Tuesday 17 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-06-2014) மாலை, IST- 04.00 மணி, நிலவரப்படி,

தி.மு.க.வில் இருந்து விலகல் நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருவாரா?

சென்னை, ஜூன். 17–06-2014,

நடிகை குஷ்பு தி.மு.க.வின் முன்னணி பேச்சாளராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு குஷ்பு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்த அவர், கடைசி நேரத்தில் பிரசார களத்துக்கு அனுப்பப்பட்டார். அதிருப்தியான மனநிலையில் கட்சிக்குள் வலம் வந்த குஷ்பு நேற்று திடீரென்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.

அவர் கருணாநிதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் ‘என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை தி.மு.க.வில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க முடியாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே கனத்த இதயத்துடன் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க.வை விட்டு விலகிய குஷ்பு பா.ஜனதாவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
                                                                                                      மேலும், . . . . 


ஐந்து யானைகளை கொன்ற வேட்டைக்காரனை தேடும் கர்நாடக வனத்துறையினர்

மாதேஸ்வரன் மலை, ஜூன் 17-06-2014,
ஐந்து யானைகளை கொன்ற வேட்டைக்காரனை கர்நாடக வனத்துறையினர் இருபது பேர், ஒரே ஒரு துப்பாக்கியை மட்டும் வைத்துக்கொண்டு தேடி வருகின்றனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளேகால் வனத்துறையினர், காட்டில் மிருகங்களை வேட்டையாடும் சரவணன் என்ற வேட்டைக்காரனை பிடிக்க முடிவு செய்து 20
                                                                                                             மேலும், . . . .

ஆப்கானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக உள்ளார்


காபூல், ஜூன் 17–06-2014,
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பத்திரமாக இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த வாரியன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம்குமார். பாதிரியார் ஆன இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2–ந்தேதி இவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். எனவே, அவரை உடனடியாக மீட்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
                                                                                                 மேலும், . . . 

மின்சாரம் குறித்து கருத்து ராமதாசுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் கண்டனம்


சென்னை, ஜூன் 17–06-2014,
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
”மகன் நலம்“ ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு, “மக்கள் நலம்” ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதல்–அமைச்சர் அம்மாவிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
இருப்பினும், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக முதல்–அமைச்சர் அம்மா எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
முதலாவதாக, 660 மெகா வாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக டாக்டர் ராமதாசு தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல் கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன.
                                                                                                 மேலும், . . . .

No comments:

Post a Comment