Thursday 5 June 2014

சிறப்பு பக்கம் (06-06-2014)

சிறப்பு பக்கம் (06-06-2014) காலை, IST- 08.30 மணி,நிலவரப்படி,

ஸ்காட் கல்லூரி மாணவர்களுக்கிடையே கடும் மோதல் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி




திருநெல்வேலி, 06-06-2014,
சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியற் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட்ட கடும் மோதலில் 3பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இங்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்லூரி விடுதி மற்றும் வெளியில் வீடு எடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்.இதில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படித்து வருவதால் இங்குள்ள மாணவர்களுக்கும், கேரள மாணவர்களுக்கும் அவ்வப்போது அடிதடி, கைகலப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவங்களை கல்லூரி நிர்வாகமும், காவல் துறையும் மூடி மறைத்து விடுகின்றனர்.இந்நிலையில், நேற்று இரவு கல்லூரி முடிந்து கேரள மாணவர்கள் வைத்தி தெருவில் உள்ள தங்களது வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தனர். இரவு 11.30 மணிக்கு அங்கே வந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் நான்காம் ஆண்டு மாணவர்களை கம்பு, கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், காயமடைந்த மாணவர்களை சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு படுகாய்மடைந்த மாணவர்கள் விஷ்ணு (22), ஜிமினி (22), நிகில் (22) ஆகிய மூன்று மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை விசாரனை நடத்தி அடிதடியில் ஈடுபட்ட மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து ஒளி ஓவியர் அம்பி

No comments:

Post a Comment