Wednesday 21 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-05-2014) மாலை, IST- 05.00 மணி,நிலவரப்படி,


சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

டமாஸ்கஸ், 21-05-2014,

சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

ட்ருஸ் தனி இனக்குழுவை சேர்ந்த அந்த சிறுவன் பிறக்கும்போது, அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது. அந்த இனத்தை பொறுத்த வரை அவ்வாறு தோன்றும் அடையாளம் முற்பிறவியை குறிக்கும் என்பது ஐதீகமாகும்.
                                                                                                                              மேலும், . . .

நடு ரோட்டில் லாரி தீபிடித்தது - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ஆலங்குளம், 21-05-2014, 

ஆலங்குளம் அருகே சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து கேரள மாநிலம் திருவல்லாவுக்கு புதுச்சேரியைச் சேர்ந்த லாரி 360 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றது. லாரியை கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆட்டிங்கல் என்ற இடத்தைச் சேர்ந்த செசுபாலன் (53) என்பவர் ஓட்டினாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை அருகே லாரியில் இருந்து புகை வந்ததாம்.
                 
                                                                                                 மேலும், . . .  

கம்பம் மரம் சாய்ந்து விழுந்து 5 பேர் உடல் நசுங்கி சாவு மழைக்கு ஒதுங்கி நின்ற போது பரிதாபம்


கம்பம், 21-05-2014,

கம்பம் அருகே ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், மழைக்கு ஒதுங்கி நின்ற 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சூறாவளி காற்றுடன் மழை

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் விநாயகர் கோவில் அருகே பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தின் அருகே சுடுகாட்டில் இறுதி சடங்கிற்கு வருபவர்கள் காத்திருக்கும் வகையில், காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கூடம் பயணிகள் நிழற்குடைபோல் சிமெண்டு கூரையால் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் விவசாய வேலைக்கு வந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலர், ஆலமரம் அருகே உள்ள காத்திருப்போர் கூடத்தில் காத்திருந்தனர்.
                                                                                            மேலும், . . . 

பிரபல ரவுடி வெட்டிக்கொலை

ராஜபாளையம், 21-05-2014,

ராஜபாளையத்தில் பிரபல ரவுடி அழகேந்திரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல ரவுடி

ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலையில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் குற்றாலம் (எ) ராமசாமி என்பவர் மகன் அழகேந்திரன். (வயது 27). பிரபல ரவுடியான இவர் 2007-ம் ஆண்டில்நடந்த வக்கீல் பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்பு உடைய ரமேஷ் என்பவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். மேலும் இவர் மீது வடக்கு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் மாந்தோப்பு குத்தகைக்கு எடுத்து மாங்காய் வியாபாரம் செய்து வந்தார்.
                                                                                                                         மேலும், . . .

No comments:

Post a Comment