Friday 16 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலில் 283 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது


புதுடெல்லி, 17-05-2014,

இந்திய ஜனநாயகத்தின் திருக்கோவில் என்று வர்ணிக்கப்படக்கூடிய பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்தன.

பெரும் எதிர்பார்ப்பு

இந்த தேர்தல் முடிவுகளை நமது நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தன. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 989 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட உடன் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஒரு சில மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை பெற்று வெற்றி முகம் காட்டத்தொடங்கின.

தமிழ்நாடு, புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆரம்பம் முதல் முன்னணி பெற தொடங்கினார்கள்.
                                                                                                          மேலும், . . . . 

40 தொகுதிகளில் போட்டி - 37–ல் வெற்றி அ.தி.மு.க. வரலாற்று சாதனை



சென்னை, 17-05-2014,

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

அ.தி.மு.க. தனித்து போட்டி

இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. துணிச்சலுடன் தனித்து களம் இறங்கியது

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார். அவரது உரையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
                                                                                                 மேலும், . . . 

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுமா? முதல்வர் ஜெயலலிதா பேட்டி



சென்னை, 17-05-2014,

''அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளை, நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நேற்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், 37 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை வகிப்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில், முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
                                                                                              மேலும், . . . 

எம்.ஜி.ஆர்., காலத்தில்கூட, இந்தளவுக்கு அதிக அளவிலான ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றதில்லை



சென்னை, 17-05-2014,

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 44.3 சதவீத ஓட்டுகளுடன், 37 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று உள்ளது. இது, அந்த கட்சிக்கு கிடைத்து உள்ள வரலாறு காணாத வெற்றி. யாராலும் வெல்ல முடியாத, எம்.ஜி.ஆர்., இருந்தபோது கூட, லோக்சபா தேர்தலில், இத்தகைய வெற்றியை அந்த கட்சி பார்த்து இல்லை என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா தலைமையில் இத்தகைய வெற்றி கிடைத்துள்ளது, அவருக்கும், அ.தி.மு.க.,விற்கும், தமிழக அரசியலில் மிகப்பெரிய ஏற்றத்தை தரும் என்ற கருத்து உருவாகி உள்ளது.

சாதனை

அ.தி.மு.க., 1972ம் ஆண்டு, 17ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டது. அது முதல், 11 லோக்சபா தேர்தல்களை, அந்த கட்சி தமிழகத்தில் சந்தித்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தமிழக சட்டசபைக்கு போட்டியிட்டு, எம்.ஜி.ஆர்., பெரும் வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், லோக்சபாவில் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அவர் வெற்றி பெற்றதில்லை.அதுவும், தமிழக அரசியலில், மிகப் பெரிய சக்தியாக பார்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களை சந்தித்தார். அந்த மூன்று தேர்தல்களிலும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டார்.
                                                                                                         மேலும், . . . .

No comments:

Post a Comment