ரெசினாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்வது என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் ரெசினா சமீப காலமாக லெனினுடன் சரியாக பேசுவது இல்லை. இந்த நிலையில் ரெசினாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் வரன் பார்த்து நிச்சயம் செய்தனர்.
                                                                                                  மேலும், . . . 

தியேட்டர்களுக்கு மிரட்டல் சிங்கள படம் சென்னையில் நிறுத்தம்


சென்னை, 23-06-2014,
இலங்கையை சேர்ந்தவர் தயாரித்த படத்தை சென்னையில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு மிரட்டல் வந்ததால் திரையிடவில்லை. இந்த படம் ‘வித்யூ வித் அவுட் யூ’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குனர் தயாரித்து இருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி விட்டு அதில் இருந்து வெளியேறியவன் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கு தன் கணவன் ராணுவத்தில் இருந்தது தெரியவருகிறது.
                                                                                                 மேலும், . . . .

Sunday 22 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சுவிஸ் நாட்டில் இந்திய கறுப்புபணம் பதுக்கியவர்கள் விவர பட்டியல் ரெடி
பெர்ன், 22-06-2014,
கறுப்பு பணம் மீட்கப்படுமா? இது இந்தியாவிற்கு திரும்ப வந்து சேருமா என்ற நீண்ட கால யூகங்களுக்கு விடை கிடைக்கும் காலம் நெருங்கி விட்டது. சுவிஸ்சில் பணத்தை பதுக்கி உள்ள இந்த பதுக்கல்காரர்கள் விவரத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு கறுப்பு பண மீட்பு விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக கறுப்பு பண விவகாரம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
                                                                                                                  மேலும், . . . .

மேற்கு ஈராக்கை குறி வைத்த தீவிரவாதிகள் 4 நகரங்களை பிடித்தனர் தீவிரவாதிகள் மோதல்
பாக்தாத், 22-06-2014,
ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக் தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் சன்னி பிரிவு தீவிரவாதிகளும், அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும் கூட்டாக போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர். ஈராக்கின் வடக்கு நகரங்களை கைப்பற்றிய நிலையில், இப்போது அவர்கள் மேற்கு ஈராக்கை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
                                                                                   மேலும், . . . .

ஈராக்கில் சிக்கி தவிக்கும் தஞ்சை டிரைவர் பத்திரமாக மீட்க உறவினர்கள் வலியுறுத்தல்

பூதலூர், ஜூன் 22–06-2014,
ஈராக்கில் தஞ்சையை சேர்ந்த டிரைவர் சிக்கி தவிக்கிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈராக்கில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்து வருவதால் உள்நாட்டு போர் மூண்டுள்ளது. ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும், திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும் சிக்கி உள்ளனர்.
                                                                                                      மேலும், . . . 
ரெயில் கட்டண உயர்வு காங்கிரஸ் ஆட்சி எடுத்த முடிவு பொன். ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில், ஜூன். 22–06-2014,
பாரதீய ஜனதா மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மீனவ கிராம மக்கள் என்னை சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
                                                                                                             மேலும், . . .

Saturday 21 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியா வர முடியாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள்

புதுடில்லி, 21-06-2014,

ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா கூறியுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக நகரமான மொசுலை கைப்பற்றிய பயங்கரவாதிகள்,

                                                                மேலும், . . . .

தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை


பண்ருட்டி, 21-06-2014,
பண்ருட்டியில், தலையில் கல்லைபோட்டு புதுச்சேரி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தலைநசுங்கிய நிலையில் பிணம்
புதுச்சேரி மாநிலம், திருபுவனையை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது26). ரவுடியான இவர் தனது நண்பர் வில்லியனூரை சேர்ந்த ரஞ்சித்குமாருடன் (28) பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
இரவில் சத்தியநாதன், ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமாரின் தம்பி பிரவின்குமார் ஆகியோர் அங்கிருந்த காலி இடத்தில் அமர்ந்து மதுகுடித்தனர். இந்த நிலையில், நேற்று காலை தலை நசுங்கிய நிலையில் சத்தியநாதன் பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பஜ்ஜூலுதீன்,
                                                                                                  மேலும், . . . .

