Tuesday 6 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் ஒளிபரப்புவது சாத்தியமில்லை பிரவீன்குமார்

கோவை, 06-05-2014,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16–ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.
தேர்தல் தொடர்பாக இது வரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16–ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
                                                                                                               மேலும், . . . .

திருச்சி: வக்கீல் கொலையில் கூட்டாளிகள் 3 பேரை பிடித்து தீவிர விசாரணை




திருச்சி, 06-05-2014,

திருச்சி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி ஷகீலா (40). இந்த தம்பதியினருக்கு நிசாந்த் (16) என்ற மகனும், பெருநாளினி (14) என்ற மகளும் உள்ளனர். திருச்சி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்த மதியழகன் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட மேலும் பல தொழில்களும் செய்து வந்தார்.

தினமும் இவர் காலை மற்றும் இரவு நேரங்களில் வாக்கிங் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் தனது வளர்ப்பு நாயுடன் உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரின் அருகே உள்ள குறுகலான சந்தில் மதியழகன் நடைபயிற்சி சென்றார்.
                                                                                                                            மேலும், . .

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் நடமாடுவதாக மிரட்டல்

சென்னை, 06-05-2014,

கடந்த 1–ந்தேதி பெங்களூரில் இருந்து வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று இருந்தபோது குண்டு வெடித்து சுவாதி என்ற இளம்பெண் பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பு சதிகாரர்கள் பற்றி இன்னும் முழுமையாக துப்பு துலங்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டு வெடிப்புக்குப் பின் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளும், அவர்களது உடைமைகளும் கடுமையாக சோதிக்கப்படுகின்றன. பயணச்சீட்டு மற்றும் பிளாட்பார நுழைவுச்
                                                                                                               மேலும், . . . .

கார் குண்டு மூலம் தாக்குதல் எச்சரிக்கை சென்னை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சென்னை, 06-05-2014,

தென் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையொட்டி அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
                                                                                                            மேலும், . . . . .

No comments:

Post a Comment