Sunday 8 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்பு பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா

விஜயவாடா, 08-06-2014,

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா நடக்கிறது.

சந்திரபாபு நாயுடு

ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகி விட்டது. எஞ்சிய ஆந்திர மாநிலம், ஆந்திரா என்ற பெயரிலேயே நீடிக்கிறது. சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் பதவி ஏற்றார்.

தெலுங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி அங்கு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
                                                                                                          மேலும், . . .  

‘‘தோல்வியை கண்டு துவண்டு போகும் இயக்கம் தி.மு.க. அல்ல’’ மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, 08-06-2014,

‘‘தோல்வியை கண்டு துவண்டு போகும் இயக்கம் தி.மு.க. அல்ல’’ என்று வடசென்னையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்தநாளையொட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் 2,091 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நேற்றிரவு நடைபெற்றது. விழாவுக்கு துறைமுகம் பகுதி செயலாளர் அ.மணிவேலன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஏழை–எளிய, நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவ–மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்.
                                                                                              மேலும், . . . 

பிரிந்து போன தலைவர்களுடன் சமரசம் கெஜ்ரிவால் திடீர் முடிவு

புதுடெல்லி, 08-06-2014,

பிரிந்து போன தலைவர்களுடன் சமரசம் செய்துகொள்ள கெஜ்ரிவால் திடீரென முடிவு எடுத்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் தோல்வி

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் டெல்லி சட்டசபை தேர்தலை சந்தித்து, 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அங்கு ஆட்சியை பிடித்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் 49 நாளில் பதவி விலகி டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சியும் அளித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல், அந்தக்கட்சிக்கு பலத்த அடியாக அமைந்து விட்டது. டெல்லியில் ஒரு தொகுதியில் கூட அந்தக்கட்சியால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
                                                                                              மேலும், . . . 

செம்மரங்கடத்தல்

வாரத்திற்கு, 1.25 லட்சம் ரூபாய் கூலி என்ற புரோக்கர்களின், 'பசப்பு' வார்த்தைக்கு ஆசைப்பட்டு, செம்மரங்களை கடத்த, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு சென்று, போலீசாரிடம் சிக்கி உயிரை இழந்து வருகின்றனர்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டத்தில் தான், இயற்கை வளம் மிகுந்த, ஜவ்வாது மலை உள்ளது. ஆசியாவிலேயே, தரம் மிகுந்த சந்தன மரங்கள் வளரும் பகுதி இது தான். ஜவ்வாது மலையில், 272 கிராமங்கள் உள்ளன. 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரப் பகுதி இது.இங்கு, 25 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் சந்தன மரங்கள் இருந்தன; தற்போது இருப்பது சொற்பமே. ஆந்திர மாநில, சந்தன மரக்கடத்தல் 'மாபியா' கும்பல், இங்குள்ள மலைவாசிகளுக்கு அதிக கூலி கொடுத்து, சந்தன மரங்களை, அதிகளவில் வெட்டிக் கடத்திச் சென்றதே இதற்கு காரணம்.

ஜவ்வாது மலையில், சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவாய் இன்றி தவித்தனர். தொடர்ந்து, இவர்கள் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர். அங்கும் போதிய வருவாய் கிடைக்காததால், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நாட்டு துப்பாக்கி தயாரித்தல் என, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினர்.
                                                                                    மேலும், . . . 

No comments:

Post a Comment