கதக் அருகே டிராக்டர்-டிப்பர் லாரி மோதி விபத்து 10 பெண்கள் உள்பட 15 பேர் நசுங்கி சாவு மேலும் 15 பேர் படுகாயம்

எலபுருகா, 21-06-2014,
கதக் அருகே டிராக்டர் மீது டிப்பர் லாரி மோதிய பயங்கர விபத்தில் 10 பெண்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
2 டிராக்டரில் 90 பேர் பயணம்
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், எலபுருகா தாலுகா சித்தையன் கொப்பா கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 90 பேர் இரண்டு டிராக்டரில் ஊப்ளி அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.
பின்னர் நேற்றுமுன்திம் இரவு அவர்கள் அதே டிராக்டர்களில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு டிராக்டரில் 40 பேரும், மற்றொரு டிராக்டரில் 50 பேரும் நின்றபடி பயணம் செய்தனர்.
15 பேர் பலி
அப்போது கதக் மாவட்டம், குல்கோட்டி கிராமம் அருகே வந்தபோது ஒரு டிராக்டர் மீது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது.
                                                                                மேலும், . .. . .

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு

ஆலந்தூர், ஜூன். 21–06-2014,
தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அந்த இடத்தில் 86 கடைகள் கட்டப்பட்டிருந்தன.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருப்பது பற்றி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
                                                                                                     மேலும், . . . .

Friday 20 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சமூக வலைத்தளங்களில் இந்தியை கட்டாயமாக்குவதா? மத்திய அரசுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

சென்னை, ஜூன். 20–06-2014
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 10.3.2014 மற்றும் 27.5.2014 தினங்களில் இரண்டு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
                                                                                                           மேலும், . . . 

இந்து முன்னணி அலுவலகத்துக்கு 4 மாதத்துக்கு முன்பு 9 பேரை கடத்தப்போவதாக வந்த மிரட்டல் கடிதம்


சென்னை, ஜூன். 20–06-2014
இந்து இயக்க தலைவர்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பேரும் கைது செய்யப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந்தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், ‘‘எனது பெயர் பாட்ஷா. சில தீவிரவாத அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டவன் நான்.
                                                                                                          மேலும், . . . 

இந்தி திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் வைகோ அறிக்கை
சென்னை, ஜூன் 20-06-2014,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம்தேதி அன்றும், மே மாதம் 27-ம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்து இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்குச் சமூக வலைதளங்களையே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கவலை தருகிறது. 1938-ம் ஆண்டில் இருந்தே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகம் தியாகம் நிறைந்த போராட்டங்களை நடத்தி இருக்கின்றது.
                                                                                                          மேலும், . . . 

தீவிரவாதிகளின் எழுச்சி தாக்கு பிடிக்குமா ஈராக்?
வாஷிங்டன், ஜூன் 20-06-2014,
எப்போதுமே யுத்த பூமி! இதுதான் ஈராக்கின் அடையாளம்!
பல ஆண்டுகளாக போரிலேயே சிக்குண்டு சின்னாபின்னமான ஈராக் இப்போது தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கிறது. தீவிரவாதிகள் எந்த நேரத்திலும், முழு ஈராக்கையும் கபளிகரம் செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை.
ஈராக் இன்று மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாகவே போர் மேகம் சூழ்ந்த நிலையில்தான் காலத்தை கடத்திச் சென்றுள்ளது.
                                                                                                            மேலும், . . . 

Thursday 19 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

லோக்சபா தேர்தலில் படுதோல்வி எதிரொலி இந்தியை மீண்டும் கையில் எடுக்கிறதா தி.மு.க.?

சென்னை, 19-06-2014

இந்தியை அலுவலக மொழியாக அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியின் துவக்கம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.

இந்த விஷயத்தில் அவர் காட்டியுள்ள கடுமையான போக்கை பார்த்தால், லோக்சபா தேர்தல் தோல்வியை சரிக்கட்டி, கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட இந்தி பிரச்னையை மீண்டும் கையில் எடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
                                                                                                    மேலும், . . . .

