Tuesday 10 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-06-2014) மாலை, IST-  05.00 மணி, நிலவரப்படி,

பா.ஜனதா அமோக வெற்றி டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் - ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை - தகவல்கள்

புதுடெல்லி, ஜூன் 10-

நடந்து முடிந்த பராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள 7 தொகுதியையும் அக்கட்சி தன்வசப்படுத்தியது. இந்நிலையில் டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.

புதுடெல்லியில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தாலும், கட்சிக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை விட்டு இறங்கியது. வெறும் 8 தொகுதியிலே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
                                                                                               மேலும், . . . . 

கராச்சி விமானநிலைய பாதுகாப்புபடை முகாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்

கராச்சி, ஜூன் 10-

கராச்சி விமானநிலைய பாதுகாப்புபடை முகாமில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவம் கொடுத்த பதிலடியை அடுத்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் உள்ள விமானநிலையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய நேரப்படி 11 மணி அளவில் ராணுவ சீருடை மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கான உடைகள் அணிந்த 20 முதல் 25 வயது கொண்ட தீவிரவாதிகள் 10 பேர் திடீரென்று புகுந்தனர்.
                                                                                          மேலும், . . . .

ங்களுக்கு 44 எம்.பி.க்கள் மட்டும் இருக்கலாம், ஆனால் பாண்டவர்களை, 100 கெளரவர்களால் மிரட்ட முடியாது காங்கிரஸ்

புதுடெல்லி, ஜூன் 10-
எங்களுக்கு 44 எம்.பி.க்கள் மட்டும் இருக்கலாம், ஆனால் பாண்டவர்களை, 100 கெளரவர்களால் மிரட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கூறியுள்ளார்.
                                                                                                          மேலும், . . . .

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் நிதி மந்திரிதான் பொறுப்பு: மைத்ரேயன் பேச்சு

புதுடெல்லி, ஜூன் 10-

மாநிலங்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசியதாவது:-

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மகளிர் மசோதா நிறைவேறாதது ஏன்? தெலுங்கானாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் மகளிர் மசோதாவிற்கு அளிக்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படவேணடும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் நிதி மந்திரியே பொறுப்பு. கடந்த 10 ஆண்டு கால நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
                                                                                 மேலும், . . . 

No comments:

Post a Comment