Thursday 26 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இன்றைய முக்கிய செய்திகள் (26-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

குழந்தைகள் காப்பகம்-மகளிர் விடுதிகளுக்கு 37 வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை, ஜூன் 26-06-2014,

தமிழகத்தில் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் விடுதிகள் மறறும் காப்பகங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன்.
எனது தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும்; சிகிச்சைக்குப் பின் அவர்களை அரசு இல்லத்தில் சேர்க்குமாறும்; பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டேன்.
இதனைத் தொடர்ந்து, எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இது குறித்து இன்று (26.6.2014) மீண்டும் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
                                                                                                              மேலும், . . .  

தேசிய நலன் கருதியே முடிவுகளை எடுக்கிறோம்: மோடி


புதுடெல்லி, ஜூன் 26-06-2014,
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பதவியேற்று 100 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகவும், தேசத்துக்காக உழைப்பதால் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
                                                                                                              மேலும், . . .

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்: ஆதாரம் கிடைக்காமல் போலீஸ் திணறல்

மும்பை, ஜூன் 26-06-2014,

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30–ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
                                                                                                                                   மேலும், . . . 

10 இடங்களில் அம்மா மருந்தகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 26-06-2014,
கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (26.6.2014) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்;
                                                                                                     மேலும், . . .

No comments:

Post a Comment