இந்தியர்கள் பத்திரம், மீட்பது சாத்தியமில்லாதது - ஈராக் அரசு

புதுடெல்லி/பாக்தாத்,
ஐ.எஸ்.ஐ.எஸ்.யால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பது சாத்தியமில்லாதது என்று ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபயங்கர ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர்.
                                                                              மேலும், . . . . 

சோதனையான காலகட்டங்களிலும் ரஷ்யா இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்துள்ளது ரஷிய துணைப்பிரதமரிடம் மோடி பேச்சு

புதுடெல்லி, 19-06-2014,

இந்தியா வந்துள்ள ரஷிய துணை பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின், நேற்று அதிகாலையில் டெல்லி வந்த அவர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய துணை பிரதமர் டிமிட்ரி ஓ ரோகோசின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதாகவும், இந்தியாவுடன் ராணுவரீதியிலான ஒத்துழைப்பை பேண ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புதின் தெரிவித்ததாகவும், ரோகோஜின் மோடியிடம் கூறினார்.
                                                                                                           மேலும், . . . . 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் (19-06-2014)




Wednesday 18 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

விலகும் முடிவை ஓராண்டுக்கு முன்பே எடுத்து விட்டேன் தோழியிடம் மனம் திறந்த குஷ்பு

சென்னை, ஜூன்.18–06-2014,

தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகை குஷ்பு. இவர் தி.மு.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதே நேரத்தில் தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் தி.மு.க.வில் இருந்து தான் விலகியது பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அந்த தோழி கூறியிருக்கும் கருத்துக்கள் வாரபத்திரிகை ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
மனதில் பட்டதை தைரியமாக பேசும் நான் நிறைய படிப்பேன். பெரியார் படத்தில் நடித்தபோது அவரை பற்றி படித்தேன். பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.

தமிழகத்திலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட நான் சுந்தர்சியை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். 2 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னுடன்தான் எனது தாயும்,
                                                                                        மேலும், . . . .  

தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுகிறார் நெஸ்வாடியா போலீசில் புகார்


மும்பை, ஜூன் 18–06-2014,
தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக அவரது முன்னாள் காதலர் நெஸ்வாடியா போலீசில் புகார் செய்துள்ளார்..
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ்வாடியா ஆகியோர் உள்ளனர்..
இவர்கள் இருவரும் காதலர்களாக 2004–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டுவரை நட்புடன் பழகி வந்தனர். அதன் பிறகு பிரிந்துவிட்டனர் என்றாலும் ஐ.பி.எல். அணி பங்குதாரர்களாக நீடித்து வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரித்தி ஜிந்தா மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
                                                                                             மேலும், . . . .  

தீவிரவாதிகளால் 40 இந்தியர்கள் கடத்தல் மீட்பது பற்றி மோடி ஆலோசனை

பாக்தாத், ஜூன். 18–06-2014,
எண்ணை வளம் மிக்க நாடான ஈராக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்க ராணுவம் தொடர்ந்து அங்கு முகாமிட்டுள்ள நிலையில் ஷியா பிரிவு முஸ்லிம் ஆட்சி நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். இதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற படைப்பிரிவை தொடங்கி இருக்கிறார்கள்.
நாள் தோறும் அங்கு தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தி வந்தனர். அதில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக சக்தி வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் சண்டையில் குதித்து உள்ளனர். இதனால் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.

தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகரங்களை தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். முக்கிய நகரங்களான திக்ரித்,
                                                                                                    மேலும், . . .

தேர்தல் தோல்வியை கண்டு திமுக துவண்டு விடவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூன். 18–06-2014

தியாகராய நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஏழுமலை மகன் கார்த்திக் என்ற சஞ்சீவ் குமார்–காயத்ரி திருமணம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

‘‘பகுதி செயலாளர் ஏழுமலை எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர். பொது மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர். 3 முறை மாமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். சென்னை மேயராக நான் பணியாற்றிய போது பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க என்னுடன் துணை நின்றவர்.
நான் துணை முதல்– அமைச்சராக இருந்து பணியாற்றியதை விட சென்னை மேயராக இருந்து பணியாற்றிய பணிகளை இன்றைக்கும் மக்கள் பாராட்டுகின்றனர்.
                                                                                        மேலும், . . .

