Saturday 3 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நாசவேலை நடத்த சதித்திட்டம் தமிழகத்துக்கு கடல் வழியாக மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை, 04-05-2014,

பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்பு பற்றி விசாரணை

இதில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னா ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குண்டு வெடிப்பிலும், சென்னை சென்டிரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
                                                                                                 மேலும், . . . 

சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன் ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? - கருணாநிதி அறிக்கை

சென்னை, 04-05-2014,

சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தவுடன், ஜெயலலிதா சென்னை வந்து இருக்க வேண்டாமா? என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை குண்டு வெடிப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குண்டுவெடித்தது பற்றியும், அதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
                                                                                                                              மேலும், . . .

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் சாவு குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு

காபூல், 04-05-2014,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டு போனது. குறைந்தது 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். குவியல், குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

நிலச்சரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகியநாடுகளின் எல்லைப்பகுதியில் பதக்ஷான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது.இந்த மாகாணத்தில் உள்ள பரீக் என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு மசூதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
                                                                                                                மேலும், . . . 

3–வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கிடையாது ராகுல்காந்தி அறிவிப்பு

அமேதி, 04-05-2014,

‘‘3–வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு கிடையாது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெறும்’’ என ராகுல்காந்தி அறிவித்தார்.

3–வது அணிக்கு ஆதரவு?

நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைய வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன. ஆனால் அதைத் தவிர்ப்பதற்காக 3–வது அணி அரசு அமைக்க ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கலாம் என அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பிரிதிவிராஜ் சவான், சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போன்றவர்கள் கருத்து வெளியிட்டனர். ஆனால் இதை ராகுல்காந்தி ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகின.

எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது

இந்த நிலையில் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது அமேதி தொகுதியில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதனிடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்,
                                                                                                                            மேலும், . . . 

No comments:

Post a Comment