Tuesday 20 May 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-05-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-05-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பதவியேற்பு"ஏழையின் மகனாக நிற்கிறேன்" ஏழைகளுக்கான அரசாக இருக்கும் மோடி கண்ணீர் பேச்சு

புதுடில்லி, 20-05-2014,

இந்திய நாடு எனது தாய் போன்றது என்றும், இந்த தேசத்திற்கான நான் மகனாக இருந்து சேவையாற்றுவேன் என்றும, தான் துவங்கவிருக்கும் பணி குறித்து 'வரும் 2019ல் நான் ரிப்போர்ட் கார்டு கொடுப்பேன்'- என பார்லி., குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி உருக்கமாக பேசினார். வாஜ்பாய் குறித்தும், மக்களுக்கு தாம் ஆற்ற வேண்டிய சேவைகள் குறித்தும் பேசும் போது மோடியின் குரல் உணர்ச்சி காரணமாக தழு, தழுத்தது.
'ஒரு ஏழையின் மகனாக உங்கள் முன் நிற்கிறேன் '- புதிய அரசு ஏழைகளை காக்கும் அரசாக இருக்கும் என மோடி கண்ணீர் விட்டபடி உருக்கமாக பேசினார். இந்நேரத்தில் நா தழு, தழுத்த போது தன்னை நிலைப்படுத்திக்கொள்ள மோடி தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார்.

பா.ஜ., பார்லி., குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், பார்லி., வளாகத்தில் எம்.பி.,க்கள் குழுமியிருந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது;
                                                                                                                            மேலும், . . . 

தேனி: ஏலக்காய் வியாபாரிகளை கத்தியால் குத்தி ரூ.3 லட்சம் கொள்ளை


கம்பம், 20-05-2014,

சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகளான விஜயன், அமீர், நந்தா ஆகிய 3 பேர் தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரிகள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் அங்கு சென்று வியாபாரம் தொடர்பாக அவர்களிடம் பேசினர்.
                                                                                                       மேலும், . . . 

அணையில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி, அணையில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தென்காசி, 20-05-2014,

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கண்ணுப்புளிமெட்டு பகுதியில் உள்ள குன்டாறு அணைப்பகுதியில் மதுரையை சேர்ந்த தொழிற்நுட்ப கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார். மதுரை சின்னகண்மாயி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மோகன்லால் விடுமுறைக்காக நேற்று நண்பர்களுடன் குன்டாறு
                                                                              மேலும், . . .  

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு 100 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

கம்பம், 20–05-2014

கம்பம் பகுதியில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெறகிறது.

கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரசேன் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு, மந்தையம்மன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் ஒரு கார் சந்தேகப்படும்படி சென்றது. காரின் பின்னால் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை மடக்கிப்பிடித்து போலீசார் சோதனை போட்டனர்.

                                                                                                                    மேலும், . . .

No comments:

Post a Comment