Sunday 25 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவி ஏற்கிறார் 7 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதால் வரலாறு காணாத பாதுகாப்பு
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி, 26-05-2014,

9 கட்டங்களாக நடந்து முடிந்த பாரா ளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

பிரதமராக நரேந்திர மோடி தேர்வு

இந்த வெற்றிக்கு கட்சியை வழிநடத்திய 63 வயதான நரேந்திர மோடி, டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் கடந்த 20-ந் தேதி நடந்த பாராளுமன்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்வானி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து இது குறித்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது ஜனாதிபதி வழக்கத்துக்கு மாறாக பிரதமர், துணை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமே அமர வழங்குகிற தனது வலதுபுற இருக்கையில், மோடியை அமரச்செய்தார்.

இன்று பதவி ஏற்பு

அப்போது நரேந்திர மோடியை பிரதமராக நியமனம் செய்து அதற்கான அதிகாரபூர்வ உத்தரவை வழங்கினார். 26-ந் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடியும், அவரது மந்திரிசபை சகாக்களும் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடக்கிறவிழாவில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி மாளிகை அறிவித்தது.

அதன்படி நரேந்திர மோடி, நாட்டின் 15-வது பிரதமராக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்.
                                                                                 மேலும், . . . 

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட பஸ் கண்டக்டர் பரிதாப சாவு


நெல்லை, 26-05-2014,

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்ட பஸ் கண்டக்டர் 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

பஸ்சில் தகராறு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு கடந்த 20–ந்தேதி மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகனேரியை சேர்ந்த தங்கராஜ் மகன் செல்வா (25) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பஸ், நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்துக்கு வந்தபோது 3 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள், 3 பேரும் நெல்லைக்கு டிக்கெட் எடுத்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிகளிடம் தகராறு செய்தார்கள். இதனால் தாழையூத்து பஸ் நிறுத்தத்தில் 3 வாலிபர்களையும் பஸ்சில் இருந்து கண்டக்டர் செல்வா இறக்கி விட்டார்.
                                                                                       மேலும், . . . 

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடியோன் ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர்


சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு ஊட்டும் மாபெரும் வெற்றியை பெற்ற மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் ஜனநாயகப் பெருமையை உலகம் வியக்க உயர்த்தி உன்னதமான புகழ்ச் சிகரங்களை நோக்கி இந்திய நாட்டை வழி நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையோடு அவரது பதவி ஏற்புக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.

இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று.
                                                                                                    மேலும், . . .  

சாரணர் பயிற்சிக்கு சென்ற தேனி மாணவர் பலி பள்ளி முன்பு உறவினர்கள் 4 மணி நேரம் சாலை மறியல்


தேனி, 26-05-2014,

தேனியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவர் பலியானதை தொடர்ந்து மாணவர் படித்த பள்ளியை அவருடைய உறவினர்கள் முற்றுகையிட்டு 4மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைதிக் கூட்டம் நடத்தி அதன் பிறகு மாணவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளி மாணவர் பலி

தேனி மாவட்டம், உத்தம பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பாபு. இவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சரண் (வயது 13). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20–ந்தேதி பள்ளியில் இருந்து மாணவர் சரண் உள்பட மொத்தம் 21 மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
                                                                                                                மேலும், . . .

No comments:

Post a Comment