Sunday 18 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் ராஜினாமா?

புதுடில்லி, 18-05-2014, 

நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதால், தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, பதவிகளை ராஜினாமா செய்ய, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகனும், கட்சியின் துணைத் தலைவர் ராகுலும் முடிவு செய்துள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோல்விக்கு பொறுப்பு

லோக்சபா தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 206 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள், 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.  நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. நேற்று முன்தினம், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, சோனியாவும், ராகுலும், தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். அப்போது,  அவர்கள் இருவரின் மனநிலையும்,  குரலும்,  உடைந்து காணப்பட்டது.
                                                                                                           மேலும், . . . .

பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்கு


புதுடெல்லி, 18-05-2014,

தேர்தல் ஆணையம் முதல் முறையாக இந்த தேர்தலில் ‘நோட்டா’ என்ற பொத்தானை வாக்களிக்கும் கருவியில் அறிமுகப்படுத்தி இருந்தது. ‘நோட்டா’ என்பதற்கு ‘மேற்காணும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பம் இல்லை’ என்பது அர்த்தம்.

இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் வாக்களித்த, மொத்த வாக்காளர்களில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் (மொத்த ஓட்டில் 1.1 சதவீதம்) நோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். மாநில அளவில் புதுச்சேரியில் 3 சதவீதம் பதிவாகி இருந்தது. இவ்வாறு மற்ற மாநிலங்களில் வாக்கு விவரம் சதவீதத்தில் வருமாறு:–                                             
                                                                               மேலும்,  . . . .


மன்மோகன் சிங் மந்திரிசபை ராஜினாமா பதவி விலகுமுன் நாட்டு மக்களுக்கு உருக்கமான உரை

புதுடெல்லி, 18-05-2014,

மன்மோகன் சிங் மந்திரிசபை ராஜினாமா செய்தது. பதவி விலகுமுன் நாட்டு மக்களுக்கு அவர் உருக்கமாக உரை ஆற்றினார்.

தோல்வியால் விலகல்

நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் அபார வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை 21–ந் தேதி பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு பதவி ஏற்பதற்கு ஏற்ற வகையில், 10 ஆண்டு கால பிரதமர் மன்மோகன் சிங் அரசு 17–ந் தேதி பதவி விலகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
                                                                                                            மேலும், . . .. 

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் பயணம் மோடிக்கு டெல்லியில் அமோக வரவேற்பு 16 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்
புதுடெல்லி, 18-05-2014,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது.

டெல்லியில் மோடி

நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து, பாரதீய ஜனதாவை இந்த அபார வெற்றிக்கு வழிநடத்திய அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன் முதலாக குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு நேற்று சென்றார்.
                                                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment