Sunday 18 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி தொலைபேசியில் வாழ்த்து தமிழக அரசுடன் நல்லுறவும் முழு ஒத்துழைப்பும் நிலவும் என்று உறுதி


சென்னை, 19-05-2014,

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது.

ஜெயலலிதா வாழ்த்து

பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
                                                                                                    மேலும், . . . 

தி.மு.க., கோட்டையை அசைத்த அதிகார மையம் கோடநாட்டில் வகுக்கப்பட்ட வியூகம்


ஊட்டி, 19-05-2014,

கோடநாடு எஸ்டேட் பங்களாவை, அதிகார மையமாக வைத்து, ஜெயலலிதா வகுத்த தேர்தல் வியூகம், தி.மு.க.,வின் கோட்டையான நீலகிரியை அசைத்து பார்த்துள்ளது. இது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டசபை தொகுதிகள், தி.மு.க.,வின் செல்வாக்கு மிகுந்த தொகுதிகள். மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகியவை அ.தி.மு.க., செல்வாக்கு பெற்ற தொகுதிகள். இந்த அடிப்படையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வந்தன.
                                                                                                        மேலும்,. . . .

ஸ்டாலின் ராஜினாமாவை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு


சென்னை, 19-05-2014,

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க.வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். ராஜினாமா குறித்து கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலின் கடிதம் அளித்தார். இதற்கிடையே ஸ்டாலின் ராஜினாமாவிற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மு.க. ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார். ஸ்டாலின் பணி கட்சிக்கு தேவை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்கள் தொடர்ந்து மனம் தளராமல் பணி புரிய வலியுறுத்தியுள்ளார். என்று கூறியுள்ளார்.

                                                                                                             மேலும், . . .

தேர்தல் வெற்றி: கோடீஸ்வரர்கள் 442; குற்றப் பின்னணி கொண்டவர்கள் 186 


புதுடில்லி, 19-05-2014,

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் என்பதும், 186 பேர் குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் கல்வித் தகுதி, குற்றப் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்டவை குறித்து தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், தெரிய வந்துள்ள விவரங்கள்:
                                                                                                            மேலும், . . .

No comments:

Post a Comment