Tuesday 17 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-06-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

தி.மு.க.வில் இருந்து விலகல் நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருவாரா?

சென்னை, ஜூன். 17–06-2014,

நடிகை குஷ்பு தி.மு.க.வின் முன்னணி பேச்சாளராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு குஷ்பு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்த அவர், கடைசி நேரத்தில் பிரசார களத்துக்கு அனுப்பப்பட்டார். அதிருப்தியான மனநிலையில் கட்சிக்குள் வலம் வந்த குஷ்பு நேற்று திடீரென்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.

அவர் கருணாநிதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் ‘என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை தி.மு.க.வில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க முடியாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே கனத்த இதயத்துடன் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.வை விட்டு விலகிய குஷ்பு பா.ஜனதாவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
                                                                                                      மேலும், . . . . 


ஐந்து யானைகளை கொன்ற வேட்டைக்காரனை தேடும் கர்நாடக வனத்துறையினர்

மாதேஸ்வரன் மலை, ஜூன் 17-06-2014,
ஐந்து யானைகளை கொன்ற வேட்டைக்காரனை கர்நாடக வனத்துறையினர் இருபது பேர், ஒரே ஒரு துப்பாக்கியை மட்டும் வைத்துக்கொண்டு தேடி வருகின்றனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளேகால் வனத்துறையினர், காட்டில் மிருகங்களை வேட்டையாடும் சரவணன் என்ற வேட்டைக்காரனை பிடிக்க முடிவு செய்து 20
                                                                                                             மேலும், . . . .

ஆப்கானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக உள்ளார்


காபூல், ஜூன் 17–06-2014,
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம்குமார். பாதிரியார் ஆன இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2–ந்தேதி இவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். எனவே, அவரை உடனடியாக மீட்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
                                                                                                 மேலும், . . . 

மின்சாரம் குறித்து கருத்து ராமதாசுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் கண்டனம்


சென்னை, ஜூன் 17–06-2014,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
”மகன் நலம்“ ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு, “மக்கள் நலம்” ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதல்–அமைச்சர் அம்மாவிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
இருப்பினும், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக முதல்–அமைச்சர் அம்மா எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
முதலாவதாக, 660 மெகா வாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக டாக்டர் ராமதாசு தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல் கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன.
                                                                                                 மேலும், . . . .

Monday 16 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-06-2014) மாலை, IST-  04.00 மணி, நிலவரப்படி,

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்–வேலைக்காரி கைது


சென்னை, ஜூன், 16–06-2014,
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 63), டாக்டர். தனது இளைய மகள் ரோகிணி பிரியாவுடன் வசித்து வந்த இவர் திருப்போரூரில் உள்ள சொந்த நிலத்தை விற்பதற்காக கடந்த 12–ந் தேதி தனது காரில் சென்றார்.
சென்னை நொளம்பூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி காரை ஓட்டினார். மல்லிகா வீட்டு வேலைக்கார பெண்ணும், கார்த்தியின் கள்ளக்காதலியுமான சத்யாவும் உடன் சென்றார்.
நள்ளிரவு வரை மல்லிகா வீடு திரும்பவில்லை. உடன் சென்ற டிரைவர் கார்த்தி, வேலைக்காரி சத்யா ஆகியோரும் மாயமாகி இருந்தனர். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து டாக்டர் மல்லிகாவை தேடி வந்தனர்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மல்லிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரிய வந்தது. டிரைவர் கார்த்தியும், அவரது கள்ளக்காதலி சத்யாவும் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்லிகா அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள், அவர் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
                                                                                      மேலும், . . . 

