Sunday 11 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

 இன்று இறுதிக்கட்ட தேர்தல் 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

புதுடெல்லி, 12-05-2014,
 

மக்களவைக்கு 9-ஆவது மற்றும் இறுதிக் கட்டமாக திங்கள்கிழமை (மே 12) தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிகாரில், தேர்தல் நடைபெறும் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி, 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 8 கட்டங்களாக, 502 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் 9-ஆவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலாக, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
                                                                                                     மேலும், . . . . 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம் நீதிபதி கே.டி.தாமஸ் கருத்து

மூணாறு, 12-05-2014,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று கேரள மாநில அரசு மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை

சுப்ரீம் கோர்ட்டில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக வழக்கு நடந்தபோது அணை கேரள மாநில அரசு சார்பில் பிரதிநிதியாக இருந்தவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ். இவர் சமீபத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்றதாக கூறப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் புதிய பெரியாறு அணை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் குழுக்கள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூறியிருப்பதாவது:-
                                                                                             மேலும், . . .

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி லாரி மீது கார் மோதல் கணவருடன், ஐகோர்ட்டு பெண் அதிகாரி பலி மகன்கள் உள்பட 3 பேர் படுகாயம்



விருதுநகர், 12-05-2014,

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் லாரி மீது மோதியது. இதில் கணவன்–மனைவி பலியானார்கள். மகன்கள் உள்பட 3பேர் படுகாயமடைந்தனர்.

ஐகோர்ட்டு உதவியாளர்

சென்னை பாடியில் உள்ள பாடம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஞானதாஸ் (வயது 55). இவர் புரசை வாக்கத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவரது மனைவி எஸ்தர் ஞான சுகிர்தம்(53). சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களது மகன்கள் அபிசேக்(18), அஸ்வின்(14). இவர்கள் அனைவரும் காரில் தங்களது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சென்றனர்.

                                                                                                                                                மேலும், . . .


பயமுறுத்தும் "எல் நினோ'!


பசிபிக் பெருங்கடலில் "எல் நினோ' உருவாகி வருகிறது என்பதும் அதன் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என்பதும் நம்மைக் கவலைப்பட வைக்கிறது. பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடலுக்குள்ளே ஏற்படும் மாற்றங்கள் தெற்காசியாவில் பருவ மாற்றங்களைத் தீர்மானிக்கும் என்பது புவியியல் வல்லுநர்களுக்கும், வானிலை ஆய்வாளர்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைகளை ஒட்டிய பகுதிகளின் ஆழ்கடலில், கீழ்மட்டத்தில் உள்ள நீரின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இப்படி வெப்பம் அதிகரித்து மேல் மட்டத்திலும் நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது ஏற்படுவதுதான் "எல் நினோ' விளைவு. "எல் நினோ' உருவாகும்போது, அது சூல் கொண்ட மேகம் உருவாகாமல் செய்து விடுகிறது.
                                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment