Thursday 19 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-06-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

லோக்சபா தேர்தலில் படுதோல்வி எதிரொலி இந்தியை மீண்டும் கையில் எடுக்கிறதா தி.மு.க.?

சென்னை, 19-06-2014

இந்தியை அலுவலக மொழியாக அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியின் துவக்கம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.

இந்த விஷயத்தில் அவர் காட்டியுள்ள கடுமையான போக்கை பார்த்தால், லோக்சபா தேர்தல் தோல்வியை சரிக்கட்டி, கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட இந்தி பிரச்னையை மீண்டும் கையில் எடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
                                                                                                    மேலும், . . . .

இந்தியர்கள் பத்திரம், மீட்பது சாத்தியமில்லாதது - ஈராக் அரசு

புதுடெல்லி/பாக்தாத்,
ஐ.எஸ்.ஐ.எஸ்.யால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பது சாத்தியமில்லாதது என்று ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபயங்கர ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி சண்டையிட்டு வருகின்றனர்.
                                                                              மேலும், . . . . 

சோதனையான காலகட்டங்களிலும் ரஷ்யா இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்துள்ளது ரஷிய துணைப்பிரதமரிடம் மோடி பேச்சு

புதுடெல்லி, 19-06-2014,

இந்தியா வந்துள்ள ரஷிய துணை பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின், நேற்று அதிகாலையில் டெல்லி வந்த அவர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.இந்திய பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய துணை பிரதமர் டிமிட்ரி ஓ ரோகோசின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதாகவும், இந்தியாவுடன் ராணுவரீதியிலான ஒத்துழைப்பை பேண ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புதின் தெரிவித்ததாகவும், ரோகோஜின் மோடியிடம் கூறினார்.
                                                                                                           மேலும், . . . . 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் (19-06-2014)




No comments:

Post a Comment