Thursday 5 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-06-2014) காலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

பிரதமர் அமெரிக்கா செல்வது உறுதியானது மோடியுடன் ஒபாமா, செப்டம்பரில் சந்திப்பு, இரு தரப்பு உறவை வளர்க்க முக்கிய பேச்சுவார்த்தை

சென்னை, 06-06-2014,
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பரில் அமெரிக்கா செல்வது உறுதியானது. அங்கு அவர் ஒபாமாவுடன் இரு தரப்பு உறவை வளர்க்க முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
விசா விவகாரம்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரிய அளவில் இனக்கலவரங்கள் மூண்டன. இந்த இனக்கலவரங்களை முதல்-மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார், இது மனித உரிமை மீறல் என அமெரிக்கா கூறி, சர்ச்சைக்குரிய சர்வதேச மதச்சுதந்திர சட்டத்தின்படி அவருடைய விசாவை 2005-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. அதைப்பற்றி கேள்வி எழுப்பியபோதெல்லாம் அமெரிக்கா, தனது விசா கொள்கையில் மாறுதல் இல்லை என கூறி வந்தது.
திருப்பம்
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிரடி திருப்பம் ஏற்பட்டது. மோடியை கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் சந்தித்து பேசினார்.
                                                                                          மேலும், . . . .

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சிக்கல் உருவாகுமா? நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதால் புதிய சர்ச்சை
போடி, 06-06-2014,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த இடையூறு ஏற்படுத்தும் வகையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு உள்ளதாக தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 18–ம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஏற்பட்ட பஞ்சத்தாலும், வறட்சியாலும் மனித உயிர்கள் உலகை விட்டு கொத்துக், கொத்தாய் மறைந்தன. இந்த பஞ்சத்தை போக்கவும், எதிர்கால சந்ததிகளும் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் தமிழ்நாட்டையும், கேரள மாநிலத்தையும் இணைக்கும் இடமான குமுளியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்து உள்ளது. ஆங்கிலேயர்களின் பொறியியல் தொழில்நுட்பத்தால் 19–ம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையாக முல்லைப் பெரியாறு அணை திகழ்கிறது.
                                                                                                      மேலும், . . . . 

முக்கிய மத்திய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு



ராஜ்நாத் சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜ்நாத் சிங் (62). கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1964ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். மிர்சாபூரில், இயற்பியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றினார்.
1974ஆம் ஆண்டில் ஜனசங்க கட்சிக்கு மிர்சாபூர் பகுதி செயலாளராக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு மிர்சாபூர் மாவட்ட ஜனசங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனையடுத்து 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப் பேரவைக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1983ஆம் ஆண்டு அந்த மாநில பாஜக பொதுச் செயலாளர் பதவியும், பாஜகவின் உத்தரப் பிரதேச இளைஞர் அணித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டன.
1986ஆம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியின் தேசிய பொதுச் செயலாளராகவும், 1988ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1988ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். மாநிலத்தில் கல்யாண் சிங் தலைமையிலான அரசில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
1994ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதை அடுத்து, தேசிய அரசியலில் ராஜ்நாத் சிங் கால்தடம் பதித்தார். மாநிலங்களவையில் பாஜகவின் கொறடாவாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1997ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், 1999இல் மத்திய தரை வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் வரை, அப்பதவியில் நீடித்தார். அவர் இத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் உத்தரப் பிரதேச அரசியலுக்கு அவர் திரும்பிய போதும், 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
                                                                                                               மேலும், . . . .

8 ஆண்டாக கிடப்பில் தமிழக ரயில் திட்டங்கள் பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா?


தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வர வேண்டிய, புதிய ரயில் பாதை திட்டங்கள் அனைத்தும், கிடப்பில் போடப்பட்டு உள்ளன. எட்டு ஆண்டுகளாக, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும், எந்த ஒரு திட்டமும் முழுமையடையவில்லை. வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது, இவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்வே பட்ஜெட்டில்
'புதிய ரயில் பாதைகளை அமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், நடப்பு நிதியாண்டில், 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், அடுத்த நிதியாண்டில், 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் செய்ய, ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது' என, ரயில்வே அமைச்சர், சதானந்த கவுடா சமீபத்தில் தெரிவித்து உள்ளார். ஆனால், 2006 - 2007 முதல், 2013 - 14ம் ஆண்டு வரை, ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, திண்டிவனம் - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, சென்னை - கடலூர், ஈரோடு - பழநி, மதுரை - தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகிய புதிய ரயில் பாதை திட்டங்கள் கிடப்பில் உள்ளன.
* 2006 - 07 பட்ஜெட்டில், திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக, திருவண்ணாமலைக்கு, 70 கி.மீ., தூரத்திற்கு பயணிக்கும் ரயில் பாதைக்கு, 227 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு, குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், நிலம் கையகப்படுத்தும் பணியும் தாமதமாகி உள்ளது. திட்டத்தை முழுமையடைய செய்ய, 165 கோடி ரூபாய் தேவை.
                                                                                          மேலும், . . . . 

No comments:

Post a Comment