Friday 20 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சமூக வலைத்தளங்களில் இந்தியை கட்டாயமாக்குவதா? மத்திய அரசுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

சென்னை, ஜூன். 20–06-2014
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 10.3.2014 மற்றும் 27.5.2014 தினங்களில் இரண்டு அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
                                                                                                           மேலும், . . . 

இந்து முன்னணி அலுவலகத்துக்கு 4 மாதத்துக்கு முன்பு 9 பேரை கடத்தப்போவதாக வந்த மிரட்டல் கடிதம்


சென்னை, ஜூன். 20–06-2014
இந்து இயக்க தலைவர்கள் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பேரும் கைது செய்யப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந்தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், ‘‘எனது பெயர் பாட்ஷா. சில தீவிரவாத அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டவன் நான்.
                                                                                                          மேலும், . . . 

இந்தி திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடாக முடியும் வைகோ அறிக்கை
சென்னை, ஜூன் 20-06-2014,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம்தேதி அன்றும், மே மாதம் 27-ம் தேதி அன்றும் அனுப்பிய சுற்று அறிக்கைகளில், இணையதளம், முகநூல், ட்விட்டர், மின் அஞ்சல், உன்குழாய் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், தற்போது ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருவதால், இனிமேல் இந்தி மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதற்கே முதல் இடம் தர வேண்டும் என்றும் அறிவித்து இருப்பது, மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் கருத்துகளைப் பதிவு செய்வதற்குச் சமூக வலைதளங்களையே முழுமையாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், தற்போதைய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கவலை தருகிறது. 1938-ம் ஆண்டில் இருந்தே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகம் தியாகம் நிறைந்த போராட்டங்களை நடத்தி இருக்கின்றது.
                                                                                                          மேலும், . . . 

தீவிரவாதிகளின் எழுச்சி தாக்கு பிடிக்குமா ஈராக்?
வாஷிங்டன், ஜூன் 20-06-2014,
எப்போதுமே யுத்த பூமி! இதுதான் ஈராக்கின் அடையாளம்!
பல ஆண்டுகளாக போரிலேயே சிக்குண்டு சின்னாபின்னமான ஈராக் இப்போது தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருக்கிறது. தீவிரவாதிகள் எந்த நேரத்திலும், முழு ஈராக்கையும் கபளிகரம் செய்யலாம் என்பதுதான் இப்போதைய நிலை.
ஈராக் இன்று மட்டும் அல்ல பல நூற்றாண்டுகளாகவே போர் மேகம் சூழ்ந்த நிலையில்தான் காலத்தை கடத்திச் சென்றுள்ளது.
                                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment