Friday 6 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

அவைக்கு தயாராக வாருங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

புதுடில்லி, 07-06-2014,

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்பு அதற்குத் தேவையான ஆய்வுகளை நடத்தி தயாராக வருமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 282 எம்.பி.க்களின் பலத்துடன் பாஜக தனிப் பெரும் கட்சியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், மக்களவையில் எம்.பி.க்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, பாஜக எம்.பி.க்களின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மோடி சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அதன் விவரம்:
                                                                                         மேலும், . . . . 
பொற்கோயிலுக்குள் கோஷ்டி மோதல்: வாள்வீச்சில் 12 பேர் காயம் 

அமிருதசரஸ், 07-06-2014,

பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கியர்களின் இருபிரிவினரிடையே வெள்ளிக்கிழமை பயங்கர மோதல் மூண்டது. வாள்கள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமிருதசரஸ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜதீந்தர் சிங் ஒளலாக் கூறியதாவது:

பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கை மேற்கொண்டதன் 30ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அமிருதசரஸ் நகரில் "பந்த்' போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பொற்கோயில் வளாகத்திலுள்ள அகால் தக்த் பகுதியில், அகாலி தள பிரிவு தலைவரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரஞ்ஜித் சிங் மான், அவரது ஆதரவாளர்களுடன் "காலிஸ்தான்' பயங்ரவாத இயக்கத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்.
                                                                                                     மேலும்,  . . . . 

பாரபட்சமின்றி நடப்பேன்: பதவியேற்ற பின் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேச்சு 

புது தில்லி, 07-06-2014,

மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான சுமித்ரா மகாஜன் (72), பாரபட்சமின்றி நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

மக்களவையின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை அவை கூடியது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுமித்ரா மகாஜனை புதிய அவைத் தலைவராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இத்தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் அத்வானி வழிமொழிந்தார்.

சுமித்ரா மகாஜனுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் 13 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
                                                                                                                      மேலும், . . . 

நக்சல்களின் துப்பாக்கி தரம்: பாதுகாப்புபடையினர் அதிர்ச்சி

புதுடில்லி, 07-06-2014,

தலைநகர் புதுடில்லியில் சிறப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏ.கே., 47 ரக துப்பாக்கிகளும் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிகளின் தரம் பாதுகாப்பு படையினரை காட்டிலும் தரம் கூடுதலாக இருப்பதையடுத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் தலைநகர் புதுடில்லியில் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 30 துப்பாக்கிகளமற்றும் அதற்குரிய உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைநகர் புதுடில்லியில் உள்ள யமுனாவிகார் பகுதியை சேர்ந்த பகத்சி்ங் பார்க் சுற்றுப்பகுதியில் சிறப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் முதன்முறையாக கைப்பற்றப்பட்ட ஏ.கே. 47துப்பாக்கிகள்
                                                                                                     மேலும் , . . . 

No comments:

Post a Comment