Wednesday 14 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க தீவிரம் நரேந்திர மோடி தலைமையில் 20 மத்திய மந்திரிகள் பட்டியல் ரெடி

புதுடெல்லி, 14-05-2014,

ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும். அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும். நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாரதீய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நரேந்திர மோடி இன்று காந்தி நகரில் கட்சி தலைவர் களை சந்தித்து மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். பாரதீய ஜனதா ஆட்சியில் நரேந்திர மோடி தலைமையில் 20 மந்திரிகள் மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
                                                                                      மேலும், . . . .

சென்னையில் கொலை செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் உடல் தோண்டி எடுப்பு துணை நடிகை சுருதி முக்கிய குற்றவாளி : பரபரப்பு தகவல்கள்!

நெல்லை, 14–05-2014,

சினிமா பைனான்சியர் கொலை செய்த புதைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக துணை நடிகை சுருதி இருந்துள்ளார் என்ற பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன.
சினிமா பைனான்சியர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ கொன்ற புதைக்கப்பட்ட சம்பவத்தில் துணை நடிகை சுருதியை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூர் விரைந்துள்ள நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கொன்று புதைக்கப்பட்ட பைனான்சியர் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படும் நடிகை சுருதி சந்திரலேகா இன்னும் ஓரிரு நாளில் போலீசில் சிக்குவார் என்று தெரிகிறது.
                                                                                                              மேலும், . . .  




ராஜபாளையத்தில் கவுன்சிலர் கொலை: வி.சி கட்சி பிரமுகர்கள் 4 பேர் கைது

ராஜபாளையம், 14–05-2014,

ராஜபளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். (வயது 37) இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ராகுல் (14) என்ற மகனும், அட்சயா (12) என்ற மகளும் உள்ளனர்.
மீனாட்சி சுந்தரம் ராஜபாளையம் நகராட்சி 17–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராகவும், எம்.ஜி.ஆர். இளைஞரணி நகர செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்று காலை அவர் இருசக்கர வாகனத்தில் பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த மீனாட்சிசுந்தரம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
                                                                                                    மேலும், . . . .  

முன்னாள் பிரதமரின் பெண் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்


சென்னை, 14–05-2014,

வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன் (60). இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகர் ஆவார்.
நடராஜன் என்பவர் வீட்டில் உஷா சங்கர நாராயணன் வாடகைக்கு இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு நாய்கள் மீது பிரியம். நான்கு தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு பயிற்சி கொடுத்து தன்னுடனேயே வைத்துள்ளார்.

உஷா தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் பாஸ்கரன் என்பவர் மனைவி கலையுடன் வசிக்கிறார். அவர்கள் உயர் ரக நாய் வளர்க்கின்றனர். அந்த நாயை பார்த்து உஷா வளர்க்கும் நாய்கள் குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு மூண்டது. உஷாவை வீட்டில் இருந்து காலி செய்ய வைக்கும்படி உரிமையாளரை வற்புறுத்தினார்களாம்.

உஷா மற்றும் கலை தங்கி இருக்கும் வீடுகளுக்கு அருகில் நடிகை சங்கீதா கணவர் கிரிஷ்சுடன் வசிக்கிறார். இவரும் உஷா வளர்க்கும் நாய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. கலைக்கு ஆதரவாக சங்கீதா வந்தாராம். நடுத்தெருவில் சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்சும் தன்னை தரக் குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக உஷா வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தார்.
                                                                                              மேலும், . . .

No comments:

Post a Comment