Sunday 4 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

மும்பை, 05-05-2014,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்டது

இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறி சென்றனர். இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
ராய்காட் மாவட்டம் நாகோதானே மலை அடிவார பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை கடந்து ரெயில் சென்றது. காலை 9 மணி அளவில் நாகோதானே மற்றும் ரோகா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைவில் சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
                                                                                                                        மேலும், . . . .

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேடுதல் வேட்டை தீவிரம் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள அதிரடி உத்தரவு

சென்னை, 05-05-2014,

மக்களின் உயிரோடு விளையாடும் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும்படி, போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டு வெடிப்பபு

கடந்த மே 1–ந் தேதி அன்று அகில இந்தியாவையே உலுக்கிய ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்தது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் வழியில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் நிற்கும்போது, கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ரெயிலின் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த நாசகார குண்டு வெடிப்பு சம்பவத்தில், ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி பரிதாபமாக உயிரை இழந்தார். 14 பயணிகள் காயம் அடைந்தனர்.

5 மாநிலங்களில் முகாம்

நெஞ்சை பதற வைக்கும் இந்த படுபாதக சம்பவத்தை, அகில இந்தியாவே கண்டித்துள்ளது.
                                                                                                         மேலும், . . . . . 

மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம் 11 தீவிரவாதிகள் கைது, பின்லேடன் உறவினர் திடுக்கிடும் தகவல்

கோலாலம்பூர், 05-05-2014,

மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய விமானம் மாயம்

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை.

திடீர் திருப்பம்

இந்த நிலையில், மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் மாயமானதில், அமெரிக்காவில் நியூயார்க் 110 மாடி உலக வர்த்தக மைய கட்டிடம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது
                                                                                        மேலும், . . . . 
பாராளுமன்றத்துக்கு 8–வது கட்ட தேர்தல் 64 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது

புதுடெல்லி, 05-05-2014,

பாராளுமன்றத்துக்கு 8–வது கட்டமாக நாளை மறுதினம் (புதன்கிழமை) 64 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது.

8–வது கட்ட தேர்தல்

543 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதுவரை 7 கட்டங்களாக 437 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. 8–வது கட்டமாக ஏழு மாநிலங்களில் பரவியுள்ள 64 தொகுதிகளில் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மாநில வாரியாக தேர்தலை சந்திக்கிற தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:–
                                                                                         மேலும் , . . . 

No comments:

Post a Comment