Saturday 21 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியா வர முடியாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள்

புதுடில்லி, 21-06-2014,

ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா கூறியுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக நகரமான மொசுலை கைப்பற்றிய பயங்கரவாதிகள்,

                                                                மேலும், . . . .

தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை


பண்ருட்டி, 21-06-2014,
பண்ருட்டியில், தலையில் கல்லைபோட்டு புதுச்சேரி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தலைநசுங்கிய நிலையில் பிணம்
புதுச்சேரி மாநிலம், திருபுவனையை சேர்ந்தவர் சத்தியநாதன் (வயது26). ரவுடியான இவர் தனது நண்பர் வில்லியனூரை சேர்ந்த ரஞ்சித்குமாருடன் (28) பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தார்.
இரவில் சத்தியநாதன், ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமாரின் தம்பி பிரவின்குமார் ஆகியோர் அங்கிருந்த காலி இடத்தில் அமர்ந்து மதுகுடித்தனர். இந்த நிலையில், நேற்று காலை தலை நசுங்கிய நிலையில் சத்தியநாதன் பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பஜ்ஜூலுதீன்,
                                                                                                  மேலும், . . . .

கதக் அருகே டிராக்டர்-டிப்பர் லாரி மோதி விபத்து 10 பெண்கள் உள்பட 15 பேர் நசுங்கி சாவு மேலும் 15 பேர் படுகாயம்

எலபுருகா, 21-06-2014,
கதக் அருகே டிராக்டர் மீது டிப்பர் லாரி மோதிய பயங்கர விபத்தில் 10 பெண்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
2 டிராக்டரில் 90 பேர் பயணம்
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், எலபுருகா தாலுகா சித்தையன் கொப்பா கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 90 பேர் இரண்டு டிராக்டரில் ஊப்ளி அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.
பின்னர் நேற்றுமுன்திம் இரவு அவர்கள் அதே டிராக்டர்களில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு டிராக்டரில் 40 பேரும், மற்றொரு டிராக்டரில் 50 பேரும் நின்றபடி பயணம் செய்தனர்.
15 பேர் பலி
அப்போது கதக் மாவட்டம், குல்கோட்டி கிராமம் அருகே வந்தபோது ஒரு டிராக்டர் மீது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது.
                                                                                மேலும், . .. . .

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் ஆக்கிரமித்த ரூ.100 கோடி நிலம் மீட்பு

ஆலந்தூர், ஜூன். 21–06-2014,
தாம்பரம் அருகே உள்ள மாம்பாக்கம் மெயின் ரோட்டில் சித்தாலப் பாக்கம் சந்திப்பில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். அந்த இடத்தில் 86 கடைகள் கட்டப்பட்டிருந்தன.
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருப்பது பற்றி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
                                                                                                     மேலும், . . . .

No comments:

Post a Comment