1,700 ராணுவத்தினருக்கு மரண தண்டனை; ஈராக்கில் சன்னி பயங்கரவாதிகள் திடுக்

பாக்தாத், 16-06-2014,
ஈராக்கில் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. சமீபத்தில் கடத்தி சென்ற 1700 ராணுவ வீரர்களை கொத்து, கொத்தாகக சுட்டு கொன்றதாக இந்த பயங்கரவாத அமைப்பினர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும், ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஷாகி நகர் மொசூல், திக்ரித், ஜலாலா, சாதியா, ஆகியன தற்போது பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
                                                                                                                மேலும், . . . .

ஒப்பந்தங்களை உதாசினப்படுத்தும் இலங்கை பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்காக அத்துமீறுவது யார்?

மதுரை, 16-06-2014,
கடலில் மீன்பிடிப்பு தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்கள் ஐந்து முறை பேசியும் தீர்வு ஏற்படவில்லை. மத்தியில் ஆட்சி மாறியும் கடலில் தத்தளிக்கும் மீனவர்களின் கண்ணீர் அலை ஓயவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனைப்படி பாக் ஜலசந்தியில் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடையே எழுந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இலங்கை கடற்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டுகிறது. பல ஆயிரம் பேர் குண்டு பாய்ந்தும், ஆயுத தாக்குதலிலும் சிக்கியும் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். படகுகள், வலைகள் சூறையாடல் சம்பவங்கள் எண்ணில் அடங்காது. இந்த துயரங்கள் 1983க்கு பிந்தைய 30 ஆண்டுகளில் நடந்த கண்ணீர் நினைவலைகள்.
இரு நாட்டு மீனவர்களிடையே இணக்கமான சூழலை உருவாக்க 2004, 2010, 2011ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஆண்டில் சென்னையிலும், கடைசியாக இலங்கையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. 5 முறை பேசியும் தீர்வு எட்டவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடி பிரதமர் பதவி ஏற்புக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து சென்றதும், குறைந்தபட்சம் இரு நாட்டு மீனவர் பிரச்னையில் விமோசனம் பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் ம¦து தாக்கும் கொடூரம் ஓய்ந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் என்ன, தீர்வுக்கு வழி என்ன என்பது குறித்து மீனவ பிரதிநிதிகளிடம் திரட்டிய தகவல்கள் வருமாறு:பாக் ஜலசந்தி உலகளவில் வரலாற்று சிறப்பு மிகுந்தது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும், இலங்கைக்கும் நடுவில் பாக் ஜலசந்தி அமைந்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள மீன் வளம் நிறைந்த பால்கன் பகுதிக்கு நிகரானது. சுறா, திமிங்கலம், பறக்கும் மீன்கள் உள்ளிட்ட 1,336 மீன் வகைகள் வசிக்கின்றன. பவளப்பாறைகளும் நிறைந்துள்ளன. பாக் ஜலசந்தியில்தான் கச்சத்தீவு உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு இருந்த கச்சத்தீவை, 1974ல் இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்து கொடுத்தது. அப்போது இருநாட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் “தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கலாம். இதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை‘‘ என குறிப்பிடப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் மீன் வளம் நிறைந்து இருப்பதால், தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதாக கூறுவது சட்டப்படி தவறு. பாக் ஜலசந்தி கடலின் தூரம் 140 நாட்டிக்கல் மைல்.
                                                                                                            மேலும், . . . . .

பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு விமான நிலைய தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய தீவிரவாதி பலி
இஸ்லாமாபாத், ஜூன் 16–06-2014,
கராச்சி விமான நிலைய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய தீவிரவாதி குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 37 பேரும் உயிரிழந்தனர்.
                                                                                                        மேலும், . . . .

