Monday 2 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லி பயணம்

சென்னை, 03-06-2014,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) புதுடில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரமதர் மோடியிடம் அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு தில்லி சென்றடைகிறார் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவு 65 ஆயிரம் கிலோ லிட்டர் என்ற அளவில் இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
                                                                                                   மேலும், . . . 

திமுக வேட்பாளர்களுக்கு கருணாநிதி கெடு

சென்னை, 03-06-2014,

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து வரும் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர்களுக்கு அதன் தலைவர் கருணாநிதி கெடு விதித்துள்ளார்.

திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவின் வளர்ச்சியில் அக்கறை உள்ள நடுநிலையாளர்கள் பலர் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைக் கட்சி தலைமைக்கு எழுதி வருகின்றனர்.

கருணாநிதியிடம் அறிக்கை: அந்த கருத்துகளில் உள்ள அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவியாக, தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களும், தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களும் தனித்தனியே தேர்தல் தோல்விக்கான காரணங்களை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு நன்கு சிந்தித்து அறிக்கை தர வேண்டும்.

இந்த அறிக்கையினை ஜூன் 15-ஆம் தேதிக்குள் கருணாநிதியிடம் நேரில் அளிக்க வேண்டும்.
                                                                                       மேலும், . . . 

சென்னை அருகே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது


கோயம்பேடு, 03-06-2014,

மதுரவாயலை சேர்ந்தவர் சரோஜினி. என்ஜினீயரான இவர் எம்.இ. படித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.

அதில் இணைய தள திருமண தகவல் மையம் மூலம் திருக்கோவிலூரை அடுத்த அத்திப்பாக்கத்தை சேர்ந்த அந்தோணி குரூஸ் அறிமுகம் ஆனார். அவர் தான் அனாதை என்றும் சொந்த ஊரில் பார்சல் சர்வீஸ் நடத்துவதாகவும் கூறினார்.

எங்கள் இருவருக்கும் திருவேற்காட்டில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 6 நாட்கள் மட்டும் இருந்தார். சொந்த ஊரில் வேலை இருப்பதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மேலும் பல பெண்களை திருமணம் செய்து இருப்பதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
                                                                                                      மேலும், . . . 

தமிழ்நாடு கவர்னராக ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு?

ஜெய்ப்பூர், 03-06-2014,

பா.ஜ.க.,விலிருந்து வெளியேறிய மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்கிற்கு தமிழ்நாடு கவர்னராக ஆக வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.,வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.,விற்கு திரும்ப திட்டம்

ஜஸ்வந்த்சிங் மீண்டும் பா.ஜ.க.,விற்கு வரும் திட்டம் உள்ளதால் அவருக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜ.க., தரப்பு தயாராகி வருகிறது.
                                                                                                                        மேலும், . . . 

No comments:

Post a Comment