Sunday 22 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

சுவிஸ் நாட்டில் இந்திய கறுப்புபணம் பதுக்கியவர்கள் விவர பட்டியல் ரெடி
பெர்ன், 22-06-2014,
கறுப்பு பணம் மீட்கப்படுமா? இது இந்தியாவிற்கு திரும்ப வந்து சேருமா என்ற நீண்ட கால யூகங்களுக்கு விடை கிடைக்கும் காலம் நெருங்கி விட்டது. சுவிஸ்சில் பணத்தை பதுக்கி உள்ள இந்த பதுக்கல்காரர்கள் விவரத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு கறுப்பு பண மீட்பு விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து பல ஆண்டுகளாக கறுப்பு பண விவகாரம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
                                                                                                                  மேலும், . . . .

மேற்கு ஈராக்கை குறி வைத்த தீவிரவாதிகள் 4 நகரங்களை பிடித்தனர் தீவிரவாதிகள் மோதல்
பாக்தாத், 22-06-2014,
ஈராக்கில் பிரதமர் நூரி அல் மாலிக் தலைமையிலான ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் சன்னி பிரிவு தீவிரவாதிகளும், அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும் கூட்டாக போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர். ஈராக்கின் வடக்கு நகரங்களை கைப்பற்றிய நிலையில், இப்போது அவர்கள் மேற்கு ஈராக்கை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றனர்.
                                                                                   மேலும், . . . .

ஈராக்கில் சிக்கி தவிக்கும் தஞ்சை டிரைவர் பத்திரமாக மீட்க உறவினர்கள் வலியுறுத்தல்

பூதலூர், ஜூன் 22–06-2014,
ஈராக்கில் தஞ்சையை சேர்ந்த டிரைவர் சிக்கி தவிக்கிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈராக்கில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்து வருவதால் உள்நாட்டு போர் மூண்டுள்ளது. ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும், திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும் சிக்கி உள்ளனர்.
                                                                                                      மேலும், . . . 
ரெயில் கட்டண உயர்வு காங்கிரஸ் ஆட்சி எடுத்த முடிவு பொன். ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில், ஜூன். 22–06-2014,
பாரதீய ஜனதா மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட குழுவைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மீனவ கிராம மக்கள் என்னை சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
                                                                                                             மேலும், . . .

No comments:

Post a Comment