Sunday 15 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-06-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

சொத்து பத்திரம்–நகைக்காக சென்னை பெண் டாக்டரை கொன்ற கார் டிரைவர்

வில்லிவாக்கம், ஜூன். 15–06-2014,
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியில் வசித்தவர் டாக்டர் மல்லிகா (63). ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மத்திய அரசு ஆஸ்பத்திரியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
மகள் ரோகிணி பிரியாவுடன் முகப்பேரில் வசித்து வந்தார். ரோகிணி பிரியா சென்னையில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிகிறார். மூத்த மகள் ஹரிணி அமெரிக்காவில் இருக்கிறார்.
மல்லிகாவுக்கு சொந்தமான நிலம் திருப்போரூர் பகுதியில் உள்ளது. அதனை விற்க திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஒரு நபரை சந்தித்து பேச முடிவு செய்து இருந்தார்.
கடந்த 12–ந்தேதி காலை தனது காரில் நிலம் விற்பனை தொடர்பாக அந்த நபரை சந்தித்து பேச புறப்பட்டார். அவருடன் வேலைக்காரி சத்யாவும் சென்றார்.
                                                                                       மேலும், . . . .

மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். மையத்தில் காவலாளி படுகொலை

திருப்போரூர், ஜூன்.15–06-2014,
மாமல்லபுரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கிருஷ்ணன்காரணை கிராமம் உள்ளது. இங்கு கிழக்கு கடற்கரை சாலையையொட்டி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அதனுடன் இணைந்த ஏ.டி.எம். மையமும் உள்ளது. இங்கு முருகன் (வயது 54) இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு முருகன் ஏ.டி.எம். மையத்தில் பணியில் இருந்தார். இரவு 12 மணியானதும் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை இழுத்து பூட்டி விட்டு வாசல் அருகில் தூங்கினார். ஏ.டி.எம். சாவியை தலையணையின் அடியில் வைத்திருந்தார்.
நள்ளிரவில் திடீரென்று கொள்ளையர்கள் சிலர் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தின் சாவியை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்தார்.
                                                                                              மேலும், . . . .

முன்னாள் காதலருக்கு எதிராக புகார் பூகம்பத்தை கிளப்பிய பிரீத்தி ஜிந்தா

மும்பை, ஜூன், 15–06-2014,
குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்... எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள்.
பஞ்சாப் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விடும்போதும் மைதானத்தில் இருக்கும் கேமராக்கள் அதனை படம் பிடிக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பிரீத்தியின் பக்கம் திரும்பி அவரது உணர்ச்சிகரமான துள்ளல் கொண்டாட்டங்களை பதிவு செய்ய தவறுவ தில்லை.
அந்த அளவுக்கு ஐ.பி.எல். சீசனில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தவிர்க்க முடியாத உற்சாக நட்சத்திரமாகவே வலம் வந்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா.
தற்போது நடந்து முடிந்துள்ள 7–வது ஐ.பி.எல். சீசனில் பஞ்சாப் அணியின், ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது.
                                                                                                  மேலும், . . . . 

எழும்பூரில் பெண் டாக்டர் கொலை: கொலையாளியை தேடும் தனிப்படை

சென்னை, ஜூன், 15–06-2014,
எழும்பூர் பி.வி.செரியன் சாலையில் 8 மாடி குடியிருப்பு உள்ளது. 8–வது மாடியில் உள்ள தனிவீட்டில் குடியிருந்த மூதாட்டி எம்மா (83). மனோ தத்துவ நிபுணர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது இங்கு வசித்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆக வில்லை. ஒரு சகோதரர், 3 சகோதரிகள் உள்ளனர். இவரது சகோதரர் ஸ்டான்லி இதே குடியிருப்பில் 7–வது மாடியில் வசிக்கிறார். 2 தங்கைகள் அமெரிக்காவிலும், ஒருவர் கேரளாவிலும் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு வீட்டு சாப்பாட்டு அறையில் மர்மமான முறையில் எம்மா இறந்து கிடந்தார். கம்ப்யூட்டர் மாயமாகி இருந்தது. நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. உடல் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவர் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள ரகசிய கேமிராவில் சில காட்சிகள் பதிவாகி இருந்தன. போலீசார் அதை ஆய்வு செய்தனர்.
                                                                                                                    மேலும், . . . 

Saturday 14 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-06-2014) மாலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,



பொள்ளாச்சி,ஜூன். 14–06-2014,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் வீரன் (என்கிற) வீராசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

இந்த வாக்குமூலம் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. எழுத்து மூலமாகவும் போலீசார் பதிவு செய்கிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:–

                                                     மேலும், . . . .

