Tuesday 3 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்





புது தில்லி, 04-06-2014,

புது தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.


காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வித காலதாமதமுமின்றி உடனே அமைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.


ஒரு நாள் பயணமாக தில்லி வந்த ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை சௌத் பிளாக்கில் அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, 65 பக்கங்கள் அடங்கிய மனுவை அவர் நரேந்திர மோடியிடம் அளித்தார். அதில், தமிழக நீர் வளம், இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, தொகுப்புதவித் திட்டம், மின் துறை சார்ந்த நிதித் தேவை, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியுதவி,

                                                                                                                        மேலும், . . . 

கருணாநிதி 91-ஆவது பிறந்த நாள்: ஆளுநர், ரஜினிகாந்த் வாழ்த்து




சென்னை, 04-06-2014,

திமுக தலைவர் கருணாநிதி தனது 91-ஆவது பிறந்த நாளையொட்டி அண்ணா நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார். உடன் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்.

திமுக தலைவர் கருணாநிதி தனது 91-ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார்.

ஆளுநர் கே.ரோசய்யா, நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பல்வேறு தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
                                                                                     மேலும், . . . . 

பெண் என்ஜினீயர், 2 குழந்தைகளை கொலை செய்தது எப்படி?

கோயம்புத்தூர், 04-06-2014,
பெண் என்ஜினீயர், 2 குழந்தைகளை கொலை செய்தது எப்படி? என்று போலீசில் சிக்கிய கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
பரபரப்பு ஏற்படுத்திய 3 கொலைகள்
கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மருதமாணிக்கம் (வயது35). இவர் சங்கனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி வத்சலா தேவி (வயது27). சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு மகிலன் (6), 11 மாதங்கள் ஆன பிரணீத் என்ற குழந்தையும் இருந்தன. இவர்களுடன் மருதமாணிக்கத்தின் தாய் கோவிந்தம்மாளும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை வத்சலாதேவி மற்றும் அவரது 2 குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
                                                                                       மேலும், . . . . 

தில்லியில் கார் விபத்து: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்

புது தில்லி, 04-06-2014,

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியைச் சேர்ந்த கோபிநாத் முண்டே, மக்களவைத் தேர்தலில் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த வாரம் அமைந்த மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக கோபிநாத் முண்டே பதவியேற்றார். அவருக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அவர் போட்டியிட்ட பீட் மக்களவைத் தொகுதியில் முண்டேவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மிகப் பெரிய பேரணிக்கு பாஜகவினர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment