Saturday 28 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

போரூர் அருகே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 40 பேர் சிக்கித் தவிப்பு




சென்னை, 28-06-2014,
சென்னை போரூர் அருகே இன்று 13 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முகலிவாக்கம் பாய்கடை அரசுப்பள்ளியின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வந்த 13 மாடி கட்டிடம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.
                                                                                                                                      மேலும், . . 

ஆட்சியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்துங்கள் எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
சுராஜ்கண்ட், 28-06-2014,
மக்களிடத்தில் சிறந்த முறையில் ஆட்சியை நடத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி புதிய எம்.பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 150 எம்.பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதனை இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில்,
                                                                                                           மேலும், . . .

தேனி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் குத்திக் கொலை


தேனி, 28-06-2014,
தேனி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நடத்தையில் சந்தேகம்
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி தந்தை பெரியார் 2-வது தெருவை சேர்ந்த மாரியப்பராவ் என்பவருடைய மகன் கொடியரசு (வயது 32). ஜோதிடர். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐஸ்வர்யா (10), முத்தரசி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு அருகில் சின்னப்பொண்ணுவின் தந்தை ராஜாராம்ராவ் (56) வசித்து வருகிறார்.
                                                                                                            மேலும், . . . 

ஈராக்கில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 2 போர்க் கப்பல்கள் விரைந்தன
புதுடெல்லி, 28-06-2014,
ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாதிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈராக்கில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே பாதிப்பு இல்லை என்றாலும் சண்டை நடக்கும் பகுதிகளில் சில நூறு இந்தியர்கள் சிக்கிக் கொண்டு உள்ளனர். இதுவரை நாடு திரும்ப விரும்பிய 36 இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஈராக்கை விட்டு வெளியேற விரும்பும் மற்ற இந்தியர்களை மீட்பது தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் அமைச்சரக செயலாளர்
                                                                                                                   மேலும், . . . 

No comments:

Post a Comment