Sunday 29 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (29-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (29-06-2014) மாலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி; முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார்

சென்னை, 29-06-2014,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-23 ராக்கெட் மூலம் நாளை (திங்கட்கிழமை) வெளிநாட்டை சேர்ந்த 5 செயற்கைகோள்கள் அனுப்பப்படுகிறது.
                                                                                                              மேலும், . . .

அதிரும் அடுக்குமாடி வாசிகள் சரியான கலவை-கம்பிகள் பயன்படுத்த வேண்டும்

சென்னை, 29-06-2014,
சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த 11 மாடிகள்... சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் உயிர்கள்... எத்தனை பேர் உயிருடன் மீட்கப்படுவார்கள்? எத்தனை பேர் மாண்டார்களோ...? மீட்பு பணியில் போராடி கொண்டிருக்கிறார்கள் மீட்பு குழுவினர்!
திடீரென்று பேய் மழையில் கொட்டி தீர்த்த மழை தண்ணீரோடு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் கண்ணீரும், செந்நீரும் கலந்தன.
குலுங்கி சரிந்த கட்டிடம் ஒட்டு மொத்த மக்களையும் உலுக்கி விட்டது!
சிங்கார சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வானளாவ உயர்ந்து நிற்கும் பல மாடி குடியிருப்புகள். கண்ணை பறிக்கும் உள் அலங்ககார வேலைப்பாடுகள்...
எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்க வேண்டும். இதுவே பலரது லட்சியக் கனவாக இருக்கிறது.
                                                                                                   மேலும், . . .

தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் புதைக்க அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

விழுப்புரம், ஜூன்.29-06-2014,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2012–13–ல் குறுவை சாகுபடியில்லை. இந்த ஆண்டும் அதற்கான வாய்ப்பில்லை. மேட்டூர் அணையில் 44.26 அடி தண்ணீர்மட்டுமே உள்ளது. கர்நாடகாவில் போதிய அளவில் மழைபெய்து அணைகள் நிரம்பியபோதும் காவிரி நீர்திறக்கவில்லை. 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வறட்சியால் தற்போது 50 ஆயிரம் ஏக்கருக்கும் குறைவாக சாகுபடி இருக்கிறது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.6 ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய தொழிலாளர்களுக்கு ரூ-.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                      மேலும், . . . 

பாகிஸ்தான் மக்களுக்கான விசாவை ரத்து செய்தது இலங்கை


இஸ்லாமாபாத், 29-06-2014,
பாகிஸ்தானியர்களுக்கான உடனடி விசா நடைமுறையை இலைங்கை ரத்து செய்துள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தஞ்சம் கேட்டு வரும் பாகிஸ்தனியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக உயர் அதிகாரி பாகிஸ்தான் வெளியுறவுத் துறையிடம் விளக்கியதாக அந்நாட்டு
                                                                                                              மேலும், . . .

No comments:

Post a Comment