Thursday 12 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம்

சென்னை, 12-06-2014,
தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஜூன் 2-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கடத்தப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
                                                                                        மேலும், . . . . 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண கோவா அரசியல் தலைவர்கள் பயணம்
பனாஜி, 12-06-2014,
கோவா மாநிலத்தைச் சேர்ந்த 6 அரசியல் தலைவர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண பிரேசில் செல்கின்றனர்.
மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரமேஷ் தவாத்கர், மீன்வளத்துறை மந்திரி அவர்தனோ பர்டாடோ, மின்துறை மந்திரி மிலிந்த் நாயக் உள்ளிட்ட 6 பேர் வரும் 1-ம் தேதி முதல் 10
                                                                                  மேலும், . . . 

சென்னை நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓட்டம்
சென்னை, 12-06-2014,
மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓடிவிட்டார். தனது காதலருடன், அந்த பெண் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமாவில் நடப்பதுபோல, இந்த சம்பவம் அரங்கேறியது.
திடீர் ஓட்டம்
சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. நேற்று இரவில் இருந்த மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டு உறவினர்கள், மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
இன்று காலை 6 மணி அளவில், திடீரென்று, மணப்பெண்ணின் தந்தை பரபரப்புடன் ஒரு அதிர்ச்சி தகவலை, சொன்னார். மணப்பெண் சுஜாதாவை (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணவில்லை என்று ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டார். ஓட்டல் முழுவதும் தேடினார்கள். உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். மணப்பெண் என்ன ஆனார், என்பது தெரியவில்லை.
                                                                                        மேலும், . . . .

இன்றைய செய்திப் புகைப் படங்கள் (12-06-2014)











No comments:

Post a Comment