Friday 6 June 2014

பிரபல கொலை வழக்குகள் (06-06-2014)

பிரபல கொலை வழக்குகள் (06-06-2014) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

சங்கரன்கோவில் அருகே சகோதரர்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

















திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள உடைப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் காளிராஜ் (45). இவரது தம்பி முருகன் (40), உறவினர் வேணுகோபால் (40).
கோவையில் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த முருகனும், வேணுகோபாலும் சங்கரன்கோவில் அருகே மணலூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஊருக்கு வந்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இருவரும் காளிராஜை பார்ப்பதற்காக உடைப்பன்குளத்துக்குச் சென்றனர். பின்னர், இருவரும் கோவை திரும்புவதற்காக சங்கரன்கோவில் புறப்பட்டனர். அவர்களை வழியனுப்புவதற்காக காளிராஜும் உடன் சென்றார்.
மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். உடைப்பன்குளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி.க்கள் கலிவரதன், வானமாமலை, இன்ஸ்பெக்டர்கள் நவீன், பிரபாகரன் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காரணம் என்ன?
உடப்பன்குளம் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருகிறதாம்.
கடந்த ஜனவரியில் இந்த பிரச்னை முற்றி விரோதமாக மாறியது. அந்தப் பின்னணியில் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment