Friday 2 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-05-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை

புதுடெல்லி, 03-05-2014,

தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் ஆதரவு தரும்

தேர்தலுக்கு பின்பு 3–வது அணியின் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமையும் சூழ்நிலை உருவானால் அப்போது காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் சூழ்நிலை ஏற்படும். மத்தியில் பா.ஜனதா அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பாது. அதனால் மதசார்பற்ற மாற்று அரசை அமைப்பதில் காங்கிரஸ் தனது பங்களிப்பை தரவேண்டிய நிலை வரும்.
எனவே, 1966–ம் ஆண்டு தேவேகவுடாவின் ஆட்சிக்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததுபோல் இப்போதும் தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
                                                                                              மேலும், . . . 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் குண்டு வெடித்து பெண் பலி குண்டு வைத்த சதிகாரர்கள் பற்றி துப்பு துலங்குகிறது 5 மாநிலங்களுக்கு சென்று தனிப்படை போலீஸ் விசாரணை

சென்னை, 03-05-2014,

பெங்களூரில் இருந்து சென்னை வழியாக அசாம் மாநிலம் கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நின்றபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 குண்டு கள் வெடித்தன.

குண்டு வெடித்து பெண் பலி

அந்த ரெயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் இந்த குண்டுகள் வெடித்தன.

இதில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி (வயது 24) என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
                                                                                                          மேலும், . .. 

பெண்ணை வேவு பார்த்ததாக புகார் நரேந்திர மோடி விவகாரத்தை விசாரிக்க 16–ந்தேதிக்கு முன் நீதிபதி நியமனம் உள்துறை மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, 03-05-2014,

குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க நரேந்திர மோடி உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரிப்பதற்காக, 16–ந் தேதிக்கு முன் நீதிபதி நியமிக்கப்படுவார் என மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

வேவு பார்ப்பு?

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்குமாறு கூறியதன் பேரில், மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த அமித் ஷா, இது தொடர்பாக காவல்துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
                                                                                                          மேலும், . . . 

நாங்குநேரி ஜீயர் மரணம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை, 03-05-2014,

நாங்குநேரி ஜீயர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

முக்தி அடைந்தார்

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

                                                                                             மேலும், . . . .

No comments:

Post a Comment