Monday 16 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-06-2014) மாலை, IST-  04.00 மணி, நிலவரப்படி,

சென்னை பெண் டாக்டர் கொலை: கார் டிரைவர்–வேலைக்காரி கைது


சென்னை, ஜூன், 16–06-2014,
சென்னை முகப்பேர் ஏரித்திட்டம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 63), டாக்டர். தனது இளைய மகள் ரோகிணி பிரியாவுடன் வசித்து வந்த இவர் திருப்போரூரில் உள்ள சொந்த நிலத்தை விற்பதற்காக கடந்த 12–ந் தேதி தனது காரில் சென்றார்.
சென்னை நொளம்பூரை சேர்ந்த டிரைவர் கார்த்தி காரை ஓட்டினார். மல்லிகா வீட்டு வேலைக்கார பெண்ணும், கார்த்தியின் கள்ளக்காதலியுமான சத்யாவும் உடன் சென்றார்.
நள்ளிரவு வரை மல்லிகா வீடு திரும்பவில்லை. உடன் சென்ற டிரைவர் கார்த்தி, வேலைக்காரி சத்யா ஆகியோரும் மாயமாகி இருந்தனர். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து டாக்டர் மல்லிகாவை தேடி வந்தனர்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மல்லிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரிய வந்தது. டிரைவர் கார்த்தியும், அவரது கள்ளக்காதலி சத்யாவும் சேர்ந்து டாக்டர் மல்லிகாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மல்லிகா அணிந்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகள், அவர் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நிலப்பத்திரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
                                                                                      மேலும், . . . 

1,700 ராணுவத்தினருக்கு மரண தண்டனை; ஈராக்கில் சன்னி பயங்கரவாதிகள் திடுக்

பாக்தாத், 16-06-2014,
ஈராக்கில் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. சமீபத்தில் கடத்தி சென்ற 1700 ராணுவ வீரர்களை கொத்து, கொத்தாகக சுட்டு கொன்றதாக இந்த பயங்கரவாத அமைப்பினர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும், ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஷாகி நகர் மொசூல், திக்ரித், ஜலாலா, சாதியா, ஆகியன தற்போது பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
                                                                                                                மேலும், . . . .

ஒப்பந்தங்களை உதாசினப்படுத்தும் இலங்கை பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பதற்காக அத்துமீறுவது யார்?

மதுரை, 16-06-2014,
கடலில் மீன்பிடிப்பு தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்கள் ஐந்து முறை பேசியும் தீர்வு ஏற்படவில்லை. மத்தியில் ஆட்சி மாறியும் கடலில் தத்தளிக்கும் மீனவர்களின் கண்ணீர் அலை ஓயவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனைப்படி பாக் ஜலசந்தியில் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடையே எழுந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையின் தாக்குதல் தொடர்கிறது. இலங்கை கடற்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 600ஐ தாண்டுகிறது. பல ஆயிரம் பேர் குண்டு பாய்ந்தும், ஆயுத தாக்குதலிலும் சிக்கியும் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். படகுகள், வலைகள் சூறையாடல் சம்பவங்கள் எண்ணில் அடங்காது. இந்த துயரங்கள் 1983க்கு பிந்தைய 30 ஆண்டுகளில் நடந்த கண்ணீர் நினைவலைகள்.
இரு நாட்டு மீனவர்களிடையே இணக்கமான சூழலை உருவாக்க 2004, 2010, 2011ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஆண்டில் சென்னையிலும், கடைசியாக இலங்கையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. 5 முறை பேசியும் தீர்வு எட்டவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடி பிரதமர் பதவி ஏற்புக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து சென்றதும், குறைந்தபட்சம் இரு நாட்டு மீனவர் பிரச்னையில் விமோசனம் பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் ம¦து தாக்கும் கொடூரம் ஓய்ந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணங்கள் என்ன, தீர்வுக்கு வழி என்ன என்பது குறித்து மீனவ பிரதிநிதிகளிடம் திரட்டிய தகவல்கள் வருமாறு:பாக் ஜலசந்தி உலகளவில் வரலாற்று சிறப்பு மிகுந்தது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும், இலங்கைக்கும் நடுவில் பாக் ஜலசந்தி அமைந்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள மீன் வளம் நிறைந்த பால்கன் பகுதிக்கு நிகரானது. சுறா, திமிங்கலம், பறக்கும் மீன்கள் உள்ளிட்ட 1,336 மீன் வகைகள் வசிக்கின்றன. பவளப்பாறைகளும் நிறைந்துள்ளன. பாக் ஜலசந்தியில்தான் கச்சத்தீவு உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டு இருந்த கச்சத்தீவை, 1974ல் இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்து கொடுத்தது. அப்போது இருநாட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் “தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கலாம். இதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை‘‘ என குறிப்பிடப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் மீன் வளம் நிறைந்து இருப்பதால், தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதாக கூறுவது சட்டப்படி தவறு. பாக் ஜலசந்தி கடலின் தூரம் 140 நாட்டிக்கல் மைல்.
                                                                                                            மேலும், . . . . .

பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீச்சு விமான நிலைய தாக்குதலுக்கு திட்டம் தீட்டிய தீவிரவாதி பலி
இஸ்லாமாபாத், ஜூன் 16–06-2014,
கராச்சி விமான நிலைய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய தீவிரவாதி குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 37 பேரும் உயிரிழந்தனர்.
                                                                                                        மேலும், . . . .

No comments:

Post a Comment