நாட்டு நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: பிரதமர் மோடி

பனாஜி, ஜூன் 14-06-2014,

நாட்டு நலனுக்காக அடுத்த ஒரு சில ஆண்டுகளில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பனாஜியில், பா.ஜ.,தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிதிநிலைமையை சீராக்கவும், அடுத்த ஒன்று


                                                     மேலும், . . . .

உக்ரைன் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
49 வீரர்கள் பலி

லுகான்ஸ்க், ஜூன் 14-06-2014,

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பாக அங்கு எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியான கிரிமியா உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பிற்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. அதுபோல் இன்னும் சில கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகரங்களில் லுகான்ஸ்க்-கும் ஒன்றாகும்.

                                                     மேலும், . . . .



                                                                          மேலும், . . . 

Thursday 12 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம்

சென்னை, 12-06-2014,
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஜூன் 2-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
                                                                                        மேலும், . . . . 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண கோவா அரசியல் தலைவர்கள் பயணம்
பனாஜி, 12-06-2014,
கோவா மாநிலத்தைச் சேர்ந்த 6 அரசியல் தலைவர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண பிரேசில் செல்கின்றனர்.
மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரமேஷ் தவாத்கர், மீன்வளத்துறை மந்திரி அவர்தனோ பர்டாடோ, மின்துறை மந்திரி மிலிந்த் நாயக் உள்ளிட்ட 6 பேர் வரும் 1-ம் தேதி முதல் 10
                                                                                  மேலும், . . . 

சென்னை நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓட்டம்
சென்னை, 12-06-2014,
மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓடிவிட்டார். தனது காதலருடன், அந்த பெண் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமாவில் நடப்பதுபோல, இந்த சம்பவம் அரங்கேறியது.
திடீர் ஓட்டம்
சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. நேற்று இரவில் இருந்த மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டு உறவினர்கள், மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
இன்று காலை 6 மணி அளவில், திடீரென்று, மணப்பெண்ணின் தந்தை பரபரப்புடன் ஒரு அதிர்ச்சி தகவலை, சொன்னார். மணப்பெண் சுஜாதாவை (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணவில்லை என்று ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டார். ஓட்டல் முழுவதும் தேடினார்கள். உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். மணப்பெண் என்ன ஆனார், என்பது தெரியவில்லை.
                                                                                        மேலும், . . . .

இன்றைய செய்திப் புகைப் படங்கள் (12-06-2014)











Wednesday 11 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-06-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தமிழகத்தின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பாராளுமன்றத்தில் பாராட்டிய மோடி

புதுடெல்லி, ஜூன் 11-
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மக்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
மாநிலங்களைப் பொருத்தவரை பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்ள நாங்கள் முயற்சி செய்ய மாட்டோம். கூட்டுறவு முறையிலான கூட்டாட்சியின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
                                                                                                                             மேலும், . . . . .

பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், ஜூன் 11-
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
                                                                               மேலும், . . . .

மோகனாம்பாளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

வேலூர், ஜூன்.11–

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் மோகனாம்பாள். கரகாட்ட கலைஞர். இவர் வாடகைக்கு இருந்த காட்பாடி வீட்டில் இருந்து ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோகனாம்பாள், அவரது அக்காள் நிர்மலா, நிர்மலாவின் மகன் சரவணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் கோர்ட்டில் மோகனாம்பாள், நிர்மலா ஆகிய இருவரும் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு பிரபாகரன் மோகனாம்பாள், நிர்மலா ஆகிய இருவரையும் 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படியும், இன்று (புதன்கிழமை) இருவரையும் காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவுபடி மோகனாம்பாளை போலீசார் வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து அழைத்து வந்து காட்பாடி கோர்ட்டில் இன்று மதியம் ஆஜர்படுத்தினர்.
                                                                                      மேலும் , . . . 

ன்றைய செய்திப் புகைப் படங்கள் (11-06-2014)













                                                                                                    மேலும், . . . .